Tuesday, October 13, 2026


'துன்பம் வரும் போது மனிதன் எப்படி நடந்து கொள்கின்றான்' என்று குர்ஆனில், அல்லாஹ் என்ன கூறுகின்றான் என உங்களுக்குத் தெரியுமா?

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ


" மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமா னால் அவன் (சாய்ந்தோ) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான், ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோ மானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போல வே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ் வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன." [யூனுஸ், 10:12]

மனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்ல தைக் கேட்பதற்குச்  சோர்வடைவதில்லை. ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமு டைந்து நிராசையுள்ளவனாகின்றான்." (ஃபுஸ்ஸிலத், 41: 49)

"எனினும்அவனைத் தீண்டியிருந்த கெடுதிக்குப் பின் நாம் அவனை நம் ரஹ்மத்தை - கிருபையைச் சுவைக்கச் செய்தால், அவன் "இது எனக்கு உரிய தேயாகும் அன்றியும் (விசாரணைக்குரிய) வேளை ஏற்படுமென நான் நினைக்கவில்லை; நான் என்னு டைய இறைவனிடம் திருப்பி அனுப்பப் பட்டாலும், நிச்சயமாக அவனிடத்தில் எனக்கு நன்மையே கிடைக்கும்" என்று திடமாகச் சொல்கிறான். (ஃபுஸ்ஸி லத், 41:50).

◆ "அன்றியும், மனிதனுக் கு நாம் அருள் புரிந்தால் அவன் (நன்றியுணர்வின் றி) நம்மைப் புறக்கணித் து, விலகிச் செல்கிறான் - ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட பிரார்த்தனை செய்(பவனா)கின்றான். (ஃபுஸ்ஸிலத், 41:51)

◆ " நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங் கினால் அவன் (நன்றி செலுத்தாமல்) புறக்கணித் து(த் தோளை உயர்த்திப்) பெருமை கொள்கிறான்; அவனை (ஏதேனுமொரு) தீங்கு தொடுமானால் அவன் நிராசை கொண்ட வனாகி விடுகிறான்." [அல் இஸ்ரா, 17:83]

◆ மனிதர்களுக்கு (பசி, நோய், வறுமை, பஞ்சம் போன்ற ஏதேனும்) சங்கடம் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி, (அதை நீக்கியருள) அவனிடம் பிரார்த்தனை செய்கிறார் கள்; பிறகு அவன் அவர்களுக்கு தன்னிடமிருந்து ரஹ்மத்தை சுவைக்கச் செய்தால், அவர்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கு இணை வைக்கின் றனர்." ( அர்-ரூம், 30:33).

◆"இன்னும் நாம் மனிதர்களை (நம்) ரஹ்மத்தை ருசிக்கச் செய்தால் அவர் கள் அதைக் கொண்டு மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முன்னரே செய்துள்ளதைக் கொண்டு ஒரு தீங்கு அவர்களுக்கு சம்பவித்து விட்டால் அவர்கள் நிராசைப்பட்டு விடுகிறார்கள்."[அர் ரூம், 30:36]

◆ "இன்னும் மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால், அவன் தன் இறைவன்பால் திரும்பி அவனை அழை (த்துப்பிரார்த்தி)க்கின் றான்; பின்னர் (இறைவன்) தன்னிடமிருந்து ஓர் அருட்கொடையை அவனுக்கு அளித்தானானால், முன்னர் அவன் எதற்காக அவனை அழைத்து(ப் பிரார்த்தித்து)க் கொண்டிருந்தானோ அதை மறந்து விடுகின்றான்." (அஜ் ஜுமர், 39:8)

◆ மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமா னால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக் கிறான்; பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால்; அவன்; "இது எனக்குக்  கொடுக்கப் பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத் தான்!" என்று கூறுகின் றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே! ஆனால் அவர்களில் பெரும் பாலோர் (இதை) அறிய மாட்டார்கள். (அஜ் ஜுமர், 39:49)

◆ இன்னும், கடலில் உங்களை ஏதேனும் துன்பம் தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என்று)  எவற்றை அழைத்துக் கொண்டிருந் தீர்களோ, அவையாவும் மறைந்து விடும்; எனி னும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையள வில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக் கணித்து விடுகிறீர்கள் - இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.(அல் இஸ்ரா, 17:67)

◆ மேலும் அவர்கள் மரக் கலங்களில் ஏறிக் கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க் கத்தில் வழிப்படடவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை (பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங் கால், அவர்கள் (அவனுக்கு) இணை வைக்கின் றனர். (அல் அன்கபூத், 29:65).

ஆகையால் ஓ நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு துன்பம் வரும் போது:

★ மற்ற அருள் வளங்களை  குறைவில்லாமல் கொடுத்தற்காக இறைவனுக்கு நன்றி செலுத் துங்கள்.

★ இத்துன்பத்தை எதிர்த் து நிற்க உங்களுக்கு சக்தி தரும்படி இறைவனிடம் இறைஞ்சுங்கள்.

★  இத்துன்பத்தின் காரணமாக நேர் வழியை விட்டு பிறழாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.

★  பாவமன்னிப்பு கேட்டு முழுமையாக அல்லாஹ் வின் விருப்பத்திற்கு சரணடையுங்கள்.

★ அல்லாஹ் எவரையும் தன் சக்திற்கு மேல்  சோதிக்கமாட்டான் என்பதை அறியுங்கள்.

★ இவ்வுலக வாழ்க்கை நிலையற்றதும், துன்பங் கள் நிறைந்தது என்பதை என்றும் நினைவில் நிறுத்துங்கள்.

★ பொறுமையோடிருந்து அல்லாஹ்விடம் முழு மையான நம்பிக்கையுடன் உங்கள் காரியங்களை ஒப்படைத்து மறுமையில் மாபெரும் வெற்றியை அடையுங்கள்! 

ஆகையால் நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு துன்பம் வரும் போது கீழ் கண்ட அயூப் (அலை) அவர்களின் பிரார்த்தனையும், யூனுஸ் (அலை) அவர்களின்  பிரார்த்தனையையும் தஸ்பீஹ் செய்யுங்கள்:

إِذْ نَادَىٰ رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ

"நிச்சயமாக என்னை துன்பம் தீண்டியிருக்கிறது (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்" (அல்அன்பியா, 21:83)

لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ

"உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்" (அல் அன்பியா, 21:87).

الحمدلله 


 

Do you know what Allah says about the behaviour of man (both believers & disbelievers) while harm touhes him?

السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

 

◆ "When harm touches man, he invokes Us, lying down on his side, or sitting or standing. But when We have removed his harm from him, he passes on his way as if he had never invoked Us for a harm that touched him!" [Yunus, 10:12]

◆  "Man does not get tired of asking good (things from Allah), but if an evil touches him, then he gives up all hope and is lost in despair." (Fussilat, 41: 49)

 ◆  "And truly, if We give him a taste of mercy from us, after some adversity (severe poverty or disease, etc.) has touched him, he is sure to say: "This is for me (due to my merit), I think not that the Hour will be established. But if I am brought back to my Lord, Surely, there will be for me the best (wealth, etc.) with Him. (Fussilat, 41:50).

◆ "When We show favour to man, he withdraws and turns away, but when evil touches him, then he has recourse to long supplications." (Fussilat, 41:51)

 ◆ "And when We bestow Our Grace on man (the disbeliever), he turns away and becomes arrogant, far away from the Right Path. And when evil touches him he is in great despair." [Al-Isra, 17:83]

  ◆  " When harm touches men, they cry sincerely only to their Lord (Allah), turning to Him in repentance, but when He gives them a taste of His Mercy, behold! a party of them associate partners in worship with their Lord. (Ar-Room, 30:33)

 ◆ "And when We cause mankind to taste of mercy, they rejoice therein, but when some evil afflicts them because of (evil deeds and sins) that their (own) hands have sent forth, lo! They are in despair!" [Ar-Room, 30:36]

◆ "And when some hurt touches man, he cries to his Lord (Allah Alone), tur- ning to Him in repentance, but when He bestows a favour upon him from Himself, he forgets that for which he cried for be- fore, and he sets up rivals to Allah, in order to mis- lead others from His Path. (Az-Zumar,  39:8)

◆ "When harm touches man, he calls to Us (for help), then when We have (rescued him from that harm and) changed it into a favour from Us, he says: "Only because of knowledge (that I possess) I obtained it." Nay, it is only a trial, but most of them know not! (Az-Zumar,  39:49).

 ◆ "When distress afflicts you in the sea, away go those whom you call on except He; but when He brings you safe to the land, you turn aside; and man is ever ungrateful." (Isra, 17:67)

 ◆ "When they embark on a ship, they invoke Allah, making their Faith pure for Him only, but when He brings them safely to land, behold, they give a share of their worship to others"  (Al-Ankaboot, 29:65).

So O believers! When the harm touches you:

 ★ be grateful to Allah that still He gives so many other favours.

 ★  turn towards Allah and ask him to give courage to face it.

 ★ pray to Allah so that you may not deviate from straight path during this trial.

 ★  ask forgiveness to Allah and fully surrender to His will.

 ★ know that Allah will not test anybody beyond his capacity.

 ★ stongly believe that the life of this world is transitory and full of trials.

 ★ be patient  & fully trust Allah to get supreme success in the Hereafter.

At these times we can recite Ayub (AS)'s dua & Yunus (AS)'s thasbi:

إِذْ نَادَىٰ رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ

"Verily, distress has seized me, and You are the Most Merciful of all those who show mercy." (Al-Anbiya, 21:83)

لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِين

None has the right to be worshipped but You. Glorified (and Exalted) are You. Truly, I have been of the wrong-doers."

الحمدلله

Monday, October 12, 2026

 

உங்களுக்கு தெரியுமா ஏன் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களைப் பார்த்து, ".... ஒவ்வொருவரும் (மறுமை)நாளுக்காக தான் முன் அனுப்பி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும்....." (59:18) என்று? 

السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ


இவ்வுலகில் (அதாவது இந்த நாளில்) வாழும் போது அல்லாஹ்விற்கு பயப்படுங்கள். உம் கடமையை செவ்வனே செய்வீர். உம்முடைய நன்மைக்காக நல்லதையே செய்து நாளை (அதாவது மறுமை வாழ்விற்காக) அனுப்புவீராக!

உயிர்கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில், நீங்கள் தன்னந்தனியாக,  உங்களை படைத்தவன் முன்,  செயல் குறிப்பேட்டை  தங்கள் கைகளில் பெற்று, உதவியின்றி, தனக்காக  வாதாட எவரு மில்லாமல் நிற்கும் பொழுது, ஒருவனின் நற் செயல்களே அவன் கூட நின்று அவனுக்கு கை கொடுக்கும்.

ஆகையால் அல்லாஹுதாலா இறைநம்பிக்கை யாளரை நோக்கி இவ்வுலகைவிட்டு போவதற்கு முன் நிறைய நன்மைகளை செய்து அனுப்பும் படி கூறியுள்ளார். அப்படிச் செய்ய தவறும் பொழுது அவர் நஷ்டத்திற்கு உள்ளாகிறார். ஏனெனில் அவர் எவ்வளவுதான் கெஞ்சினாலும் மறுவுலகிலிருந்து  திரும்பவும் இந்த உலகிற்கு வரமுடியாது.

இதையே  அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங் களில் நினைவுபடுத்தி உள்ளார்:

ஈமான் கொண்டவர்களே! உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் (அல் மாயிதா, 5:105)

உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அல்லாஹ்விடம் அதை பெற்றுக் கொள்வீர்கள். (அல் பகரா, 2:110).

மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக் கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய். (அல் இன்ஷிகாக், 84:6)

அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி) யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான். (அல் கியாமா, 13)

எவர் ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய் கின்றாரோ அவர்கள் தங்களுக்கே நன்மையைச் சித்தப்படுத்திக் கொள்கிறார்கள்.(அர் ரூம், 44)

நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது, மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல் பகரா, 2:62)"

எவரேனும் நன்மையைக் கொண்டு வந்தால் அவருக்கு அதைவிட மேலானது உண்டு எவன் தீமையை செய்கிறானோ தீமை செய்வோர் அவர்கள்  செய்ததற்குச் சமமான கூலியையே பெறுவார்கள். (அல் கஸஸ், 84)

ஆகையால் எல்லாம் வல்ல அல்லாஹ்வை வணங்க மறக்காதீர்கள். அவ்வாறு மறந்தால் நீங்கள் நற்செயல்கள் செய்வதை மறந்து நஷ்டமடைவீர்கள்.


இப்னு கதிர் தன் விளக்க உரையில் இந்த வசனத்தை குறிப்பிடுகையில் கீழ் கண்ட சம்பவத்தை கூறியள்ளார்:

முந்திர் இப்னு ஜரீர் (ரலி) அவர்கள் தம் தந்தை வழியாக அறிவித்தார்கள்: அதிகாலையில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த போது, சிலர் அங்கே வந்தார்கள். அவர்கள் வெறுங்காலுடனும், ஆடையின்றியும், வரிகளுடை ய கம்பளி ஆடைகளையோ அல்லது மேலங்கிக ளையோ அணிந்து, தங்கள் வாள்களை (கழுத்தில்) தொங்கவிட்டபடி இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர், ஏன், அவர்கள் அனைவரும், முதர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்களை வறுமையில் கண்டபோது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் முகத்தின் நிறம் மாறி யது. பின்னர் அவர் (தம் வீட்டிற்குள்) நுழைந்து வெளியே வந்து பிலால் (ரலி)டம் (அதான் கூறு மாறு) கட்டளையிட்டார். அவர் அதான் மற்றும் இக்மாவை ஓதினார், மேலும் அவர் (புனித நபி) (தம் தோழர்களுடன்) தொழுதார், பின்னர் (அவர் களை நோக்கி) திருக்குர்ஆனின் வசனங்களை ஓதிக் காட்டினார்: "மக்களே! உங்களை ஒரே உயி ரினத்திலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள்" என்பதிலிருந்து, "அல்லாஹ் உங்க ளை எப்போதும் கண்காணிப்பவனாக இருக்கி றான்" என்ற வசனத்தின் இறுதி வரை. (பின்னர் அவர்) ஸூரா ஹஷ்ரின் ஒரு வசனத்தை ஓதினார்: "அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆத்மா வும் மறுமைக்காக எதை அனுப்புகிறது என்பதைப் பற்றி சிந்தித்து அல்லாஹ்வுக்கு அஞ்சட்டும்" (19:18).

(பின்னர் கூடியிருந்தவர்கள் தர்மம் செய்வதில் ஒருவருக்கொருவர் போட்டி போடத் தொடங் கினர்.) சிலர் ஒரு தீனாரையும், மற்றவர்கள் ஒரு திர்ஹமையும், இன்னும் சிலர் ஆடைகளையும், சிலர் ஒரு ஸா கோதுமையையும், சிலர் ஒரு ஸா பேரீச்சையையும் நன்கொடையாக வழங்கினர்; இறுதியில் அவர் (புனித நபி) கூறினார்: "அரை பேரீச்சையாக இருந்தாலும் கொண்டு வாருங்கள்." பின்னர் அன்சாரிகளில் ஒருவர் பணப்பையுடன் அங்கு வந்தார், அதைத் தன் கைகளால் தூக்குவது கடினமாக இருந்தது; உண்மையில், அவரால் (தூக்க) முடியவில்லை. பின்னர் மக்கள் தொடர்ந்து வந்தனர், இறுதியில் நான் உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் அடங்கிய இரண்டு குவியல்களைக் கண்டேன், மேலும் தூதரின் (ஸல்) முகம் (மகிழ்ச்சியின் காரணமாக) தங்கத்தைப் போலப் பிரகாசிப்பதையும் கண்டேன். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ் லாத்தில் ஒரு நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்து பவருக்கு, அந்த நற்செயலுக்காக அவருக்கு நற் கூலி உண்டு; மேலும், அதன்பின் அதன்படி செயல் பட்டவர்களுக்கும் அவர்களின் நற்கூலிகளிலிருந்து எந்தக் குறைவும் இன்றி நற்கூலி உண்டு. இஸ்லாத் தில் ஒரு தீய முன்னுதாரணத்தை ஏற்படுத்துபவ ருக்கு, அதன் சுமை அவர்மீதும், அதன் பின் அதன்படி செயல்பட்டவர்களுக்கும் அவர்களின் சுமை உண்டு; அவர்களின் சுமைகளிலிருந்து எந்தக் குறைவும் இன்றி. [ஸஹீஹ் முஸ்லிம், 1017a. Translated from English version]

அல்லாஹ் தன் நல்லடியார்களை இவ்வாறு பிரார்த் திக்குமாறு திருக் குர்ஆனில் கூறுகின்றான. "என் இறைவா!....... நீ  பொருந்திக்கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! (27:19  & 46:15).

ஓ  இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் மறு மைக்காக நன்மைகள் பல செய்து  அனுப்பிக் கொண்டே இருப்பீராக!

الحمدلله

 

Do you know why Allah asks the believers: "..... let every person look to what he has sent forth for tomorrow......" [Al- Hashr, 59:18]

السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ


While living in this whole worldly life (i.e., today), let a believer fear Allah! Let him do his duty, and send something good for his own sake, for next world (i.e., for tomorrow).

Imagine a scene - on the Day of Resurrection in a gathering of whole mankind, standing in front of his Only Creator, with his/her book of deeds in the hands, helpless, with nobody coming to rescue him.

So Allah Subhanahu wa thala ask the believers to send some good for the Hereafter before they leave this world. If he does not do so, he will be loser. He will be never send back again, to this world, how- ever he pleads.

Allah frequently reminded this in several places of Quran.

v  "O you who believe! Take care of your own selves, and love Allah much (Ai-Maida, 5:105)."

v  "Whatever of good you send forth for yourselves before you, you shall find it with Allah (Al-Baqarah, 2:110)"

v  "O man! Verily, you are returning towards your Lord with your deeds and actions, a sure returning, so you will meet (Al-Inshiqaq, 84:6)"

v  "On that Day man will be informed of what he sent forward, and what he left behind (Al-Qiyama, 75:13)"

v  " Whosoever does righteous good deeds, then such will prepare a good place (in Paradise) for themselves (Ar-Room, 30:44)"

v  "Whoever believes in Allah and the Last Day and do righteous good deeds shall have their reward with their Lord, on them shall be no fear, nor shall they grieve. (Al-Baqarah, 2:62)"

v  "Whoever brings good, he shall have better thereof, and whoever brings evil then, those who do evil deeds will only be requited for what they used to do. (Al-Qasas, 28:84)"

v  So do not forget Allah, the Exalted, otherwise, He will make you forget to per form the good deeds that benefit you in your return to Him.

Ibn Kathier in his tafsir mentioned a hadith related to this ayath:

Mundhir b. Jarir (RA) reported on the authority of his father: While we were in the company of the Messenger of Allah (ﷺ) in the early hours of the morning, some people came there (who) were barefooted, naked, wearing striped woollen clothes, or cloaks, with their swords hung (around their necks). Most of them, nay, all of them, belonged to the tribe of Mudar. The colour of the face of the Messenger of Allah (ﷺ) underwent a change when he saw them in poverty. He then entered (his house) and came out and commanded Bilal (to pronounce Adhan). He pronounced Adhan and Iqima, and he (the Holy Prophet) observed prayer (along with his Companion) and then addressed (them reciting verses of the Holy Qur'an): '" 0 people, fear your Lord, Who created you from a single being" to the end of the verse," Allah is ever a Watcher over you" (iv. 1). (He then recited) a verse of Sura Hashr:" Fear Allah. and let every soul consider that which it sends forth for the morrow and fear Allah"

(Then the audience began to vie with one another in giving charity.) Some donated a dinar, others a dirham, still others clothes, some donated a sa' of wheat, some a sa' of dates; till he (the Holy Prophet) said: (Bring) even if it is half a date. Then a person from among the Ansar came there with a money bag which his hands could scarcely lift; in fact, they could not (lift). Then the people followed continuously, till I saw two heaps of eatables and clothes, and I saw the face of the Messenger (ﷺ) glistening, like gold (on account of joy). The Messenger of Allah (ﷺ) said: He who sets a good precedent in Islam, there is a reward for him for this (act of goodness) and reward of that also who acted according to it subsequently, without any deduction from their rewards; and he who sets in Islam an evil precedent, there is upon him the burden of that, and the burden of him also who acted upon it subsequently, without any deduction from their burden. [Sahih Muslim, 1017a]

Allahuthala guiding us in Quran to pray like this: ‘My Lord! ..........I may do righteous good deeds that will please You .......(27:19 & 46:15).

O believers! Try to send something good every day for your Hereafter!

الحمدلله

Sunday, October 11, 2026

 

"உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது.. (4:79) என அல்லாஹ் குர்ஆனில் ஏன் கூறுகின்றானென உங்களுக்குத் தெரியுமா?

السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ


அல்லாஹ் தன் இரக்கத்தாலும், கருணையாலும் பல அருட்கொடைகளை மனிதனுக்கு அள்ளித்தரு கின்றான். அவனுடைய தாராளமான அருட்கொ டைகள் பல. அவற்றில் சில:

நல்லவிளைச்சலை தரும் நிலம், மிக்க குறைவான விலையில் கிடைக்கும் பொருட்கள், வருட முழுவ தும் மிதமான மழை, உணவு, பழங்கள், மதிப்பு, உற்ற நேரத்தில் உதவி, வெற்றி, நல்ல குடும்பம், பிள்ளைகள், பெற்றோர், நல்ல நண்பர்கள், நல்ல அண்டை வீட்டார், நல்ல ஆட்சியாளர்கள்.

தன் உரிமையாலும், நற்செயல்களாலும் மட்டுமே இந்தஅருட்கொடைகளை ஒரு  மனிதன்  பெற  முடியாது. அவனது அளவற்ற அருட்கொடை களுக்கு முன் நாம் செய்யும் வழி பாடு வெகு சொற்பம். அவனது மன்னிப்பும் நமக்கு கொடுக் கப்போகும் சுவர்க்கமும் அவன் விரும்பி நமக்கு தந்தால் தான் நாம் பெற முடியும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவரு டைய செயலும் அவரைச் சொர்க்கத்தில் நுழைவிப் பதில்லை" என்று கூறக் கேட்டேன். அவர்கள் (நபித் தோழர்கள்), "அல்லாஹ்வின் தூதரே! தாங்க ளுமா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "இல்லை, நானும்தான்; அல்லாஹ் தனது அருளா லும் கருணையாலும் என்னை அரவணைத்துக் கொண்டாலே தவிர (நானும் சொர்க்கம் செல்ல முடியாது). ஆகவே, நீங்கள் நேர்மையாகச் செயல் படுங்கள்; (இலக்கை) நெருங்கிச் செயல்படுங் கள்; உங்களில் எவரும் மரணத்தை விரும்ப வேண்டாம். ஏனெனில், அவர் நன்மை செய்பவ ராயின் (உயிர் வாழ்வதால்) நன்மையை அதிகப் படுத்திக்கொள்ளலாம்; தீமை செய்பவராயின் அவர் (பாவத்திலிருந்து) மீட்சி பெறலாம்" என்று கூறினார்கள். [ஸஹீஹுல் புகாரி, 5673]

அல்லாஹ் தன் அருட்கொடைகளை  தான் விரும்பி யவர்களுக்கு  தாராளமாகவோ அல்லது அளவாக வோ கொடுப்பான். சில சமயங்களில் சோதனை செய்வான் சில சமயங்களில் தண்டிப்பான். அப் படி தண்டிக்கும் பொழுது அவர்களின் பாவங் களை மன்னித்து அவர்களை தூய்மைபடுத்து வான்.

நோய்,  துரதிஷ்டம்,  வறட்சி, பற்றாக்குறை, பொருட்களின் அதிக விலை ஆகியவை, கீழ்படியா மை, வரம்பு மீறுதல், பெருமை, விரும்பத்தகாத காரியங் களை செய்தல், பாவங்கள் செய்தல், கவனக்குறைவு, மறதி ஆகியவையால் மனிதர்கள் துன்பங்களையும், பேரிடர்களையும் சந்திக்க நேரும்.

 

இதையே அல்லாஹ் அல் குர்ஆனில் வெவ்வேறு இடங்களில் கூறுகின்றான்:

"அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல் லாம், அது உங்கள் கரங் கள் சம்பாதித்த (கார ணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான். (அஷ் ஷுர்ரா, 42:30)."

"மனிதர்களை அவர்கள் சம்பாதித்த (தீ) வினைக் காக அல்லாஹ் அவர்க ளை (உடனுக்குடன்) பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் பூமியில் உயிர்ப் பிராணிகள் ஒன்றையுமே விட்டு வைக்க மாட்டான்; ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களைப் (பிடிக்காது) பிற்படுத்து கிறான்; அவர்களுடைய தவணை வந்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாக  இருக்கின்றான். [ஃபாத்திர்,  35:45]."

" மேலுமவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பிடும் பொருட்டுப் பெரிய வேத னையை (மறுமையில் அவர்கள்) அடைவதற்கு முன்னதாகவே (இம்மை யில்) சமீபமான ஒரு வேதனையை அவர்கள் அனுபவிக்கும்படிச் செய்வோம் (அஸ் ஸஜ்தா 32:21)"

" மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச்செ யல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின் (தீமைகளி லிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர் கள் செய்தார்களே (தீவி னைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக் கும்படி அவன் செய்கிறான்" [அர் ரூம், 30:41]

இது போல் துன்பங்கள் வரும் போது அதை எதிர் கொள்ள குர்ஆனில் அல்லாஹ் கீழ்கண்ட வாறு மனிதனுக்கு அறிவுறுத்துகின்றான்:

  ★ ஆகவே, அல்லாஹ்விடமிருந்து எவரும் தடுத்து நிறுத்த முடியாத (அந் தத் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன், நீர் உம் முகத்தை நிலையான மார்க்கத்தில் சரிபடுத்துவீராக!"  [அர் ரூம், 30:43].

★   நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங் கள்; அல்லாஹ் நிச்சயமாக  பொறுமையுடைய வர்களுடன் இருக்கிறான். (அல் பகறா, 2:153).

  ★ (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக அல்லாஹ் வுக்கே நாம் உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறு வார்கள். (அல் பக றா, 2:156)

  ★   ".......அவர்கள் பாவ மன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களை அல்லாஹ் வேதனை செய்பவனாக இல்லை" (அல் அன்ஃ பால், 8:33)

   ★ "......நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு அல்லாஹ்விடம் தவ்பா (செய்து மன்னிப்புக்) கேட்க மாட்டீர்களா?" (அந் நமல், 27:46)

  ★   “ஆகவே, குர்ஆனிலிருந்து உங்களுக்குச் சுலப மான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறை யாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படு வோருக்கு) அல்லாஹ் வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள்,  நன்மைகளில் எவற்றை நீங் கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக் காக) முற்படுத்துகி றீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற் கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றி யும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் அல்லாஹ் நிச்சயமாக மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்” (அல் முஜம்மில், 73:20).

الحمدلله

 

 

Do you know “Whatever of good reaches you, is from Allah, but whatever of evil befalls you, is from yourself...?” [An-Nisa 4:79]

السلام عليكم ورحمة الله وبركاتة 

ِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ


Allah Subhanahu wa tha’la due to His kindness & mercy send many blessings to man. Things that comes out of His favors & His bounty are fertility of land, low prices, rains throughout the year, provision of the food, fruits, honor, help, success, family, children, good parents, good teachers, good friends, good neighbors & good rulers etc. Man cannot claim these blessings as a matter of his right or on the basis of his deeds alone. Our act of worship is very less comparable to His countless blessings. Even His forgiveness & Jannah are due to His bounty.

Narrated Abu Huraira (RA): I heard Allah's Messenger (ﷺ) saying, "The good deeds of any person will not make him enter Paradise." (i.e., None can enter Paradise through his good deeds.) They (the Prophet's companions) said, 'Not even you, O Allah's Messenger (ﷺ)?' He said, "Not even myself, unless Allah bestows His favor and mercy on me." So be moderate in your religious deeds and do the deeds that are within your ability: and none of you should wish for death, for if he is a good doer, he may increase his good deeds, and if he is an evil doer, he may repent to Allah." [Sahih al-Bukhari 5673]

Allah provide His favours to whomsoever, more or less, according to His will. Trials are, to test people. It can be good or bad. Punishments are due to evil deeds. As He punishes, He purifies them & pardons them.

Calamities like illness, misfortune, drought, shortage of things and high prices are the result of necessary consequence of disobedience, misdeeds, pride, negligence, transgression, sins, care- lessness & forgetfulness in performing duties.

Allah says in Quran at several places:

“And whatever of misfortune befalls you, it is because of what your hands have earned. & He pardons much."(Ash-Shura, 42:30).

"And if Allah were to punish men for that which they earned, He would not leave a moving (living) creature on the surface of the earth, but He gives them respite to an appointed term, and when their term comes, then verily, Allah is Ever All Seer of His slaves. " [Al Fatir, 35:45].

"And verily, We will make them taste of the near torment (i.e. the torment in the life of this world, i.e. disasters, calamities, etc.) prior to the supreme torment (in the Hereafter), in order that they may (repent and) return (i.e. accept Islam) (As-Sajda, 32:21)"

"Evil (sins and disobedience of Allah, etc.) has appeared on land and sea because of what the hands of men have earned (by oppression and evil deeds, etc.), that Allah may make them taste a part of that which they have done, in order that they may return (by repenting to Allah, and begging His Pardon). [Ar-Room, 30:41]

During such conditions Allah advices man:

  ★ "So set you (O Muhammad ﷺ) your face to (the obedience of Allah, your Lord) the straight and right religion, before there comes from Allah a Day which none can avert it......" [Ar-Room, 30:43]

  ★    "Who, when afflicted with calamity, say: "Truly! To Allah we belong and truly, to Him we shall return. (Al Baqara, 2:156)"

   ★   "O you who believe! Seek help in patience and As-Salat. Truly! Allah is with As-Sabirin (Al Baqara, 2:153)."

   ★ "......nor will He punish them while they seek (Allah's) Forgiveness (Al-Anfal, 8:33)"

   ★ ".... Why seek you not the Forgiveness of Allah, that you may receive mercy?" An-Naml, 27:46

   ★ "So recite as much of the Quran as may be easy (for you), and perform As- Salat  and give Zakat, and lend to Allah a goodly loan, and whatever good you send before you for yourselves, you will certa- inly find it with Allah, bett- er and greater in reward. And seek Forgiveness of Allah. Verily, Allah is Oft- Forgiving, Most-Merciful. (Al-Muzzammil, 73:20)."

الحمدلله

 

அல்லாஹ்வே எல்லாவற்றிற்கும்

 போதுமானவன்

[كَفٰى بِاللّٰهِ or حَسْبُنَا ٱللَّهُ]  

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ


அல்லாஹ்வின் மிக அழகான பெயர்களில் ஒன்று அல்லாஹுஸ்-ஸமத் என்பதாகும். அதன் பொருள், “தன்னிறைவு பெற்ற எஜமானன், எல்லாப் படைப்புகளுக்கும் தேவைப்படுபவன்” (அல்-இக்லாஸ், [102:2])

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்:

“தம் மக்களால் நெருப்பில் வீசப்பட்டபோது, இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள், "[حَسْبُنَا ٱللَّهُ وَنِعْمَ ٱلْوَكِيلُ] எனக்கு அல்லாஹ்வே போதுமானவன், அவனே காரியங்களைச் செவ்வனே நிறைவேற்றுபவன்".  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் - "எந்த நம்பிக்கையாளர்களிடம் மக்கள், 'நிச்சயமாக மக்கள் உங்களுக்கு எதிராக (ஒரு படையைத் திரட்டியுள்ளனர், எனவே, அவர்களுக்கு அஞ்சுங்கள்' என்று கூறினார்களோ, அது அவர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்தது. மேலும் அவர்கள், 'எங்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன், மேலும் அவனே காரியங்களைச் செவ்வனே நிறைவேற்றுபவன்' என்று கூறினார்கள்." (3:173) [ஸஹீஹ் அல்-புகாரி, 4564].

பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான், “(ஏனெனில் அவர்கள் [حَسْبُنَا ٱللَّهُ وَنِعْمَ ٱلْوَكِيلُ] என்று கூறினார்கள்) “ஆகவே, நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் அருளுடனும் கொடையுடனும் திரும்பினார்கள்; அவர்களுக்கு எந்தத் தீங்கும் நேரவில்லை.” மேலும் அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடினார்கள், மேலும் அல்லாஹ் மகத்தான அருட்கொடையாளன்” (3:174). குர்ஆனின் மற்றொரு வசனத்தில், அல்லாஹ் கூறுகிறான், “மேலும் எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறாரோ, அவருக்கு அவன் ஒரு வழியை உண்டாக்குவான். மேலும் அவர் எதிர்பாராத இடத்திலிருந்து அவருக்கு வழங்குவான். மேலும் எவர் அல்லாஹ்வைச் சார்ந்து இருக்கிறாரோ, அவருக்கு அவனே போதுமானவன்” (65:2 & 3).

இவ்வாறு, நம்பிக்கையாளர்கள் கவலை, பயம், மன அழுத்தம், நியாயமற்ற நடத்தை மற்றும் ஒடுக்குமுறை காலங்களில் இந்த துஆவை [حَسْبُنَا ٱللَّهُ وَنِعْمَ ٱلْوَكِيلُ] சிறந்த துஆவாக ஓதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

நாம் நம்பிக்கை வைப்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்:

அல்லாஹ் தன் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்: "கூறுங்கள், எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்; நம்பிக்கை கொண்டவர்கள் அவன் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும்." [அஸ்-ஸுமர், 39:38]. நிச்சயமாக, உங்களில் இருந்தே (அதாவது, நீங்கள் நன்கு அறிந்தவரான) ஒரு தூதர் [முஹம்மது (ஸல்)] உங்களிடம் வந்துள்ளார். உங்களுக்கு ஏதேனும் காயம் அல்லது சிரமம் ஏற்படுவது அவருக்கு வருத்தமளிக்கிறது. அவர் [(முஹம்மது (ஸல்)] விசுவாசிகள் மீது அக்கறை கொண்டவர், இரக்கம் நிறைந்தவர், கருணையுள்ளவர், மற்றும் இரக்கமுள்ளவர். ஆனால் அவர்கள் புறக்கணித்தால், (முஹம்மதே (ஸல்) அவர்களே!) நீர் கூறுவீராக: "அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். லா இலாஹ இல்லா ஹுவா (அவனைத் தவிர வேறு யாரும் வணங்கப்படத் தகுதியற்றவர்), அவன் மீதே நான் நம்பிக்கை வைக்கிறேன், மேலும் அவனே மகத்தான அர்ஷின் அதிபதி". [அத்-தவ்பா, 9:128 & 129]. 

காரியங்களைச் சிறந்த முறையில் நிறைவேற்றுபவனாக அல்லாஹ் எப்போதும் போதுமானவன்:

மதீனாவின் நயவஞ்சகர்களான அவர்கள் கூறினார்கள்: "நாங்கள் கீழ்ப்படிந்வோம்". எல்லாம் அறிந்த அல்லாஹ் இதை , நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்து ஊக்கப்படுத்தினான், "அவர்கள் உங்களை விட்டுப் பிரிந்து செல்லும்போது, அவர்களில் ஒரு பிரிவினர் நீங்கள் கூறுவதைத் தவிர வேறு திட்டங்களைத் தீட்டுவதில் இரவு முழுவதும் செலவிடுகிறார்கள். ஆனால் அல்லாஹ் அவர்களின் இரவு நேரச் செயல்பாடுகளைப் பதிவு செய்கிறான்." (சதிகள்). எனவே அவர்களிடமிருந்து விலகி இருங்கள் (அவர்களைத் தண்டிக்காதீர்கள்), மேலும் அல்லாஹ் மீது நம்பிக்கை வையுங்கள். மேலும், காரியங்களைச் செவ்வனே நிறைவேற்றுபவனாக அல்லாஹ் எப்போதும் போதுமானவன்” [அன்-நிஸா, 4:81].

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தம். மேலும், காரியங்களை நிர்வகிப்பவனாக அல்லாஹ்வே போதுமானவன். [அன்-நிஸா, 4:130]

பாவிகளையும் நல்லவர்களையும் நன்கு அறிய அல்லாஹ் போதுமானவன்:

நூஹ் (ரலி) அவர்களுக்குப் பிறகு எத்தனை தலைமுறைகளை நாம் அழித்திருக்கிறோம்! மேலும், தன் அடியார்களின் பாவங்களை நன்கு அறிந்தவனாகவும் அனைத்தையும் காண்பவனாகவும் உங்கள் இறைவன் போதுமானவன். [அல்-இஸ்ரா, 17:17]. மேலும், எவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் (ஸல்) கீழ்ப்படிகிறாரோ, அவர் அல்லாஹ் தன் அருளைப் பொழிந்த நபிமார்கள், ஸித்தீக்குகள், தியாகிகள் மற்றும் நல்லோர்களின் கூட்டத்தில் இருப்பார். இந்தத் தோழர்கள் எவ்வளவு சிறந்தவர்கள்! இதுவே அல்லாஹ்வின் அருட்கொடை, மேலும் அனைத்தையும் அறிந்தவனாக அல்லாஹ் போதுமானவன். [அன்-நிஸா, 4:69 & 70]. அல்லாஹ்வும் அவனது தூதரும் (ஸல்) அவர்களுக்கு வழங்கியவற்றில் (தர்மம், முதலியவற்றிலிருந்து) அவர்கள் திருப்தியடைந்து, "அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அல்லாஹ் தனது அருட்கொடையையும், (மேலும்) தனது தூதரையும் எங்களுக்கு வழங்குவான். (எங்களைச் செல்வந்தர்களாக்குமாறு) நாங்கள் அல்லாஹ்விடம் மன்றாடுகிறோம்" என்று கூறியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் [தவ்பா, 9:59].

யாராவது உங்களை ஏமாற்ற நினைத்தால், அல்லாஹ்வே உங்களுக்குப் போதுமானவன்:

குர்ஆனின் பின்வரும் இரண்டு வசனங்கள் கூறுகின்றன: “ஆனால் அவர்கள் உங்களை ஏமாற்ற நினைத்தால் - உங்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன். அவனே தனது உதவியாலும், விசுவாசிகளாலும் உங்களுக்கு ஆதரவளித்தான்”. [அல்-அன்ஃபால், 8:62]. “நபியே [முஹம்மது (ஸல்)]! உங்களுக்கும், உங்களைப் பின்பற்றும் விசுவாசிகளுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்” [அல்-அன்ஃபால், 8:64].

ஷைத்தானுக்கு எதிராக அல்லாஹ்வே போதுமான பாதுகாவலன்:

அல்லாஹ் ஷைத்தானிடம் கூறுகிறான், “இன்னும் அவர்களிலிருந்து நீ எவரை (வழி சறுகச் செய்ய) சக்தி பெற்றிருக்கிறாயோ அவர்களை உம் கூப்பாட்டைக் கொண்டு வழி சறுகச் செய்; உன்னுடைய குதிரைப் படையையும் காலாட் படையையும் கொண்டு அவர்களுக்கு எதிராக முழக்கமிடச் செய், அவர்களுடைய செல்வங்களிலும், குழந்தைகளிலும் நீ கூட்டாக இருந்து கொள்; அவர்களுக்கு(ப் பொய்யான) வாக்குறுதிகளையும் கொடு!” (என்றும் அல்லாஹ் கூறினான்); ஆகவே, ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் வெறும் ஏமாற்றேயன்றி வேறில்லை. நிச்சயமாக (முஃமினான) என்னுடைய அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை” (என்றும் அல்லாஹ் கூறினான்; நபியே! அந்த என் நல்லடியார்களைக்) காத்துக் கொள்ள உம்முடைய இறைவன் போதுமானவன்” [அல்-இஸ்ரா, 17:64 & 65.]

அல்லாஹ்வே போதுமான பாதுகாவலன்:

“அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்; (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்; (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன்” [அன்-நிஸா, 4:45].

அல்லாஹ் கணக்குக் கேட்பதில் போதுமானவன்:

அல்லாஹ் (சுப்ஹானஹுவதஆலா) கூறினான், “மறுமை நாளில் நாம் நீதியின் தராசுகளை நிறுவுவோம்; அப்போது எவரும் எதிலும் அநீதிக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள். ஒரு கடுகு விதையின் எடை இருந்தால், அதையும் நாம் கொண்டு வருவோம். மேலும், கணக்குக் கேட்பதில் நாமே போதுமானவர்கள்.” [அல்-அன்பியா, 21:47]

அனாதைகளிடம் நீதியாக நடந்துகொள்ளுங்கள்! நீங்கள் அவர்களை நடத்திய விதத்தைப் பற்றி நியாயத்தீர்ப்பு நாளில் உங்களிடம் கணக்குக் கேட்கப்படும். “அனாதைகள் திருமண வயதை அடையும் வரை அவர்களை (அவர்களின் அறிவைப் பொறுத்தவரை) சோதித்துப் பாருங்கள்; அப்போது அவர்களிடம் நல்ல பகுத்தறிவைக் கண்டால், அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். மேலும், நீங்கள் அவர்களின் சொத்துக்களை அனாதைகளுக்கு ஒப்படைக்கும்போது, அவர்கள் முன்னிலையில் சாட்சி கூறுங்கள்; மேலும், கணக்குக் கேட்பதில் அல்லாஹ்வே போதுமானவன்” [அன்-நிஸா, 4:6].

அவன் எச்சரிக்கிறான், “அல்லாஹ்வின் செய்தியை எடுத்துரைப்பவர்கள் அவனுக்கு அஞ்சுகிறார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சமாட்டார்கள். மேலும், கணக்குக் கேட்பதில் அல்லாஹ்வே போதுமானவன்” [அல்-அஹ்ஸாப், 33:39].

அல்லாஹ் தனது மார்க்கத்திற்கும், தனது தூதர்களுக்கும், விசுவாசிகளுக்கும் சாட்சியாகப் போதுமானவன்.

அவனே தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும், அனுப்பியருளினான்; சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (இதற்கு) அல்லாஹ் சாட்சியாக இருப்பதே போதுமானது.” [அல்-ஃபத், 48:28]. (நபியே!) உம்மை நாம் மனிதர்களுக்குத் தூதராக அனுப்பியுள்ளோம், மேலும், சாட்சியாக அல்லாஹ்வே போதுமானவன். [அன்-நிஸா, 4:79]. 

குறைஷிகள் கேட்டார்கள்: “அல்லாஹ் ஒரு மனிதரைத் தூதராக அனுப்பியுள்ளானா?” நீர் கூறுவீராக: “பூமியில் வானவர்கள் அமைதியுடனும் பாதுகாப்படனும் நடமாடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் அவர்களுக்காக வானத்திலிருந்து ஒரு வானவரைத் தூதராக இறக்கியிருப்போம்.” நீர் கூறுவீராக (நபியே!): “எனக்கும் உங்களுக்கும் இடையில் சாட்சியாக அல்லாஹ்வே போதுமானவன். நிச்சயமாக!” அவன் அனைத்தையும் அறிந்தவன், தன் அடியார்களை முழுமையாகப் பார்ப்பவன்." [அல்-இஸ்ரா, 17:94 - 96]. கூறுங்கள்: "எனக்கும் உங்களுக்கும் இடையில், வேதத்தை அறிந்தவர்களுக்கும் இடையில் அல்லாஹ்வே சாட்சியாகப் போதுமானவன்." [அர்-ராத், 13:43].

நாம் மனிதர்களை எல்லாம் ஒன்று திரட்டும் நாளில், அவர்கள் யாருடன் இணைந்திருந்தார்களோ அந்த 'கூட்டாளிகளிடமிருந்து' அவர்களைப் பிரிப்போம். அந்தக் கூட்டாளிகள் கூறுவார்கள், "நீங்கள் எங்களை வணங்கவில்லையே, எனவே எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வே சாட்சியாகப் போதுமானவன், நீங்கள் எங்களை வணங்கியதைப் பற்றி நாங்கள் எதுவும் அறியவில்லையே" [யூனுஸ், 10:28 & 29].

குர்ஆனுக்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்க போதுமானவன்:

(முஹம்மதே [ஸல்] அவர்களே!) உமக்குத் (தான்) அருளிய (வேதத்)தைக் குறித்து, அல்லாஹ்வே சாட்சி சொல்கிறான்; அதைத் தன் பேரருள் ஞானத்தைக் கொண்டு அவன் இறக்கி வைத்தான்; மலக்குகளும் (இதற்கு) சாட்சி சொல்கிறார்கள்; மேலும் சாட்சியங் கூறுவதற்கு அல்லாஹ் போதுமானவன்.உங்களுக்கு அவன் இறக்கியதற்கு அல்லாஹ் சாட்சி கூறுகிறான். அவன் தன் அறிவைக் கொண்டு அதை இறக்கியுள்ளான், வானவர்களும் சாட்சி கூறுகிறார்கள். மேலும் அல்லாஹ்வே சாட்சியாகப் போதுமானவன். [அன்-நிஸா, 4:166]

மேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் தங்களிடம் வந்த அந்த உண்மையை நிராகரித்து விட்டார்களே அவர்கள், “இது தெளிவான சூனியமே!” என்றும் கூறுகிறார்கள். அல்லது, “இதனை அவர் இட்டுக்கட்டிக் கொண்டார்” என்று அவர்கள் கூறுகின்றார்களா? நீர் கூறுவீராக: “நான் இதை இட்டுக் கட்டிக் கொண்டிருந்தால், (அல்லாஹ் அதற்காக தண்டிப்பானே; அப்போது) அல்லாஹ்விடமிருந்து எனக்கு ஏற்படும் எதையும் (தடுக்க) நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள். நீங்கள் இதைப் பற்றி என்னென்ன கூறுகிறீர்களோ, அதை அவன் நன்கறிகிறவன்; எனக்கும் உங்களுக்குமிடையே (அது பற்றி) அவனே போதுமான சாட்சியாக இருக்கின்றான்; அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்” என்று (நபியே! நீர் கூறும்). [அல்-அஹ்காஃப், 46:7 & 8]  

அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம் மீது இறக்கியிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் போதாதா? நிச்சயமாக அ(வ் வேதத்)தில் ரஹ்மத்தும், ஈமான் கொண்ட சமூகத்தாருக்கு (நினைவூட்டும்) நல்லுபதேசமும் இருக்கின்றன.  “எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாயிருக்க அல்லாஹ்வே போதுமானவன்; வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றை அவன் அறிகிறான்; எனவே, எவர் பொய்யானவற்றை நம்பி அல்லாஹ்வை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் நஷ்டவாளிகள்” என்று (நபியே!) நீர் கூறும். [அல்-அன்கபூத், 51 மற்றும் 52]

الحمدلله


'துன்பம் வரும் போது மனிதன் எப்படி நடந்து கொள்கின்றான்' என்று குர்ஆனில், அல்லாஹ் என்ன கூறுகின்றான் என  உ ங்களுக்குத் தெரியுமா? السل...