ஹஜ் ஏற்பாடுகளில்
மிகச் சிறந்தது இறையச்சமே
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
அல்குர்ஆன்:
ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவ னாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மை யானது, தக்வா (பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 2:197)
ஹதீஸ்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: "யமன் நாட்டு மக்கள் ஹஜ்ஜுக்கு வருவார்கள்; (அப்போது) அவர்கள் தங்களுடன் பயணப் பொருட்களை எடுத்து வரமாட்டார்கள். மேலும், 'நாங்கள் (அல்லாஹ் வையே) சார்ந்திருப்பவர்கள்' என்று கூறுவார்கள். அவர்கள் மக்காவிற்கு வந்ததும் மக்களிடம் யாசிப்பார்கள். எனவே அல்லாஹ் தஆலா, 'வதஸவ்வதூ ஃபஇன்ன கைரஸ் ஸாதித் தக்வா' ('மேலும், (ஹஜ் பயணத்திற்காக) பயணப் பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்; நிச்சயமாக, பயண ஏற்பாடுகளில் மிகச் சிறந்தது இறையச்சமே ஆகும்') என்று (2:197) அருளினான்." [ஸஹீஹுல் புகாரி : 1523]
الحمدلله
No comments:
Post a Comment