18. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஹதீஸ்:
السلام عليكم
ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ
ilْيَوْمَ تُجْزٰى كُلُّ نَـفْسٍ بِمَا كَسَبَتْ لَا ظُلْمَ الْيَوْمَ اِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ
அந்நாளில் ஒவ்வோர் ஆத்மாவும், அது சம்பாதித்த தற்குக் கூலி கொடுக்கப்படும்; அந்நாளில் எந்த அநியாயமும் இல்லை. நிச்சயமாக, அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமான வன். (அல் குர்ஆன்:40:17)
தனது படைப்புகளுக்கு இடையே தீர்ப்பளிக்கும் போது அல்லாஹ் கடைபிடிக்கும் நீதியைப் பற்றி இங்கே அவன் கூறுகிறான்; நன்மையாக இருந் தாலும் சரி, தீமையாக இருந்தாலும் சரி, ஓர் அணு வளவு கூட அவன் அநீதி இழைக்க மாட்டான். ஒவ்வொரு நற்செயலுக்கும் பத்து மடங்கு நற்கூலி யும், ஒவ்வொரு தீமைக்கும் அதற்குச் சமமான தண்டனையுமே வழங்குகிறான்.
நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் தபாரக வதஆலா அறிவித்ததை அபூ தர் ஜுன்தப் பின் ஜுனாதா (ரலி) பதிவு செய்துள்ளார்:
"என் அடியார்களே! நிச்சயமாக நான் அநீதி இழைப்பதை என் மீது ஹராமாக்கிக் (தடுத்துக்) கொண்டேன்; மேலும், உங்களுக்கிடையிலும் அதைத் தடை செய்துள்ளேன். எனவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதி இழைக்காதீர்கள்.
என் அடியார்களே! நான் நேர்வழி காட்டியவரைத் தவிர, நீங்கள் அனைவரும் வழிதவறியவர்களே. எனவே, என்னிடம் நேர்வழி தேடுங்கள்; நான் உங்களுக்கு நேர்வழி காட்டுகிறேன்.
என் அடியார்களே! நான் உணவளித்தவரைத் தவிர, நீங்கள் அனைவரும் பசியுள்ளவர்களே. எனவே, என்னிடம் உணவு தேடுங்கள்; நான் உங்களுக்கு உணவளிக்கிறேன்.
என் அடியார்களே! நான் ஆடை அணிவித்தவரைத் தவிர, நீங்கள் அனைவரும் ஆடையற்றவர்களே. எனவே, என்னிடம் ஆடை தேடுங்கள்; நான் உங்களுக்கு ஆடை அணிவிக்கிறேன்.
என் அடியார்களே! நிச்சயமாக நீங்கள் இரவும் பகலும் பாவம் செய்கிறீர்கள். நானோ எல்லாப் பாவங்களையும் மன்னிக்கிறேன். எனவே, என்னிடம் மன்னிப்புக் கோருங்கள்; நான் உங்களை மன்னிக்கிறேன்.
என் அடியார்களே! எனக்குத் தீங்கு செய்யும் ஆற்றலை நீங்கள் ஒருபோதும் அடைய முடியாது, (அவ்வாறு செய்து) எனக்குத் தீங்கிழைக்கவும் உங்களால் முடியாது. எனக்கு நன்மை செய்யும் ஆற்றலையும் நீங்கள் ஒருபோதும் அடைய முடியாது, (அவ்வாறு செய்து) எனக்கு நன்மை செய்யவும் உங்களால் முடியாது.
என் அடியார்களே! உங்களில் ஆரம்பமானவர் களும் இறுதியானவர்களும், உங்களில் மனிதர் களும் ஜின்களும் ஆகிய அனைவரும், உங்களில் உள்ள மிக்க இறையச்சமுடைய ஒரு மனிதரின் இதயத்தைப் போன்று ஆகிவிட்டாலும், அது என் அரசாட்சியில் எதையும் அதிகப்படுத்திவிடாது.
என் அடியார்களே! உங்களில் ஆரம்பமானவர் களும் இறுதியானவர்களும், உங்களில் மனிதர் களும் ஜின்களும் ஆகிய அனைவரும், உங்களில் உள்ள மிக்கத் தீய ஒரு மனிதரின் இதயத்தைப் போன்று ஆகிவிட்டாலும், அது என் அரசாட்சியில் எதையும் குறைத்துவிடாது.
என் அடியார்களே! உங்களில் ஆரம்பமான வர்களும் இறுதியானவர்களும், உங்களில் மனிதர் களும் ஜின்களும் ஆகிய அனைவரும் ஒரே மைதானத்தில் நின்று என்னிடம் (தமது தேவை களைக்) கேட்டு, நான் அவர்கள் ஒவ்வொருவ ருக்கும் அவர் கேட்டதைக் கொடுத்தாலும், அது என்னிடமுள்ளவற்றில், கடலில் ஊசியை நுழைத்து (எடுக்கும் போது ஏற்படும்) குறைவைத் தவிர வேறெதனையும் குறைத்துவிடாது.
என் அடியார்களே! இவை அனைத்தும் உங்கள் செயல்களே. உங்களுக்காக அவற்றை நான் கணக்கிட்டு வைத்துள்ளேன். பிறகு அவற்றுக்குரிய கூலியை உங்களுக்கு நான் முழுமையாக வழங்கு வேன். எனவே, எவர் நன்மையைப் பெற்றுக் கொள் கிறாரோ அவர் அல்லாஹ்வைப் புகழட்டும். எவர் அதுவல்லாத (தீமையான) தைப் பெற்றுக் கொள் கிறாரோ அவர் தன்னையே பழித்துக் கொள் ளட்டும்."
சயீத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "அபூ இத்ரீஸ் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை அறிவிக்கும்போது, (அதன் மகத்துவத்தால்) தனது இரு முழங்கால் களிட்டு அமர்வார்கள்." [ரியாதுஸ் ஸாலிஹீன் : 111]
நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிக விரைவானவன். அதாவது, அவன் தனது படைப்பு கள் அனைத்தையும் ஒரே ஒரு நபரிடம் கணக்கெ டுப்பதைப் போல மிக எளிதாகக் கணக்கெடுப் பான். இது பின்வரும் வசனத்தைப் போன்றது: உங்கள் அனைவரையும் படைப்பதும், மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவதும் ஒரே ஒரு நபரைப் படைப்பது போலவும், உயிர் கொடுத்து எழுப்புவது போலவுமே தவிர வேறில்லை. (31: 28). நம்முடைய கட்டளை கண் இமைப்பதைப் போன்ற ஒரே ஒரு சொல்லே தவிர வேறில்லை.(54:50)
الحمدلله