ஹஜ் மப்ரூர் செய்வது செயல்களில் சிறந்தது
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்களிடம், "செயல்களில் சிறந்தது எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது" என்று கூறினார்கள். பிறகு அவர்களிடம், "அதற்கடுத்து (நன்மையில்) சிறந்தது எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதாகும்" என்று கூறினார்கள். பிறகு அவர்களிடம், "அதற்கடுத்து எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "ஹஜ் மப்ரூரைச் செய்வதாகும்" என கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ், ஸஹீஹுல் புகாரி : 1519
ஆயிஷா (ரழி), விசுவாசிகளின் அன்னையார், அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! நாங்கள் ஜிஹாத்தை சிறந்த செயலாகக் கருதுகிறோம். ஆகவே, நாங்களும் (போர்க்களத்தில்) ஜிஹாத் செய்யக் கூடாதா?" அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இல்லை (உங்களுக்கு அது கட்டாயமில்லை); ஆனால், (பெண்களுக்கு) சிறந்த ஜிஹாத் என்பது ஹஜ் மப்ரூர் ஆகும்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ், ஸஹீஹுல் புகாரி : 1520
الحمدلله
No comments:
Post a Comment