Friday, May 22, 2026

                               

தமத்துஉ ஹஜ்                                             

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ஹஜ்ஜுத் தமத்துஉ குறித்து தம்மிடம் கேட்கப்பட்டபோது  கூறினார்கள்: முஹாஜிர்களும், அன்சாரிகளும், நபி (ஸல்) அவர்களின் துணைவியரும் விடைபெறும்  ஹஜ்ஜுக்கான இஹ்ராம் பூண்டார்கள்; நாங்களும் இஹ்ராம் பூண்டோம். நாங்கள் மக்காவை அடைந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்"ஹத்யிக்கு (குர்பானிப் பிராணிக்கு) மாலை அணிவித்து அழைத்து வந்தவரைத் தவிர மற்றவர்கள், உங்கள் இஹ்ராமை (ஹஜ்ஜிலிருந்து) உம்ராவாக மாற்றிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். எனவே, நாங்கள் கஅபாவைத் தவாஃப் செய்தோம்;  ஸஃயீ செய்தோம்; (இஹ்ராமிலிருந்து விடுபட்டு) மனைவியருடன் கூடினோம்; (தைக்கப்பட்ட) ஆடைகளை அணிந்தோம். நபி (ஸல்) அவர்கள், "யார் ஹத்யிக்கு மாலை அணிவித்து அழைத்து வந்தாரோ, அந்த ஹத்யி அதற்குரிய இடத்தை அடையும் வரை அவர் இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது" என்று கூறினார்கள். பிறகு தர்வியா நாளின் மாலையில் (துல்ஹஜ் 8-ஆம் நாள்) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் பூணுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். நாங்கள் (ஹஜ்ஜின்) கிரியைகளை (அரஃபாத்திலும், மீனாவிலும்) முடித்த பின், வந்து கஅபாவைத் தவாஃப் செய்தோம்;  ஸஃயீ செய்தோம். இத்துடன் எங்கள் ஹஜ் பூர்த்தியானது. மேலும் அல்லாஹ் கூறியதைப் போன்று ஹத்யி கொடுப்பது எங்கள் மீது கடமையானது: "இயன்ற ஹத்யியை (அறுக்க வேண்டும்). (அது) கிடைக்காதவர் ஹஜ்ஜின்போது மூன்று நாட்களும், நீங்கள் உங்கள் ஊர்களுக்குத் திரும்பிய பின் ஏழு நாட்களும் ஆக (மொத்தம் பத்து நாட்கள்) நோன்பு நோற்க வேண்டும்"). (திருக்குர்ஆன் 2:196). மேலும் ஓர் ஆடு (அறுப்பது) போதுமானது. இவ்வாறு அவர்கள் ஒரே ஆண்டில் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டு வழிபாடுகளையும் சேர்த்தார்கள். ஏனெனில், அல்லாஹ் தனது வேதத்தில் இதை அருளினான்; அவனது நபி (ஸல்) அவர்கள் இதனை வழிமுறையாக (சுன்னத்) ஆக்கினார்கள்; மக்கா வாசிகள் அல்லாதவர் களுக்கு இதனை அனுமதித்தார்கள். அல்லாஹ் கூறினான்: "இது மஸ்ஜிதுல் ஹராம் பகுதியில் குடியில்லாதவர்களுக்கு உரியதாகும்". அல்லாஹ் குறிப்பிடும் ஹஜ்ஜுக்கான மாதங்கள் ஷவ்வால், துல்கஅதா மற்றும் துல்ஹஜ்ஜாகும். இந்த மாதங்களில் யார் தமத்துஉ முறையில் ஹஜ் செய்கிறாரோ அவர் மீது ஹத்யி கொடுப்பதோ அல்லது நோன்பு நோற்பதோ கடமையாகும். [ஸஹீஹுல் புகாரி : 1572]

 الحمدلله   

 

Thursday, May 21, 2026

 

The rituals of Hajj

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

Ibn 'Abbas (RA) said that he has been asked regarding Hajj-at-Tamattu' on which he said: "The Muhajirin and the Ansar and the wives of the Prophet (SAW) and we did the same. When we reached Makkah, Allah's Messenger (SAW) said, "Give up your intention of doing the Hajj (at this moment) and perform 'Umra, except the one who had garlanded the Hady."

So, we performed Tawaf round the Ka'bah and [Sa'yi] between As-safa and Al-Marwa, slept with our wives and wore ordinary (stitched) clothes.

The Prophet (SAW) added, "Whoever has garlanded his Hady is not allowed to finish the Ihram till the Hady has reached its destination (has been sacrificed)".

Then on the night of Tarwiya (8th Dhul Hijjah, in the afternoon) he ordered us to assume Ihram for Hajj and when we have performed all the ceremonies of Hajj, we came and performed Tawaf round the Ka'bah and (Sa'yi) between As-Safa and Al-Marwa, and then our Hajj was complete, and we had to sacrifice a Hady according to the statement of Allah:

"... He must slaughter a Hady such as he can afford, but if he cannot afford it, he should observer Saum (fasts) three days during the Hajj and seven days after his return (to his home)…." (V. 2:196).And the sacrifice of the sheep is sufficient. So, the Prophet (SAW) and his Companions joined the two religious deeds, (i.e. Hajj and 'Umra) in one year, for Allah revealed (the permissibility) of such practice in His book and in the Sunna (legal ways) of His Prophet (SAW) and rendered it permissible for all the people except those living in Makkah.

Allah says: "This is for him whose family is not present at the Al-Masjid-Al-Haram, (i.e. non resident of Makkah)." The months of Hajj which Allah mentioned in His book are: Shawwal, Dhul-Qa'da and Dhul-Hijjah. Whoever performed Hajj-at-Tamattu' in those months, then slaughtering or fasting is compulsory for him. [Sahih al-Bukhari, 1572]

الحمدلله

                                                                                                                                  

இஹ்ராம் கட்டியிருக்கும் சமயத்தில் அல்லாஹ்விற்கு பயப்படுங்கள் 

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ2.

முஃமின்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் சமயத்தில் உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின மார்க்க அடையாளங்களையும், சிறப்பான மாதங்களையும், குர்பானிகளையும், குர்பானிக்காக அடையாளம் கட்டப்பெற்ற வைற்றையும், தங்களுடைய இறைவனின் அருளையும் திருப்பொருத்தத்தையும் நாடி கண்ணியமான (அவனுடைய) ஆலயத்தை நாடிச் செல்வோரையும் (தாக்குவதையோ, அவமதிப் பதையோ) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் இஹ்ராமைக் களைந்து விட்டால் (அனுமதிக்கப்பட்டவற்றை) நீங்கள் வேட்டை யாடலாம்மேலும் புனித மஸ்ஜிதை (கஃபத்துல் லாஹ்வை) விட்டும் உங்களைத் தடுத்த கூட்டத் தினர் மீதுள்ள வெறுப்பானது, நீங்கள் வரம்பு மீறுமாறு உங்களைத் தூண்டி விட வேண்டாம்; இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக் கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (அல்குர்ஆன் : 5:2)

الحمدلله   


 
     

 

Do not violate the rites of Allah 

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

O you who have believed, do not violate the rites of Allah or [the sanctity of] the sacred month or [neglect the marking of] the sacrificial animals and garlanding [them] or [violate the safety of] those coming to the Sacred House seeking bounty from their Lord and [His] approval. But when you come out of ihram, then [you may] hunt. And do not let the hatred of a people for having obstructed you from al-Masjid al-Haram lead you to transgress. And cooperate in righteousness and piety, but do not cooperate in sin and aggression. And fear Allah; indeed, Allah is severe in penalty. [Al Quran, 5:2]

الحمدلله

 

ஹஜ் மப்ரூர் செய்வது செயல்களில் சிறந்தது

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ.

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்களிடம், "செயல்களில் சிறந்தது எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது" என்று கூறினார்கள். பிறகு அவர்களிடம், "அதற்கடுத்து (நன்மையில்) சிறந்தது எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதாகும்" என்று கூறினார்கள். பிறகு அவர்களிடம், "அதற்கடுத்து எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "ஹஜ் மப்ரூரைச் செய்வதாகும்என கூறினார்கள்

ஹதீஸ் தரம் : ஸஹீஹ், ஸஹீஹுல் புகாரி : 1519


ஆயிஷா (ரழி), விசுவாசிகளின் அன்னையார், அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! நாங்கள் ஜிஹாத்தை சிறந்த செயலாகக் கருதுகிறோம். ஆகவே, நாங்களும் (போர்க்களத்தில்) ஜிஹாத் செய்யக் கூடாதா?" அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இல்லை (உங்களுக்கு அது கட்டாயமில்லை); ஆனால், (பெண்களுக்கு) சிறந்த ஜிஹாத் என்பது ஹஜ் மப்ரூர் ஆகும்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்,  ஸஹீஹுல் புகாரி : 1520

 
الحمدلله
                                       

 

To perform Hajj-Mabrur is one of the best deeds 

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

Narrated Abu Huraira ( RA): The Prophet (SAW) was asked, "Which is the best deed?" He said, "To believe in Allah and His Apostle." He was then asked, "Which is the next (in goodness)?" He said, "To participate in Jihad in Allah's Cause." He was then asked, "Which is the next?" He said, "To perform Hajj-Mabrur." [Sahih al-Bukhari, 1519]

Narrated `Ayesha (RA): I asked, "O Allah's Messenger (SAW)! We consider Jihad as the best deed." The Prophet (SAW) said, "The best Jihad (for women) is Hajj Mabrur" [Sahih al-Bukhari 1520].

الحمدلله

 

 

ஹஜ் ஏற்பாடுகளில் மிகச் சிறந்தது இறையச்சமே

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

அல்குர்ஆன்:

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாதுநீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவ னாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மை யானது, தக்வா (பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 2:197)

ஹதீஸ்:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: "யமன் நாட்டு மக்கள் ஹஜ்ஜுக்கு வருவார்கள்; (அப்போது) அவர்கள் தங்களுடன் பயணப் பொருட்களை எடுத்து வரமாட்டார்கள். மேலும், 'நாங்கள் (அல்லாஹ் வையே) சார்ந்திருப்பவர்கள்' என்று கூறுவார்கள். அவர்கள் மக்காவிற்கு வந்ததும் மக்களிடம் யாசிப்பார்கள். எனவே அல்லாஹ் தஆலா, 'வதஸவ்வதூ ஃபஇன்ன கைரஸ் ஸாதித் தக்வா' ('மேலும், (ஹஜ் பயணத்திற்காக) பயணப் பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்; நிச்சயமாக, பயண ஏற்பாடுகளில் மிகச் சிறந்தது இறையச்சமே ஆகும்') என்று (2:197) அருளினான்." [ஸஹீஹுல் புகாரி : 1523]

الحمدلله

 

The best Provision during Hajj is Thaqwa 

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ 

Quran:

Ḥajj is [during] well-known months, so whoever has made ḥajj obligatory upon himself therein [by entering the state of iḥrām], there is [to be for him] no sexual relations and no disobedience and no disputing during ḥajj. And whatever good you do - Allāh knows it. And take provisions, but indeed, the best provision is fear of Allāh. And fear Me, O men of understanding. [2:197].

Related  Hadith: 

Narrated Ibn `Abbas: The people of Yemen used to come for Hajj and used not to bring enough provisions with them and used to say that they depend on Allah. On their arrival in Makkah they used to beg the people, and so Allah revealed, "And take a provision (with you) for the journey, but the best provision is the fear of Allah." (2.197). [Sahih Bhukari, 1523]

الحمدلله 

 


                                 தமத்துஉ   ஹஜ்                                                السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱلل...