Sunday, July 5, 2026

 

கேள்வி: எது மனிதனை அல்லாஹீதாலாவிடம் உயர்த்தும்?

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

அல்லாஹுதாலா குர்ஆனில் கூறுகிறான், “நிச்சயமாக, நாம் மனிதனை மிக அழகிய அமைப்பில் படைத்தோம்; பின்னர் அவனைத் (அவன் செயல்களின் காரணமாக) தாழ்ந்தவர்களில் மிகத் தாழ்ந்தவனாக ஆக்கினோம்”. [95:4]

பின்வரும் 9 வசனங்களில் அல்லாஹ் திருக்குர்ஆனில் மனிதன் மிக்க நன்றி கெட்டவனாக இருக்கின்றான் என்று கூறுகிறான்:

அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான். [22:66]

(இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந் தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்; அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான். [14:34].

இன்னும் அவனே உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் படைத்தவன்; மிகக் குறைவாகவே அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள். [23:78]

அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான். இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்; மேலும், (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம். இறந்து போன பூமிக்கு அதனால் உயிர் அளிக்கிறோம்; நாம் படைத்துள்ளவற்றிலிருந்து கால் நடைகளுக்கும், ஏராளமான மனிதர்களுக்கும் அதை பருகும்படிச் செய்கிறோம். அவர்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு இதனை (குர்ஆனை) நாம் தெளிவு படுத்துகிறோம். மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி கெட்டவராகவே இருக்கின்றனர். [25:47-50]

இன்னும், கடலில் உங்களை ஏதேனும் துன்பம் தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவையாவும் மறைந்து விடும்; எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள் - இன்னும், மனிதன் மகா நன்றி  மறப்பவனாகவே இருக்கின்றான். [17:67]

இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை - நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின் காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் - நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான். [42:48]

இன்னும், அவர்கள் அவனுடைய அடியார்களில் ஒரு பகுதியினரை அவனுக்கு(ப் பெண் சந்ததியை) ஆக்குகிறார்கள்; நிச்சயமாக மனிதன் பகிரங்கமான பெரும் நன்றி கெட்டவனாக இருக்கின்றான். [43:15]

நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்ட வனாக இருக்கின்றான். அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான். [100:6-8]

அல்லாஹீதாலா இதை விரும்பவில்லை என்பதை கீழ்கண்ட வசனம் எடுத்துக்காட்டுகிறது. ,"(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!" [80:17]

மேலும் மனிதன் பெருமை கொள்பவனாக இருக்கின்றான்:

நாம் நம்மிடமிருந்து நற்கிருபையை மனிதன் சுவைக்கும் படிச் செய்து; பின்பு அதனை அவனை விட்டும் நாம் நீக்கி விட்டால், நிச்சயமாக அவன் நிராசைப்பட்டு பெரும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான். அவனுக்கு ஏற்பட்ட துன்பத் திற்குப் பின், நாம் அருட்கொடைகளை அவன் அனுபவிக் கும் படிச் செய்தால், “என்னை விட்டுக் கேடுகள் எல்லாம் போய்விட்டன” என்று நிச்சயமாகக் கூறுவான்; நிச்சயமாக அவன் பெருமகிழ்ச்சியும் பெருமையும் கொள்பவனாக இருக்கின்றான். [11:9 &10]

மனிதன் அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கின்றான்:

நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம்; ஆனால் அதைச் சுமந்து கொள்ள மறுத்தன;அதைப் பற்றி அவை அஞ்சின;ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்; நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கின்றான். [33:72]

மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான்:

மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். [17:11]

மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்; விரைவில் (வேதனைக்கான) என் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பேன்; ஆகவே நீங்கள் அவசரப் படாதீர்கள். [21:37]

இன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத் தக்க பிரயாசையுடன், முஃமினாகவும் இருந்து முயல்கின்றாரோ, அ(த்தகைய)வர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில் நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும். [17:19]

மனிதன் உலோபியாகவே இருக்கின்றான்:

என்னுடைய இறைவனின் (ரஹ்மத்து என்னும்) அருள் பொக்கிஷங்களை நீங்கள் சொந்தப்படுத்திக் கொண்டு இருப்பீர்களானாலும், அவை செலவாகி விடுமோ என்ற பயத்தினால், நீங்கள் (அவற்றைத்) தடுத்துக்கொள்வீர்கள் - மேலும், மனிதன் உலோபியாகவே இருக்கின்றான்” என்று (நபியே!) நீர் கூறும். [17:100]

வழிகாட்டிய பொழுதும் மனிதன் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான்:

இன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான். [18:54]

அல்லாஹ் சுப்ஹானஹுதாலா கூறுவது போல், “நிச்சயமாக, நாம் மனிதனைச் சிரமத்தில் படைத்தோம்” [90:4], மனிதன் தான் எப்போதும் மகிழ்ச்சி யற்றவனாகவும், சுமையுற்ற வனாகவும், எப்போதும் துன்பத்தில் இருப்பவனாகவும் உணர்கிறான்.  மனிதன் தனது ஐந்து கடமைகளையும் நிறை வேற்றிபின்வருபனவற்றையும் செய்ய வேண்டும்:

தன்னை படைத்தவனை தீவிரமாக வணங்தல்,

தனது படைப்பாளனுக்கு நன்றி செலுத்துதல்,

பணிவுடன் இருத்தல்,

பொறுமையுடன் இருத்தல்,

நம்பிக்கையில் உறுதியுடன்  இருத்தல்,

தற்பெருமை பேசுவதைத் தவிர்த்தல்,

அல்லாஹ்வின் விருப்பத்திற்குக் கட்டுப்படுதல்,

இஸ்திஃபார் செய்தல் [பாவங்கள், தவறுகள் போன்றவற்றிற்காக வருந்துதல் மற்றும் மன்னிப்புக் கோருதல்],

அல்லாஹ்வின் கருணை யையும் மன்னிப்பையும் கோருதல்,

பணத்தை மட்டுமல்ல, அல்லாஹ் கொடுத்த மற்ற அனைத்தையும் பிறருடன் பகிர்ந்துகொள்ளுதல், மற்றும்

அமைதியைப் பரப்புதல்!

இதனால் அவன் இரு உலகங்களிலும் அமைதி, வெற்றி மற்றும் உயர்ந்த அந்தஸ்தைப் பெறலாம்.

الحمدلله

 

Question: How to get the highest status from Allahuthala in both the worlds?

السلام عليكم ورحمة الله وبركاتة

سْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

Allahuthala says in Quran, “Verily, We created man of the best stature (mould), Then We reduced him to the lowest of the low ( because of his deeds)”. [95:4]. Allah says in the Holy Quran in nine places that man is ungrateful:

“He is the One Who gave you life, then will cause you to die, and then will bring you back to life. Butsurely humankind is ever ungrateful”. [22:66]

“He has granted you all that you asked Him for. If you tried to count His blessings, you would never be able to number them. Indeed humankind is truly unfair, totally ungrateful“ [14:34].

He is the One Who created for you hearing, sight, and intellect. ˹Yet˺ you hardly give any thanks. [23:78]

He is the One Who has made the night for you as a cover, and ˹made˺ sleep for resting, and the day for rising. And He is the One Who sends the winds ushering in His mercy, and We send down pure rain from the sky, giving life to a lifeless land, and providing water for countless animals and humans of Our Own creation. We certainly disperse it among them so they may be mindful, but most people persist in ungratefulness. [25:47 - 50]

When you are touched with hardship at sea, you totally forget all the gods you normally invoke, except Him. But when He delivers you safely to shore, you turn away. Humankind is ever ungrateful. [17:67]

And indeed, when We let someone taste a mercy from Us, they become prideful because of it. But when afflicted with evil because of what their hands have done, then one becomes totally ungrateful. [42:48]

Still the pagans have made some of His creation out to be a part of Him. Indeed, humankind is clearly ungrateful. [43:15]

Surely humankind is ungrateful to their Lord - and they certainly attest to this - and they are truly extreme in their love of worldly gains. [100:6]

So Allahuthala says firmly: "Condemned are disbelieving humans! How ungrateful they are to Allah!" [80:17]

Man is Boastful:

If We give people a taste of Our mercy then take it away from them, they become utterly desperate, ungrateful. But if We give them a taste of prosperity after being touched with adversity, they say, “My ills are gone,” and become totally prideful and boastful, [11:9 &10]

Man is ignorant of the consequences when he is wrong:

Indeed, We offered the trust to the heavens and the earth and the mountains, but they all declined to bear it, being fearful of it. But humanity assumed it, for they are truly wrongful to themselves and ignorant of the consequences, [33:72].

Man is Hasty:

And man invokes (Allah) for evil as he invokes (Allah) for good and man is ever hasty [17:11]

Man is created of haste, I will show you My Ayat (torments, proofs, evidences, verses, lessons, signs, revelations, etc.). Man is created of haste [21:37]

And whoever desires the Hereafter and strives for it, with the necessary effort due for it (i.e. do righteous deeds of Allah’s Obedience) while he is a believer (in the Oneness of Allah Islamic Monotheism), then such are the ones whose striving shall be appreciated, thanked and rewarded (by Allah).[17:19].

Man is Miserly:

Say: “If you possessed the treasure of the Mercy of my Lord (wealth, money, provision, etc.), then you would surely hold back (from spending) for fear of (being exhausted), and man is ever miserly!” [17:100]

Even after getting guidance, man used to argue and quarrel:

And indeed We have put forth every kind of example in this Qur’an, for mankind. But, man is ever more quarrelsome than anything. [18:54].

As Allah Subhanahuthala says, 

“Verily, We have created man in toil “[90:4], man always feel that he is unhappy, burdened and always in hardship. To avoid this feeling man has to perform all his five duties  along with the following:

★ worship hard,

be grateful to his Creator,

be humble,

be patient,

show steadfastness,

avoid boosting,

submit to Allahs will,

perform istighfar [regret for sins, mistakes etc. and seeking forgiveness]

ask for Allahs Mercy and Pardon,

share with others not only money but what Allah has given you and

spread peace!

If he follow all thes rhings he will definitely get peace, success and highest status in both the worlds.

الحمدلله

  கேள்வி: எது மனிதனை அல்லாஹீதாலாவிடம் உயர்த்தும் ? السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ அல்லாஹுதால...