Friday, May 22, 2026

                               

தமத்துஉ ஹஜ்                                             

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ஹஜ்ஜுத் தமத்துஉ குறித்து தம்மிடம் கேட்கப்பட்டபோது  கூறினார்கள்: முஹாஜிர்களும், அன்சாரிகளும், நபி (ஸல்) அவர்களின் துணைவியரும் விடைபெறும்  ஹஜ்ஜுக்கான இஹ்ராம் பூண்டார்கள்; நாங்களும் இஹ்ராம் பூண்டோம். நாங்கள் மக்காவை அடைந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹத்யிக்கு (குர்பானிப் பிராணிக்கு) மாலை அணிவித்து அழைத்து வந்தவரைத் தவிர மற்றவர்கள், உங்கள் இஹ்ராமை (ஹஜ்ஜிலிருந்து) உம்ராவாக மாற்றிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். எனவே, நாங்கள் கஅபாவைத் தவாஃப் செய்தோம்;  ஸஃயீ செய்தோம்; (இஹ்ராமிலிருந்து விடுபட்டு) மனைவியருடன் கூடினோம்; (தைக்கப்பட்ட) ஆடைகளை அணிந்தோம். நபி (ஸல்) அவர்கள், "யார் ஹத்யிக்கு மாலை அணிவித்து அழைத்து வந்தாரோ, அந்த ஹத்யி அதற்குரிய இடத்தை அடையும் வரை அவர் இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது" என்று கூறினார்கள். பிறகு தர்வியா நாளின் மாலையில் (துல்ஹஜ் 8-ஆம் நாள்) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் பூணுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். நாங்கள் (ஹஜ்ஜின்) கிரியைகளை (அரஃபாத்திலும், மீனாவிலும்) முடித்த பின், வந்து கஅபாவைத் தவாஃப் செய்தோம்;  ஸஃயீ செய்தோம். இத்துடன் எங்கள் ஹஜ் பூர்த்தியானது. மேலும் அல்லாஹ் கூறியதைப் போன்று ஹத்யி கொடுப்பது எங்கள் மீது கடமையானது: "இயன்ற ஹத்யியை (அறுக்க வேண்டும்). (அது) கிடைக்காதவர் ஹஜ்ஜின்போது மூன்று நாட்களும், நீங்கள் உங்கள் ஊர்களுக்குத் திரும்பிய பின் ஏழு நாட்களும் ஆக (மொத்தம் பத்து நாட்கள்) நோன்பு நோற்க வேண்டும்"). (திருக்குர்ஆன் 2:196). மேலும் ஓர் ஆடு (அறுப்பது) போதுமானது. இவ்வாறு அவர்கள் ஒரே ஆண்டில் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டு வழிபாடுகளையும் சேர்த்தார்கள். ஏனெனில், அல்லாஹ் தனது வேதத்தில் இதை அருளினான்; அவனது நபி (ஸல்) அவர்கள் இதனை வழிமுறையாக (சுன்னத்) ஆக்கினார்கள்; மக்கா வாசிகள் அல்லாதவர் களுக்கு இதனை அனுமதித்தார்கள். அல்லாஹ் கூறினான்: "இது மஸ்ஜிதுல் ஹராம் பகுதியில் குடியில்லாதவர்களுக்கு உரியதாகும்". அல்லாஹ் குறிப்பிடும் ஹஜ்ஜுக்கான மாதங்கள் ஷவ்வால், துல்கஅதா மற்றும் துல்ஹஜ்ஜாகும். இந்த மாதங்களில் யார் தமத்துஉ முறையில் ஹஜ் செய்கிறாரோ அவர் மீது ஹத்யி கொடுப்பதோ அல்லது நோன்பு நோற்பதோ கடமையாகும். [ஸஹீஹுல் புகாரி : 1572]

 الحمدلله   

 

No comments:

Post a Comment

  மறுமையில் உயிர்த்தெழுவதை நம்பாதவர் கேட் கும் கேள்விகளுக்கு அல்லாஹ் கூறும் பதில்கள் السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱ...