7. எத்தனை
விதமான நரக நெருப்புக்கள் குர்ஆனில் குறிப்பிடப் பட்டுள்ளன? அவை
யாவை?
ஏழு
வகையான நரக நெருப்புக்கள் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை: ஜஹீம், ஸயீர், ஸாகர், லதா,
ஹாவியா, ஹாமியா மற்றும் ஹுதாமா. சிலர் இதையே
ஏழு வகையான நரகங்கள் எனவும், ஏழு வகையான நரக நுழைவு வாயில்கள்
எனவும் கூறுகின்றனர். அல்லாஹ் தான் எல்லாம் அறிந்தவன்.
ஜஹன்னம்:
ஜஹன்னம்
என்றால் நரகம். அது தங்குவதற்கு மிகக் கெட்ட
இடம். அது தீங்கு விளைவிக்கக்கூடிய தங்குமிடம். அல்லாஹ் கூறுகின்றான்:
“நீங்கள் நரகத்தின் வாயில்களுள் (جَهَنَّمَ)
அதில் என்றென்றும் தங்குபவர்களாக – பிரவேசியுங்கள்" (என்று கூறப்படும்). எனவே,
பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது.
(காஃபிர், 40:76). "நிச்சயமாக நரகம் (جَهَنَّمَ)
எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக."
(அந் நபா, 78:21& 22). நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும்,
காஃபிர் களையும் எல்லாம் நரகத்தில் (جَهَنَّمَ)
ஒன்றாகச் சேர்த்து விடுவான்.” (அந் நிஸா, 4:140).
நிச்சயமாக
வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார் களோ அவர்கள் நரக
நெருப்பில் (نَارِ
جَهَنَّمَ)
இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள் - இத்தகையவர்கள் தாம்
படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள். (அல் பய்யனா, 98:6).
இந்த
வெப்ப (கால)த்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்" என்றும்
நயவஞ்சகர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் "நரகநெருப்பு இன்னும் கடுமையான
வெப்பமுடையது" என்று (நபியே!) நீர் கூறுவீராக. இதை அவர்கள் விளங்கியிருந்தால்
(பின்தங்கியிருக்க மாட்டார்கள்). (அத் தவ்பா, 9: 81).
நரகத்தின் நெருப்பு
உலக நெருப்பை விட 69 மடங்கு உஷ்ணமுடைய தாகும். நரக
நெருப்பு மனிதனின் தசைகளை சுட்டுப் பொசிக்கி விடும். "யார் நம் வேதவசனங்களை
நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில்
புகுத்தி விடுவோம்;. அவர்கள் தோல்கள் கருகிவிடும்
போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள்
வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு
நாம் மாற்றிக் கொண்டே இருப்போம்.” (அந் நிஸா, 4:56)
1. ஸயீர்:
ஸயீர் என்ற நரக நெருப்பானது தொடர்ந்து எறியக் கூடியது. அது அடிக்கடி மூட்டப்பட்ட, கொழுந்து விட்டெறியும் நெருப்பு. அது கடினமாது, சீற்றமுடையது. அல்லாஹ் கூறுகின்றான்: "ஸயீர் (நரக நெருப்பு) அணையும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு நெருப்பை அதிகமாக் குவோம். (அல் இஸ்ரா, 17:97). "ஆனால் நாம் (இறுதி விசாரணக்) காலத்தைப் பொய்ப்பிக்க முற்படுபவனுக்கு நரக நெருப்பைச் (سَعِيرًا) சித்தம் செய்திருக்கிறோம். (அல் ஃபுர்கான்,25:11)".
2. ஹாவியா:
இது
ஒரு ஆழமான நெருப்பு படு குழி. இது நயவஞ்சர்களுக்காக அமைக்கப்பட்டது. அவர்கள் இந்த
படுகுழியில் மேலிருந்து எறியப்படு வார்கள். "ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை
இலேசாக இருக்கிறதோ- அவன் தங்குமிடம் "ஹாவியா" தான். இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது? அது
சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும். (அல் காரியா,101:8 & 9).
3. ஹீதமா:
இது
ஒருவிதமான நரக நெருப்பு. இது மனிதனின் உள் உறுப்புக்களையும், எலும்புகளையும் துண்டு துண்டாக்கும். இது இதயத்தை பொசுக்கும். இந்த
நெருப்பு கால்களிலிருந்து தொடங்கி, உடலில் பரவி இதயத்தை தாக்கும்.
அதிலுள்ளவர்கள் நரகத்தை விட்டு வெளியே வரமுடியாது. ஏனெனில் இதன் வாயில்கள் மூடி
இருக்கும்.
"நிச்சயமாக
அவன் ஹுதமாவில் எறியப்படுவான். ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். அது (உடலில்
பட்டதும்) இருதயங்களில் பாயும். நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.
நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட் டப்பட்டவர்களாக).” (104;4 to 9).
4. ஸகர் (سَقَرَ):
இந்நெருப்பு
எல்லாவற்றையும் தீக்கிரையாக்கி விடும். அல்லாஹ் கூறுகின் றான்: "அவனை நான்
"ஸகர்" (என்னும்) நரகில் புகச் செய்வேன். “ஸகர்" என் னவென்பதை
உமக்கு எது விளக்கும்? அது (எவரையும்) மிச்சம் வைக்காது,
விட்டு விடவும் செய்யாது. (அது சுட்டுக்கரித்து மனிதனின்) மேனியையே
உருமாற்றிவிடும். (அல் முத்தஸிர், 74:26-29).
உங்களை
ஸகர் (நரகத் தில்) நுழைய வைத்தது எது?" (என்று
கேட்பார்கள். அவர்கள் (பதில்)
கூறுவார்கள்: "தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்க வில்லை. அன்றியும்,
ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை." (வீணானவற்றில்)
மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக் கிடந்தோம். இந்த
நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். உறுதியான
(மரணம்) எங்களிடம் வரும் வரையில் (இவ்வாறாக இருந்தோம்" எனக் கூறுவர்). (அல்
முத்தஸிர், 74:42-47).
5. ஜஹீம்:
இது
ஜுவாலையுடன் கூடிய நெருப்பு. இங்கு பாவிகள் சங்கிலியால் கட்டப் பட்டு இருப்பர்.
எவர் நிராகரித்து, நம் திருவசனங்களையும் மறுக்கிறார்களோ,
அவர்கள் நரக (الْجَحِيمِ) வாசிகள் ஆவார்கள். (அல்
மாயிதா, 5:10). "பின், அவனை
நரகத்தில் (الْجَحِيمَ)
தள்ளுங்கள் பின்னர், எழுபது முழ நீள முள்ள சங்கிலியால்
அவனைக் கட்டுங்கள் (என்று உத்தரவிடப்படும்). நிச்சயமாக அவன் மகத்துவ மிக்க
அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான். அன்றியும், அவன்
ஏழைகளுக்கு (த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்)
உணவளிக்கத் தூண்டவில்லை. எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை. சீழ்நீரைத் தவிர அவனுக்கு வேறு எந்த உணவு மில்லை. குற்றவாளிகளைத்
தவிர, வேறு எவரும் அதைப் புசியார்." (அல் ஹாக்கா,
69:30-37).
6 &7. ஹாமியா (حَامِيَةً)
& Ladha (لَظَىٰ):
இவையும்
ஒரு வகையான நரக நெருப்புகள். கொழுந்து
விட்டெறியும் நெருப்பில் (حَامِيَةً) அவை புகும்.
கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும். (அல்
காஷியா, 88:4 & 5). நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்து
விட்டு எரியும் நெருப்பாகும். (لَظَىٰ ) அது (சிரசுத்)
தோல்களை (எரித்து) கழற்றி விடும். (அல் மாரிஜ், 70:15 &16)
அல்லாஹ்
سبحانه
وتعالىٰ நம்பிக்கையாளர்களுக்கு எச்சரிக்கின்றான்:
முஃமின்களே!
உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக)
நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன்
எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில்
கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ்
அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்யமாட்டார்கள், தாங்கள்
ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (அத் தஹ்ரீம், 66:6)"
பிரார்த்தனை:
உங்களை
படைத்தவனாகிய அல்லாஹ்விடம் நரக
நெருப்பிலிருந்து இரட்சிக்கும்படி பிரார்த்தியுங்கள்: اَللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ
யா அல்லாஹ்! எங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுவாயாக! ஆமீன்!
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ
إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا
"எங்கள்
இறைவனே! எங்களை விட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்பு வாயாக. நிச்சயமாக அதன்
வேதனை நிரந்தரமானதாகும்" என்று கூறு வார்கள். (அல் ஃபுர்கான், 25:65).
ஆமீன்!
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً
وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
"எங்கள்
இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள் வாயாக. மறுமையிலும்
நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை (நரக) நெருப்பின்
வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" (அல் பகறா, 2:201) ஆமீன்!
No comments:
Post a Comment