Sunday, March 31, 2024

 

21. ரம்ஜான் கேள்வி-பதில்

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ 

21.  எந்த திருக்குர்ஆன் ஆயத் மீது கலீஃபா உஸ்மான் (ரஜி) வின் இரத்தம் அவரை கொலை செய்யப்படும் போது தெறித்து விழுந்தது?

பதில்: அவருடைய இரத்தம் திருக்குர்ஆனின் சூரா பகரா, வசனம் 137-ல் தெறித்து விழுந்தது

فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَآ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا  وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا هُمْ فِىْ شِقَاقٍ‌  فَسَيَكْفِيْکَهُمُ اللّٰهُ  وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏

"எனவே அவர்களி (ன் கெடுதல்களி) லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்; அவன் (யாவற்றையும்) செவியுறு வோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கின்றான். (2:137).

உஸ்மான் (ரஜி) நபி அவர்களின் மருமகன், நபி அவர்களின் இரண்டு மகள்களை ஒன்றன் ஒன்றாக மணந்தவர். அவர் பிர்-ரும்மாஹ் என்ற கிணற்றை, ஒரு பேராசை படைத்த யூதனிடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்கி மக்களுக்கு குடிநீரை இலவசமாக வழங்கினார். மஸ்ஜீத் நபவியை விஸ்தீரப்படுத்த தன் நிலத்தை இலவசமாக வழங்கினார். அரேபியாவில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த அரேபியர்கள் குர்ஆனை பல் வேறு விதமாக வாசித்தார்கள். அதனை கலீஃபா  உஸ்மான் (ரஜி) கவனத்திற்கு கொண்டு வந்தனர். மீண்டும் அதே குழுவை அழைத்து குர்ஆனை எல்லோரும் ஒரே மாதிரி ஓத முறையாக எழுதப்பட்டது.

அப்படி வாரி வழங்கிய மனிதரை கிளர்ச்சியாளர்கள் அவரது வீட்டை சூழ்ந்து நின்று தண்ணீர் மற்றும் உணவு கொடுக்காமல் முற்றுகை இட்டனர். அவரை தொழுகைக்காக மஸ்ஜிதிற்கு கூட செல்லவிடாது தடுத்தனர். நபி அவர்களின் சஹாபாக்களில் பலர் கிளர்ச்சியாளர்களை விட எண்ணிக்கையில் அதிகமாக இருந்தனர். அவர்கள், அவரை நாங்கள் ஒன்று திரண்டு கிளர்ச்சியாளர்களோடு போர் புரிந்து உம்மை மீட்கின்றோம் என்று கெஞ்சி கேட்டனர். கிளர்ச்சியாளர்களும் முஸ்லிம்கள் என்பதால் தன்னால் முஸ்லிம்களிடையே பிரிவினை உண்டாக்கக் கூடாது என்றும், முஸ்லிம்கள் எவரும் தன்னால் கொல்லப்படக் கூடாது என்றும் அவர் உறுதியாக இருந்தார். அவர் அந்த நாற்பது நாட்களும் நோன்பிருந்தார். அவரோடு அவர் மனைவி நைலாவும் கூட இருந்தார். சில இளவயது நபி தோழர்களான அப்துல்லாஹ் பின் உமர் (ரஜி), ஹசேன் பின் அலி (ரஜி), ஹூசேன் பின் அலி (ரஜி) போன்றோரை பாதுகாப்பிற்காக அவரோடு இருக்க அனுமதித்தனர்.

கொல்லப்படுவதற்கு முன் உஸ்மான் (ரஜி) அவர்கள் ஒரு கனவு கண்டார். அதை கண்டவுடன் அதனை தன்னோடு இருந்தவர்களிடம் கூறினார், "அவர்கள் இன்றைக்கு என்னை கொல்லப்போகிறார்கள்" என்றார். அன்று வெள்ளிக்  கிழமை. ஹிஜ்ரி 35, துல் ஹிஜ்ஜா 18 , [ 17 ஜூன், கி.பி. 656). பின் அவர் கூறினார், " நான் நபி அவர்களை என் கனவில் கண்டேன். அபு பக்ர் (ரஜி) அவர்களும் மற்றும் உமர் பின் கத்தாப் (ரஜி) அவர்களும் அவரோடு இருந்தனர். நபி பெருமானார் அவர்கள் கூறினார்கள், " உஸ்மான் (ரஜி) நாங்கள் எங்களோடு நோன்பு திறப்பதற்காக உம்மை எதிர்பார்க்கின்றோம்" என்றார்

உஸ்மான் (ரஜி) அவர்கள் தன் பாதுகாப்பிற்காக இருந்த அனைத்து சஹாபாக்களையும் வீட்டை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தினார். அவர் தனது கதவைத் திறந்து குர்ஆனை ஓதத் தொடங்கினார், இதனை அறிந்த அவரது வீட்டை முற்றுகையிட்ட கிளர்ச்சியாளர்கள் அவரது அறைக்குள் நுழைந்தனர். அவர்கள் தாடியைப் பிடித்து இழுத்து, அவரை ஒரு குச்சியால் தாக்கினர். அவர்களில் ஒருவன் உஸ்மான் (ரஜி) வை வாளால் தாக்க, அவர் தன்னை பாதுகாக்க தன் கையை மேலே தூக்கிய போது, அவர் மனைவியும் அந்நேரத்தில் அருகே வந்து காப்பாற்ற, அவர் கையும் அவரது மனைவின் விரல்களும் துண்டிக்கப்பட்டுவிட்டன.  அப்போது இரத்தம் தெறித்து அவர் வாசித்துக் கொண்டிருந்த குர்ஆனின் "ஃபஸயக்ஃ பிகஹுமுல்லாஹ்"(அல்லாஹ் உங்களுக்காக அவர்களை கவனித்துக் கொள்வான்) என்ற வசனத்தின் மீது சிந்தியது. உஸ்மான் (ரஜி) அவர்களிடம், "அல்லாஹ்வின்மீது ஆணையாக நீ துண்டித்த இந்த கை, திருக்குர்ஆனை எழுதிய முதல் கை" என்று கூறினார். கிளர்ச்சியாளர்களில் மேலும் ஒருவன் அவரது கழுத்தில் தாக்க அவர் ஷஹீத்  ஆனார்.

ஷஹீதான மூன்று நாட்களுக்குப்பின் தான் அவரது உடல் வெளியே கொண்டு வரப்பட்டது. ஜன்னதுல் பகீக்கு எடுத்துச்செல்லப்பட்ட போது அங்கு அவரை அடக்கம் செய்யக்கூடாது என்று கலகம் செய்ய அதற்கு பக்கத்தில் இருந்த யூதர்களின் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. பிற்காலத்தில் அவ்விடம் ஜன்னதுல் பகீயோடு சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

الحمدلله

 

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...