Thursday, January 8, 2026


 3. எந்த திருக்குர்ஆனின் வசனங்கள் இந்த படத்திற்கு பொருந்தும்:                                           


 السلام عليكم ورحمة الله وبركاتة

ِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

பதில்:

وَأَوْحَىٰ رَبُّكَ إِلَى ٱلنَّحْلِ أَنِ ٱتَّخِذِى مِنَ ٱلْجِبَالِ بُيُوتًۭا وَمِنَ ٱلشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ  O ثُمَّ كُلِى مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ فَٱسْلُكِى سُبُلَ رَبِّكِ ذُلُلًۭا ۚ يَخْرُجُ مِنۢ بُطُونِهَا شَرَابٌۭ مُّخْتَلِفٌ أَلْوَٰنُهُۥ فِيهِ شِفَآءٌۭ لِّلنَّاسِ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةًۭ لِّقَوْمٍۢ يَتَفَكَّرُونَ   O

 

உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள் (என்றும்), “பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றி லிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சய மாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (16:68 & 69)

அல்லாஹ் குர்ஆனில் தேனீக்களுக்கு ஒரு அத்தியாயத்தை (சூரா அந்-நஹ்ல் -"தேனீ") ஒதுக்கியுள்ளான், ஏனெனில் அவை:


• ஒரு அற்புதமான மற்றும் விந்தையான படைப்பு.• அல்லாஹ்வின் சக்திஞானம் மற்றும் கருணைக்கான ஒரு அத்தாட்சி (ஆயத்).• தன்னலமற்ற சேவைஉறவினை காப்பதுதியாகம் மற்றும் கடினமான சிறந்த உழைப்புக்கான ஒரு முன் மாதிரி.

• கீழ்ப்படிதல்சமநிலை வாழ்க்கை மற்றும் நன்றியுணர்வின் சின்னம்.

• கடின உழைப்புடனும்ரீங்காரத்துடனும் மற்றும் நடனத்துடன் வாழ்க்கையை அழகாக அனுபவிக்கும் அர்ப்பணிக்கும் ஓர் உயிரினம்.
• 
காட்டு தாவரங்கள்விவசாயப் பயிர்களின் மகரந்த சேர்க்கையில்
ஈடுபடும் ஓர் உயிரினம்.
• 
நாம் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்கு தேனீயின் மகரந்தச் சேர்க்கையால் பெறப்படுகிறது.
• 
ஒரு ஒற்றை தேனீ உணவு தேடும் பயணத்தின் போது அது ஒரே இனத்தின் பூக்கள் மீது கவனம் செலுத்துகிறது.  அவைகளின் கால்களில் "மகரந்த கூடைகளில்அதிக அளவு மகரந்தத்தை கொண்டு செல்கிறது.

தேன் கூடு:

• தேன் கூட்டில் -காலனி வளர்ச்சிபராமரிப்புபாதுகாத்தல் மற்றும் தேன் தயாரிப்பு ஆகிய வேலைகளில் ஈடுபடும்  இனப்பெருக்கம் செய்யாத பல வேலைக்கார தேனீக்களும்சில  ஆண் தேனீக்களும் மற்றும்  இனப்பெருக்கம் செய்யும் ஒரு ராணியும் இருக்கும்.
• 
அவை ஒருங்கிணைந்து  தம் தம் வேலைகளை ஒழுங்குற செய்து
காலனியாக செயல்படுகின்றன.
• 
கூட்டிற்குள் இருக்கும் வேலைக்கார தேனீக்கள்தங்களுக்கு பிறக்காத சிறியவைகளை பராமரிக்கின்றன

உணவு:

வேலைக்கார தேனீயாகமற்றும் ஆண்  தேனீயாகமாறும் புழுக்களுக்கு முதல் மூன்று நாட்கள்  அரசஜெல்லி  (வேலைக்கார தேனீயின் தலையில் காணப்படும் சுரப்பியால் சுரக்கப்படும் பால்  போன்ற பொருள்உணவளிக்கப்படுகிறதுபின்னர் அவர்களுக்கு மகரந்த ரொட்டி ஊட்டப்படுகிறது.  ராணி தேனீயாக மாறும் புழுக்களுக்கு அதன் வாழ்நாள் முழுவதும் அரச ஜெல்லி உணவளிக்கப்படுகின்றது.

ராணி தேனீக்கள்:

• 
ஒரு கன்னி ராணி கூட்டிலிருந்து பல முறை பறந்துபல ஆண்  தேனீகளுடன் இணைகிறதுஇனச்சேர்க்கைக்குப் பிறகு சிறிது நேரத்தில் ஆண் தேனீ இறந்துவிடும்). பின் ஒரு ராணி தேனீ மற்ற ராணி தேனீக்களை சண்டையிட்டு நீக்கிகூட்டில் தங்கி முட்டையிடும் இயந்திரம் போல வேலை செய்கிறது.
• 
ராணி ஒரு நாளைக்கு 2,000 முதல் 3,000 முட்டைகள் வரை இடும்அதன் தனித்துவமான வாசனை (பெரோமோன்கள்எல்லோரையும் ஒருங்கினைத்து கூட்டைப் பராமரிக்கின்றது.

வேலைக்கார தேனீக்கள்:


• 
வேலைக்கார தேனீக்கள் சுமார் இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை வாழ்கின்றன.
• 
முதலில் அவை தேன்கூட்டு செல்களை தூசிமுடிகள் மற்றும் பூச்சிகளிலிருந்து சுத்தம் செய்து முட்டைகள் அல்லது உணவு சேமிப்பதற்கு தயார்படுத்தி 24/7 கணக்கில் வேலை செய்கின்றன.
• 
பின்னர் கழிவுகளை அகற்றுதல்தேன் பதப்படுத்துதல் மற்றும் புழுக்களூக்கும்ராணிக்கும் உணவளிக்கின்றன.
• 
வயது வந்த தேனீக்கள் இரண்டாவது வாரத்தில் அவற்றின் மெழுகு சுரப்பி செயல்படும்போதுஅவை கூட்டை உருவாக்கி சீர் செய்கின்றன.
• 
இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரைஅவை பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்கின்றன.
• 
மூன்று வாரங்களுக்குப் பிறகுஅவற்றின் மெழுகு சுரப்பிகள் சுருங்கிகூட்டிலிருந்து வெளியேறிமற்ற உறுப்பினற்கு உணவு மற்றும் தண்ணீர் கொண்டுவர தங்கள் வாழ்நாள் முழுவதும் செலவிடுகின்றன.
• 
வயதான தேனீக்கள் திறம்பட மீண்டும் கூட்டு வேலைகளுக்கு திரும்புகின்றன.
• 
தேனீக்கள் தங்கள் இறக்கைகளால் விசிறி விடுவதன் மூலம் கூட்டின் வெப்பநிலையை 92-93 F   பராமரிக்கின்றன!
• 
ஒரு முறை உணவு தேடும் பயணத்தில்ஒரு வேலைக்கார தேனீ 50 முதல் 100 பூக்களில் இருந்து தேன் குடிக்கும்.
• 
தேனீக்கள் சூரியனை ஒரு திசைகாட்டியாகப் பயன்படுத்தி பறக்கின்றனதுருவப் படுத்தப்பட்ட ஒளி மற்றும் புற ஊதா ஒளியில் அவற்றால் கண்டு கொள்ள முடியும்பூமியின் காந்தத்தன்மைக்கு உணர்திறன் கொண்டவை.
• 
உணவு தேடிச் செல்லும்போதுவேலைக்காரத் தேனீக்கள் மணிக்கு 20 மைல்கள் வரை பறக்கும்இதை அடையஅவை வினாடிக்கு 200 முறை இறக்கைகளை அடிக்கின்றனஇதுவே தேனீயின் "ரீங்காரஒலிக்கு காரணமாகிறது.
• 
ஒரு நாளில் வேலைக்காரத் தேனீக்கள் 30 பயணங்களை மேற்கொள்ளும்பொதுவாக அதன் கூட்டிலிருந்து இரண்டு மைல் சுற்றளவிலும்,  உணவு பற்றாக்குறை இருக்கும்போது 5-6 மைல்கள் வரை தொடர்ந்து பறக்கக்கூடும்.
• 
தேன் கொண்ட பூக்கள்கூட்டிற்கு அருகில் இருந்தால் அவை வட்ட நடனமாடி மற்ற தேனீக்களுக்கு அறிவிக்கின்றன.
• 
உணவு 100 மைல்கள் தொலைவில் இருந்தால்உணவு மூலத்தின் இடம்தூரம் மற்றும் அளவைக் குறிக்கும் வகையில் அவை வாகிள் நடனம் ஆடி தெரிவிக்கின்றன.
• 
அதன் 6-8 வார வாழ்க்கையில் ஒற்றை வேலைக்காரத் தேனீ பூமியின் சுற்றளவை விட சுமார் 1.5 மடங்கு உணவு தேடிச் செல்லும் தூரத்தை கடக்கிறது.

தேனீக்கள் தூக்கம்:


•  
எவ்வளவு ஆழமாகஎவ்வளவு நேரம் தூங்குகின்றன என்பது அவற்றின் வயது மற்றும்  செய்யும் வேலையைப்   பொறுத்து மாறுபடும்.

தேன் தயாரித்தல்


• 
உணவு தேடும் தேனீக்கள் தேனை உறிஞ்சி, "தேன் வயிற்றில்சேகரித்துகூட்டிற்கு வந்து வாய் வழியாக வீட்டுத் தேனீக்களுக்கு ஊட்டுகிறதுஅவை நொதி மூலம் எளிய சர்க்கரையாக மாற்றிபின்னர் தேன்கூடு செல்களில் சேமித்துநீர் ஆவியாகும் வரை விசிறிஅடர்த்தியான தேனை உருவாக்கிஇறுதியாக  மெழுகால் அதை மூடுகிறது.

தேன் கூடு:


• 
அறுகோண மெழுகு செல்களால் ஆனது கூடு.  அவை 1) தேனை சேமிக்க; 2) மகரந்தத்தை
தேனீ ரொட்டியாக மாற்றமற்றும் 3) புதிய தேனீக்களை வளர்க்க உபயோகப் படுத்தப் படுகிறது
தேனைப் பிரித்தெடுத்த பிறகுஇத்தேன் கூடு மெழுகுவர்த்திஅழகுசாதனப் பொருட்கள்மருந்து மற்றும் வாசனை திரவியத் தொழிற்களில் பயன்படுத்தப்படுகிறது.  ஷூ பாலிஷ்,  பசைகள்சூயிங் கம்கள் மற்றும் மைகள் போன்றவற்றை தயாரிக்க பயன்படுத்தப் படுகிறது.

தேன்:


• 
தேன் பாக்டீரியா எதிர்ப்புநுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை எதிர்ப்பு திறன் கொண்டதுகாயங்களுக்கு சிகிச்சையளிக்கவும் இது பயன்படுகிறதுதேன் ஒரு இயற்கையான ஈரப்பதமூட்டி மற்றும் மென்மையாக்கும் பொருள்.

தேனீ விஷம்:


வீக்கம் மற்றும் மூட்டு வலிக்கு சிகிச்சையளிக்க தேனீ விஷம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக  பயன்படுத்தப்படுகிறது.


لحمدلله

 

 


 

3.  See the picture and say the two Ayaath of Holy Quran:


 
السلام عليكم ورحمة الله وبركاتة  

 بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

Answer:

وَأَوْحَىٰ رَبُّكَ إِلَى ٱلنَّحْلِ أَنِ ٱتَّخِذِى مِنَ ٱلْجِبَالِ بُيُوتًۭا وَمِنَ ٱلشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ  O ثُمَّ كُلِى مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ فَٱسْلُكِى سُبُلَ رَبِّكِ ذُلُلًۭا ۚ يَخْرُجُ مِنۢ بُطُونِهَا شَرَابٌۭ مُّخْتَلِفٌ أَلْوَٰنُهُۥ فِيهِ شِفَآءٌۭ لِّلنَّاسِ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةًۭ لِّقَوْمٍۢ يَتَفَكَّرُونَ   O  

And your Lord inspired the bees: “Make your homes in the mountains, the trees, and in what people construct, and feed from the flower of any fruit you please and follow the ways your Lord has made easy for you. From their bellies comes forth liquid of varying colours, in which there is healing for people. Surely in this is a sign for those who reflect.” (16:68 & 69).

Allahuthala allotted a chapter (Surah An-Nahl, "The Bee") to honey bees in the Quran because they are:

• A wonderful and miraculous creation.
• A profound sign (Ayath) for Allah's power, wisdom and mercy.
• A model for selfless service, kinship, sacrifice and a hard incredible work.
• Symbol of obedience, balance living and gratitude.
• Without grumbling enjoy life with buzzing and dancing.

About Bees:

Bees are nature's primary pollinators:

• Benefit wild plants, agriculture, by transferring pollens (pollination)
• One third of the food we eat is due to honey bee pollination.
• During a single foraging trip it focus on one species and transport large amounts of pollen in "pollen baskets" on their legs

Colony:

• Colony contains non-reproductive workers, work for colony growth, maintenance, and defense, honey preparation etc., few reproduce drones (males) and a single queen.
• They function as a single, integrated colony with complex behaviors.
• Worker bees within the colony care for offspring that are not their own food..All bee larvae — workers, drones, and queens — are initially fed with royal jelly. (milky substance secreted by a gland found in a worker bee’s head). Workers and drone larvae are fed for three days, while the queen bee larvae are fed in its the entire life.

Queen bees:

• A virgin Queen fly out of hive several times, mate with several drones (which die shortly after mating) and it stays in the colony and work like an egg laying machine
• Queens can lay between 2,000 and 3,000 eggs per day lay an egg every 43 seconds.
• Her colony distinct scent (pheromones) maintains the hive

Worker Bees:


• Worker bees live for about two to four weeks.
• At first they do cleaning the honeycomb cells from dust, hairs and pests and prepare them for eggs or food storage and work 24/7.
• Then move on to waste removal, nectar processing, and feeding the brood.
• When their wax gland becomes active in their second week as adult bees, they build and repair comb.
• From week two to three, they take on guard duties.
• After three weeks, their wax glands shrink, and they move out of the hive, and spend the rest of their lives on foraging for food and water.
• Older honey bees effectively revert back to nursing.
• Bees maintain a temperature of 92-93 F by fanning with their wings Honey bees like caffeine! Studies have shown that caffeine consumption actually improves honey bees’ memory and learning capabilities

Foraging:

• On a single foraging trip, a worker bee will visit between 50 and 100 flowers.
• Bees navigate using the sun as a compass, can see polarized light and UV light, also sensitive to the earth’s magnetism.
• When out foraging, worker bees can fly up to 20 miles per hour. To achieve this, they beat their wings 200 times a second. This is what creates the iconic bee “bzzz” sound.
• During a typical day foraging, worker bees will make 30 trips, usually within a two-mile radius of her hive, but may fly as far as 5-6 miles when food is scarce.
• They communicate with other bees with round dance if honey is near the hive.
• If the food is 100miles away they perform waggle dance indicating location, distance and amount of the food source.
• Single worker bee in its 6-8-week’s life covers a distance of foraging roughly 1.5 times the Earth's circumference.
Honey bees do sleep
• They sleep, how deeply, and for how long depends on their age and role within the hive.

Honey making:

• Nectar is sucked by proboscis of foragers, collected in "honey stomach", passing it to house bees through mouth to mouth, for enzymatic breakdown into simple sugars, then storing and fanning it in honeycomb cells until water evaporates, creating thick honey and  finally capped with wax for storage.

Honey comb:

• Made up of hexagonal wax cells are called comb and have three functions: 1) to store honey; 2) to transform pollen into bee bread; and 3) to raise new bees.
• After extracting honey, it is used in candle industry, cosmetics, pharmaceutical and perfume industry
• Used for preparing shoe polish, furniture etc. for water proofing
• Used in adhesives, chewing gums and inks etc.
Honey:
• Honey is antibacterial, antimicrobial, and anti-inflammatory; it can be used to help treat wounds.
• Honey is a natural humectant and emollient.

Bee venom:  

Bee venom has been used in apitherapy for thousands of years to treat inflammation and joint pain.

لحمدلله

 

2. இந்த படத்திற்கு பொருத்தமான குர்ஆன் வசனத்தை கூறவும்:

 


السلام عليكم ورحمة الله وبركاتة  

 بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

பதில்: சூரா கா'ஃபிர், வசனம் 67. (40:67).


[
هُوَ الَّذِىْ خَلَقَكُمْ  مِّنْ  تُرَابٍ  ثُمَّ  مِنْ  نُّطْفَةٍ  ثُمَّ  مِنْ  عَلَقَةٍ  ثُمَّ  يُخْر ِجُكُمْ  طِفْلًا  ثُمَّ  لِتَبْلُغُوْۤا  اَشُدَّكُمْ  ثُمَّ  لِتَكُوْنُوْا  شُيُوْخًا ؕ وَمِنْكُمْ  مَّنْ  يُّتَوَفّٰى  مِنْ  قَبْل ُ وَلِتَبْلُغُوْۤا  اَجَلً ا مُّسَمًّى  وَّلَعَلَّكُمْ  تَعْقِلُوْنَ‏ [40:67]


"
அவன் தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின் இந்திரியத்தில் இருந்தும் பின் அலக் என்னும் நிலையிலிருந்தும் (உருவாக்கி) உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான்; பின் நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் முதியோராகுகிறீர்கள்; இதற்கு முன்னர் இறந்து விடுவோரும் உங்களில் இருக்கின்றனர் - இன்னும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணையை அடைவீர்கள்; (இதிலிருந்து) நீங்கள் உணர்வு பெறும் பொருட்டு (இதை அறிந்து  கொள்ளுங்கள்).” (40:67).

இதே போல் மற்ற ஒரு வசனம்: "நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். பிறகு, நிச்சயமாக நீங்கள் மரணிப்பவர்களாக இருக்கிறீர்கள். பிறகு, கியாமத் நாளன்று, நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்.” (23:12-16)

நபி (ஸல்) கூறியதாக, அப்துல்லா அவர்கள் விவரித்தார்: "உங்கள் படைப்பைப் பொறுத்த வரை, நீங்கள் ஒவ்வொருவரும் முதல் நாற்பது நாட்களுக்குத் தாயின் வயிற்றில் தோற்றுவிக்கப் படுகிறீர்கள், பின்னர் அடுத்த நாற்பது நாட்களுக்கு ஒரு இரத்தக்கட்டி ஆகிறீர்கள், பின்னர் அடுத்த நாற்பது நாட்களுக்கு ஒரு மாமிச துண்டு போல் வளர்கிறீர். பிறகு உங்களைப்பற்றி நான்கு வார்த்தைகளை எழுத அல்லாஹ் ஒரு தேவதையை அனுப்புகிறான். அவர் உங்களது செயல்கள், இறக்கும் நேரம், வாழ்வாதாரம் மற்றும் வழிமுறைகள், நீங்கள் நல்லவரா கெட்டவரா என எழுதுகிறார். ஆன்மா உங்களது உடலில் செலுத்தப் படுகிறது.

ஒரு மனிதன் (நரக) நெருப்பிற்குச் செல்லும் செயல்களை செய்யலாம், அதனால் அவனுக்கும் அதற்கும் இடையே ஒரு முழ தூரம் மட்டுமே இருக்கும் போது, அந்த தேவதை எவரை நல்லவர் என்று எழுதினாரோ அவர் அதை மிஞ்சுகிறார், பின் அவர் தன் எஞ்சிய வாழ்நாளில், சொர்க்க மக்களின் நற்செயல்களை செய்யத் தொடங்கி சுவர்க்கம் புகுவார். ஒருவர் கெட்டவர் என்று எழுதியிருந்தால் அவர் நல்ல செயல்களை செய்து, அவருக்கும் சுவர்க்கத்திற்கு இடையே ஒரு முழ தூரம் மட்டுமே உள்ளபோது, அந்த தேவதையால் கெட்டவர் என்று எழுதப்பட்டதை மிஞ்சுகிறார். அத்தகையவர் தன் பிந்தைய வாழ்நாளில் (நரக) மக்களின் செயல்களைச் செய்யத் தொடங்கி நரகத்தில் நுழைவார்." அதாவது அவரைப்பற்றி தாயின் வயிற்றில் என்ன எழுதப்பட்டதோ அதன் பிரகாரமே அவர் வாழ்க்கை அமையும்!
 
لحمدلله

Wednesday, January 7, 2026

 

2. Can you find out the ayath related to this picture in the Holy Quran?

السلام عليكم ورحمة الله وبركاتة  

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

Answer: Surah Ghafir, ayath 67. (40:67) Stages of man.

It is He who created you from dust, then from a sperm-drop, then from a clinging clot; then He brings you out as a child; then [He develops you] that you reach your [time of] maturity, then [further] that you become elders. And among you is he who is taken in death before [that], so that you reach a specified term; in order that you may understand.” (40:67)

There is another ayath similar to it. “Verily We created man from a product of wet earth; then placed him as a drop (of seed) in a safe lodging; then We fashioned the drop into a clot, then We fashioned the clot into a little lump, then We fashioned the little lump into bones, then clothed the bones with flesh, and then produced it another creation. So blessed be Allah, the Best of Creators!” After that, surely, you will die.
Then (again), surely, you will be resurrected on the Day of Resurrection.” (23:12-16).

Narrated Abdullah (RA): Allah’s Messenger(SAW)  said: “(As
regards your creation), every one of you is collected in the womb of his mother for the first forty days, and then he becomes a clot for another forty days, and then a piece
of flesh for another forty days. Then Allahuthala sends an angel to write four words: The angel writes his deeds, time of his death, means of his livelihood, and whether he will be wretched or blessed (in the Hereafter). Then the soul is breathed into his body.

So a man may do deeds characteristic of the people of the (Hell) Fire, so much so that there is only the distance of a cubit between him and it, and then what has been written (by the angel) surpasses; and so he starts doing deeds characteristic of the people of Paradise and enters Paradise. Similarly, a person may do deeds characteristic of the people of Paradise, so much so that there is only the distance of a
cubit between him and it, and then what has been written (by the angel) surpasses, and he starts doing deeds of the people of the (Hell) Fire and enters the (Hell) Fire.” (Sahih Al Bukhari, Vol.4, Hadith No.549).

لحمدلله

 

 

1. இங்கு கொடுக்கப்பட்ட படத்திற்கு தொடர்புடைய குர்ஆன் வசனத்தை கூறவும்:

 


السلام عليكم ورحمة الله وبركاتة  

 بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

பதில்:

திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு; கெட்டியான நிறம்; பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்” என்று மூஸா கூறினார்.(அல் பகரா:2:69)

اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ صَفْرَآءُۙ فَاقِعٌ لَّوْنُهَا تَسُرُّ النّٰظِرِيْنَ‏

கொல்லப்பட்ட இஸ்ரவேலரின் கதை:

மூஸா (அலை) காலத்தில், பேராசை கொண்ட ஒரு மருமகன் இரவில் தனது வாரிசு இல்லாத பணக்கார சிறிய தந்தையைக் கொன்று, இறந்த உடலை வேறொருவரின் வாசலில் வைத்து விட்டான். மறுநாள், அவன் தன் வீட்டை விட்டு வெளியே வந்து, யாரோ தன் சிற்றப்பாவைக் கொன்றதாகக் கூறி அழுதான். அவர்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி, தகராறு செய்து, சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.  கொலையாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க மூஸா (அலை) அவர்களிடம் செல்லுமாறு ஒருவர் அறிவுறுத்தினார்.

அல்லாஹ், மூஸா (அலை) அவர்களிடம் ஒரு பசுவை அறுத்து, அந்த பசுவின் உடல் பகுதியால் தாக்கினால், இறந்தவர் எழுந்து கொலையாளி யார் என்று கூறுவான் என்று கட்டளையிட்டார். பனூ இஸ்ரவேலர்கள் எப்போதும் பிடிவாதமாகவும், கீழ்ப்படியாதவர்களாகவும், மூஸா (அலை) மீது அவநம்பிக்கை கொண்டவர்களாகவும், பல கேள்விகளைக் கேட்டார்கள், அதற்கு அவர் பதிலளித்தார். இறுதியாக, "இப்போது நீங்கள் உண்மையைக் கொண்டு வந்தீர்கள்" என்று கூறி, அவர்கள் அதைச் நிறைவேற்றாத நிலையில் இருந்தபோதும் பசுவைத் தேடச் சென்றனர். (2:71).

மஞ்சள் பசுவின் கதை:

இஸ்ரவேலர்கள்,   அவர்களின் அனைத்துத் தேவைகளுடனும் ஒரு பசுவை, அனாதை சிறுவனிடம் கண்டார்கள். அந்த சிறுவனின் தந்தை அதீத பக்திமான். அவரது மரணப் படுக்கையில், அல்லாஹ்விடம் சரணடைந்து, "ஓ அல்லாஹ், என் மனைவி, என் சிறிய மகன் மற்றும் என் ஒரே சொத்தான ஒரு கன்றுக்குட்டியை உன் பராமரிப்பில் ஒப்படைக்கிறேன்" என்று கூறினார். பசுவை அருகிலுள்ள காட்டில் விடும்படி அவர் தனது மனைவியிடம் கேட்டுக் கொண்டார். மனைவியும் அவ்வாறே செய்தார். சிறுவன் சரியான வயதை அடைந்ததும், அவனுடைய தாய் காட்டில் இருந்து அந்த மஞ்சள் பசுவை  கூட்டி வரச் சொன்னாள்.

பனூ இஸ்ரவேலர்கள் பொருத்தமான பசு, இந்த அனாதை சிறுவனிடம் இருக்கக் கண்டு இரண்டு முறை மிகக் குறைந்த விலையில் பேரம் பேசினர். எரிச்சலடைந்த சிறுவன், "என் தாயின் ஒப்புதல் இல்லாமல் நான் பசுவை விற்க மாட்டேன், அதன் தோலை தங்கத்தால் நிரப்பியிருந்தாலும் கூட!" என்று அறிவித்தான். இதைக் கேட்டதும், அவனுடைய தாய், “அதுதான் விலையாக இருக்கட்டும்” என்றாள். இஸ்ரவேல் சந்ததியினர் ஏதோ ஒரு பசுவை அறுப்பதற்கு, கேள்விகள் கேட்டு குறிப்பிட்ட பசுவை தேர்ந்தெடுத்ததற்காக, அதை அதிக விலை கொடுத்து வாங்கும்படி யாகிவிட்டது. அவர்கள் ஒப்புக்கொண்டு, அறுத்து, பசுவின் தோலை தங்கத்தால் நிரப்பி கொடுத்தனர்.

கொல்லப்பட்ட பசுவின் பாகத்தால், இறந்த மனிதனின் மீது தாக்க, அம்மனிதன் அல்லாஹ்வின் கட்டளைப்படி உடனடியாக உயிர்த்தெழுப்பப்பட்டுஉண்மையை வெளிப்படுத்தினான்.  அவன் உடனே மீண்டும் இறந்து போனான்.

 

படிப்பினைகள் :

* அல்லாஹ்வின் மீது வலுவான நம்பிக்கை வைத்திருங்கள்,

* அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அடிபணியுங்கள்,

* அவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்.

* இந்த செயல்களால் அல்லாஹ் உங்கள் வாழ்க்கை எளிதாகும்.

* பக்தியுடன் இருங்கள்,

* உண்மையாக சம்பாதியுங்கள்.

* நீங்கள் இல்லாதபோதும் அல்லாஹ் உங்கள் குடும்பத்தைக் கவனித்துக் கொள்வான்.

* பெரியவர்களுடன் கலந்தாலோசிக்கவும்,

* சரியான நேரத்தில், அல்லாஹ் கூலியைக் கொடுப்பான்.

*  தந்திரமாக மறைக்கப் பட்டிருந்தாலும், அல்லாஹ் உண்மையை வெளிப் படுத்துவான்.

* பல கேள்விகள் கேட்டு அல்லாஹ்வை எரிச்சலூட்டாதீர்கள்.

* அது விஷயங்களை சிக்கலாக்கும்.

* அல்லாஹ்வின் கோபத்தை  சம்பாதிக்காதீர்கள். 

لحمدلله

 

 

1. See the picture and say the ayath in Holy Quran:

    


  السلام عليكم ورحمة الله وبركاتة  

 بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

 Answer: “It is a yellow cow, bright in its colour, pleasing to the observers.’ (2:69).

The story of a killed Israelite:

During the time of Musa (AS) a greedy nephew killed his heirless rich uncle in the night and placed the dead body on some other's door.  The next day, he came out of his house crying, saying that somebody killed his uncle. They were blaming one another, disputing and fighting. As per advise, they went to Musa (AS), to find out who the murderer was. 

Allah instructed Musa (AS) to declare to them, "to slaughter a cow and with that cow’s body part if they strike, the dead man gets up and tell who the murderer was.” The Bani Israel were always stubborn, disobedient, mistrusted Musa (AS) and asked many questions, which he answered. Finally, saying “Now you have brought the truth” they went to get the cow though they were near to not doing it. (2:71).

The story of the yellow cow:

The Children of Israel, went out in search of such a cow.  They found a cow with the orphan boy, with all requirements. This boy’s father was a very pious man. On his death bed, the man surrendered and said, “O Allah, I place my wife, my little son, and my only possession, a calf, in Your care.” He asked his wife to leave the cow into the nearby forest. As the boy reached an appropriate age, her mother asked him to get that yellow cow from the forest.

The Bani Israel found the appropriate cow, they bargained with this orphan boy twice with very low price. The irritated boy declared, “I will not sell the cow without my mother’s approval, even if you offered me its skin filled with gold!” Upon hearing this, his mother said, “Let that be the price.”  The Children of Israel paid a heavy amount because of their choice of the cow, by their unnecessary questions, instead of any cow. They agreed and bought the cow, by filling its skin with gold.

With the part of the slaughtered cow, they stroked it on the dead man. The dead man at once resurrected by Allah’s command and revealed that the truth. Immediately he died again.

The lessons to be leant:

* Have strong faith in Allah,

* Submit to Allah’s Will,

* Obey His commandments.

* By these deeds Allah will make the life easy.

* If pious and earn truthfully,

* Allah will look after your family in your absence.

* Consult with elders.

* At the right time, Allah will give the reward.

* Allah will bring out the truth even if it is hidden tactfully.

* Do not irritate anybody with too many questions.

* Do not earn the anger and wrath of Allah. 

 لحمدلله

 

 

To get the highest status from Allah SWT