அஷூரா நாள்
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
கர்பலா போரின் போது நபி (ஸல்) அவர்களின் பேரன் இமாம் ஹுசைன் மற்றும் அவரது தோழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு துக்கம் அனுசரிக்கும் நேரமாகவும் இது கருதப்படுகிறது
ஆகவே, மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும்: “நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்தாருக்காக பட்டிணத்தில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்; உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக ஆக்கி அவற்றில் தவறாமல் தொழுகையை நிலைநிறுத்துங்கள் - மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக!” என்று வஹீ அறிவித்தோம். (10:87)
இன்னும்: “எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் அலங்காரத்தையும், இவ்வுலக வாழ்க்கையின் செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய்; எங்கள் இறைவனே! (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையை விட்டு வழி கெடுக்கிறார்கள்; எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில், அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்” என்று மூஸா கூறினார். (10:88)
இறைவன் கூறினான்: “உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது; எனவே நீங்கள் உறுதியாக இருங்கள். அறியாதவர்களாக இருக்கிறார்களே அவர்களின் வழியை நீங்கள் இருவரும் (ஒருபோதும்) பின் பற்றாதீர்கள்” என்று. (10:89)
பின், "உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸா (அலை)மிற்கு வஹீ அறிவித்தோம். (கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது. (26: 63)
மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான். (10:90)
இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய். (10:91)
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது).(10:92)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு குடிபெயர்ந்தபோது, யூதர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்பதைக் கவனித்தார். முஸ்லிம்களும் நோன்பு நோற்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். வேதத்தின் மக்களிடமிருந்து வேறுபடுவதற்கு, இரண்டு நாட்கள் அதாவது முஹர்ரம் 9 & 10 அல்லது 10 அல்லது 11 நோன்பு நோற்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
சில கருத்துக்களின் படி ஆஷுரா நாளில் :
★ ஆதம்
(அலை) அவர்கள் மனந்திரும்பி மன்னிக்கப்பட்டார் என்றும்
★ நூஹ்
(அலை) அவர்களின் கப்பல் ஜூதி மலையில் தரையிறங்கியது என்றும்
★ யூனுஸ்
(அலை) அவர்கள் திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து தூக்கி எறியப்பட்டு மன்னிக்கப்
பட்டார் என்றும் கருதப்பட்டது
لحمدللهl
No comments:
Post a Comment