Thursday, November 28, 2024

 

12. உங்களுக்கு தெரியுமா யூசுஃப் (அலை) அவர்கள் பிரார்த்தித்த துவா என்ன என்று?

السلام عليكم ورحمة الله وبركاتة 

 بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

 என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு கற்றுத்தந்தாய்; வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” (என்று அவர் பிரார்த்தித்தார்.) (12:101)

யூசுப் (அலை)  அவர்களுக்கு அல்லாஹீதாலா நபித்துவம் அருளி, நாட்டின் தானிய களஞ்சியத்திற்கு பொறுப்பாளாராக ஆக்கினான். அவர் தன்னை கிணற்றில் எறிந்த சகோதர்கள் தானியம் வாங்க வந்த போது பழி வாங்காமல், அவர்களை மிக்க கண்ணியத்தோடு உபசரித்தார். தன் சிறிய சகோதரரை வரவழைத்து தன்னோடு வைத்துக் கொண்டார். அவர்களையும் மன்னித்து தன் தாய் தந்தையையும் வரவழைத்தார்.

இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), “என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்;

மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்” என்று கூறினார். (12:100)

பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் மீண்டும் இணைந்ததன் பின்  அல்லாஹ்விடம்: தான் இறக்கும் போதுஒரு முஸ்லிமாகவே இறந்துவிடவும்நல்லவர்களளோடு தன்னை சேர்த்துக் கொள்ளவும் பிரார்த்தித்தார். இந்த துவாவை நாமும் அடிக்கடி ஓதலாமே!

الحمدلله

 

12. Do you know the great dua of the    Prophet Yusuf (AS)

السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

"My Lord! You have indeed bestowed on me of the sovereignty, and taught me the interpretation of dreams; Creator of the heavens and earth, ‘You’ are my protector in this world and in the Hereafter. Cause me to die a Muslim and join me with the righteous.” [12:101].

His Lord the Exalted, honored Prophet Yusuf (AS) with Prophet hood and made him in- charge of King's granary. The brothers who intended to kill him, disposed him in a well. When they came to get the grains, he identified them and treated them well and requested them to bring his younger brother, next time when they come.

They brought him, and Yusuf (AS) made some arrangement to detain with him. When his parents and brothers were reunited, he raised his parents to the throne. And he said: “O my father! This is the interpretation of my dream aforetime! My Lord has made it come true! He was indeed good to me, when He took me out of the prison, and brought you (all here) out of the Bedouin-life, after Shaithan had sown enmity between me and my brothers. Certainly, my Lord is the Most Courteous and Kind unto whom He will. Truly He! Only He is the All-Knowing, the All-Wise. [12:100]

On this occasion he prayed to his Lord, the Exalted and Ever High. As His Creator has perfected His bounty on his life, he prayed to Him to die as a Muslim and to join him with the ranks of the righteous, with his brethren the Prophets and Messengers, may Allah’s peace and blessings be on them all.

 

الحمدلله

 

Friday, November 22, 2024

 

11. உங்களுக்கு தெரியுமா எந்த நபியின் எந்த துவா இன்னும் அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டே உள்ளது என?

السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

இப்ராஹீம் (அலை) "எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலைநாட்டுவதற்காக  குடியேற்றி இருக்கின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!” (14:37)

இந்த துவா ஓதிய சில மணி நேரங்களிலேயே அல்லாஹீதாலா ஜிப்ரீல் (அலை) மை அனுப்பி ஜம் - ஜம் நீரை ஆசிர்வதித்து அருளினான்.  சில தினங்களில் ஒரு வணிக கூட்டத்தை அனுப்பி அவர்களோடு வாழச் செய்தான்.

இப்ராஹிம் (அலை) இந்த துவாவை இரண்டாம் தடவையாக, அல்லாஹ்வின் வீட்டை கட்டி முடித்தபின் அவர் மகன் இஸ்மாயில் (அலை) மோடு பிரார்த்தித்தார். அப்போது அந்த இடமும் மக்கா நகரமாக மாறி இருந்தது.

இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று பிரார்த்தித்தார்;

இது வரை இந்த துவாவை அங்கீகரித்து விவசாயமே இல்லாத பள்ளத்தாக்கில் உலகில் பல்வேறு இடங்களில் விளையும் எல்லா கனிவகைகளையும் வருடமுழுவதும் கிடைக்க அல்லாஹீதாலா வழி வகுத்துள்ளான்.

இப்ராஹிம் (அலை) இந்த துவாவை நம்பிக்கையானர்களுக்காக பிரார்த்திக்க, எல்லாம் வல்லவனும் கருணைமிக்கவனுமாகிய அல்லாஹ் அவர் பிரார்த்தனைக்கு  பதிலளிக்கும் வகையில்: “(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்; பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன் - அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.” (2:126) என்று கூறினான்.

அல்லாஹீதாலா அந்த பட்டணத்தை சரணாலயமாக மறுமை நாள் வரை இருக்க வானங்கள் பூமியை படைக்கும் போதே அபயமளிக்கும் பட்டணமாக  படைத்துவிட்டான். இதையே திருக்குர்ஆனின் பிரிதொரு இடத்தில், "மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; (3:97) என்றும்: "அன்றியும் (மக்காவைச்) சூழவுள்ள மனிதர்கள் (பகைவர்களால்) இறாய்ஞ்சிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா?  (29:67) என்றும் குறிப்பிட்டள்ளான்.

இவ்வாறாக அல்லாஹீதாலா தன் நண்பனான (கலீல்) இப்ராஹிம் (அலை) மின் துவாவை அங்கீகரித்து அதை இன்றளவும் செயல் படுத்திக் கொண்டே இருக்கின்றான்!

الحمدلله

 

 

11. Do you know which Prophet's which dua that is accepted till date?

السلام عليكم ورحمة الله وبركاتة 

 بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

Ibrahim [AS] supplicated, "Our Lord, I have settled some of my descendants in an uncultivated valley near Your sacred House, our Lord, that they may establish prayer. So make hearts among the people incline toward them and provide for them from the fruits that they might be grateful." [14:37]

This is the prayer Ibrahim [AS] supplicated when he left his wife Hajar and infant son Ismail (AS) near the valley of Mounts Safa and Marwa. Within few hours Allah send Jibreel [AS] blessed with Zam-zam and within few days send a caravan who settled down there along with Hajar. 

Ibrahim  [AS] supplicated the same dua the second time after the Allah's House was built in that place and its people lived around it. "My Lord, make this a secure city and provide its people with fruits – whoever of them believes in Allah and the Last Day.” [2:126].

Till date his dua is being accepted. In a valley where there is less/no agricultural activities, Allah made this place provided with all types of fruits that is available through out the world and through out the year.

Ibrahim  [AS] asked Allah to grant sustenance for the believers only. However, Allah answered, “And I shall still provide him who disbelieves with the wherewithal for this short life and then I shall drive him to the chastisement of the Fire; that is an evil end.” [2:126]. Allah has made this city a sanctuary (sacred place) the Day He created the heavens and earth, until the Day of Resurrection.

Allahuthala mentioned in other place of Quran: "Whosoever enters it, he attains security" (3:97) and, "Have they not seen that We have made (Makkah) a secure sanctuary, while men are being snatched away from all around them) (29:67).

الحمدلله


 

10. உங்களுக்கு தெரியுமா இம்ரானின் மனைவி, பீபி மர்யம் பிறந்த போது என்ன துவா ஓதினார் என்று?

السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

இம்ரானின் மனைவி “என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்; எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று கூறியதையும் - (3:35)

(பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: “என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்” எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்; ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) “அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன். (3:36)

அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். (3:37).

ஷைத்தான் ஆதம் (அலை) மைஇப்ராஹிம் (அலை) மை, யூசுஃப் (அலை) மை, அய்யூப் (அலை) மை, மூஸா (அலை) மை, மேலும் முஹம்மது (ஸல்) மை கூட மனதில் அல்லாஹ்வைப் பற்றி சஞ்சலம் ஏற்படுத்த முயன்றான் என பல குர்ஆனின் வசனங்கள் மூலம் அறியலாம். ஆனால் பிபீ  மர்யமின் மனதிலோ, ஈஸா இப்னு மர்யம் (அலை) மனதிலோ சஞ்சலத்தை ஏற்படுத்தினான் என்ற எந்த சந்தர்ப்பமும்  எந்த செயலும் எங்குமே குறிப்பிடப்படவில்லை என்பது இம்ரானின் மனைவி அதாவது மர்யமின் தாய் செய்த பிரார்த்தனையின் சக்தி. அதை அங்கீகரித்த அல்லாஹ்வின் நாட்டம்.

ஆகையால் தாய்மார்களே! பெரியவர்களே!  பிறந்த குழந்தையை ஆணோ, பெண்ணோ, கையில் வாங்கும் போது இப்பிரார்த்தனையை கூறினால்  அல்லாஹ் அந்த துவாவை நிச்சயம் அங்கீகரிப்பான். இல்லாவிடினும் இந்த துவாவை உம் சந்ததிக்கு ஓதினால் அல்லாஹீதாலா அதை தன் கடமையாக ஏற்றுக் கொண்டு நிச்சயம் அங்கீகரிப்பான். ஆமீன்!

الحمدلله

10. Do you know the prayer of the wife of Imran when Bibi Marium was born?

السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

[Mention, O Muḥammad], when the wife of ʿImrān said, "My Lord, indeed I have pledged to You what is in my womb, consecrated [for Your service], so accept this from me. Indeed, ‘You’ are the Hearing, the Knowing." [3:35]

But when she delivered her, she said, "My Lord, I have delivered a female." And Allāh was most knowing of what she delivered, and the male is not like the female. "And I have named her Marium, and I seek refuge for her in You and [for] her descendants from Satan, the expelled [from the mercy of Allāh]." [3:36].

So her Lord accepted her with good acceptance and caused her to grow in a good manner and put her in the care of Zakariah. [3:37].

There are so many incidances cited, in Quran, how our open enemy Shaithan has influenced Adam (AS), Ibrahim (AS), Yusuf (AS), Ayyub (AS), Musa (AS) and even our Prophet Mohammad (SAW). But not a single incidant that Shaithan's influenced over Bi bi Marium and Isa ibn Marium (AS) was known anywhere but nowhere. That shows how powerful was this prayer and how Allahuthala wish them to be free from Shaithan's influence.

So, mothers or the other elderly people or anyother member in the family when receive a new born - girl or boy- kindly pray this powerful dua. Even if you have not done so, daily you can ask Allahuthala to get rid of Shaithan's influence on each one of your family members. Allahuthala will take it as a duty to accept your dua.

الحمدلله


 

9. உங்களுக்கு தெரியுமா நம் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தன் உம்மத்தின் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்று?

السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனையை ஓதினார்கள்.

"ஓ என் இரட்சகரே! அவர்கள் உண்மையில் மனிதர்களில் பலரை வழிகெடுத்துவிட்டனர்" [14:36] பின் `ஈசா இப்னு மரியம் (அலை) கூறியதை, "நீ அவர்களைத் தண்டித்தால், அவர்கள் உனது அடிமைகள்." [5:118] சொல்லி, பின்னர் தனது இரண்டு கைகளை உயர்த்தி கூறினார், "ஓ அல்லாஹ், என் உம்மத்தைக் காப்பாற்று! ஓ, அல்லாஹ், என் உம்மத்தைக் காப்பாற்று! ஓ, அல்லாஹ், என் உம்மத்தைக் காப்பாற்று!" என்று அழுதார்.

அல்லாஹீதாலா  ஜிப்ரீல்  (அலை) மிடம், "ஓ ஜிப்ரீல், முஹம்மது (ஸல்) மிடம் செல்லுங்கள், உங்கள் இறைவன் ஞானமிக்கவன்!அவரை அழ வைப்பது எது என்று அவரிடம் கேளுங்கள்." ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள், மேலும் அவர் தான் பிரார்த்தித்ததையே மீண்டும் கூறினார்.

அல்லாஹுதலா, “முஹம்மது (ஸல்) அவர்களிடம் சென்று இதைக் கூறுங்கள்; "முஹம்மது (ஸல்) அவர்களே! உங்கள் உம்மத்தால் நாங்கள் உங்களை மகிழ்ச்சியடையச் செய்வோம், நீங்கள் விரும்பாத வகையில் அவர்களை நடத்த மாட்டோம்."

யா அல்லாஹ்! முஸ்லிம்களாகிய எங்களை இந்த நபி (ஸல்) அவர்களின் உம்மத்தாக மரணிக்கச் செய்யுங்கள்.

الحمدلله


To get the highest status from Allah SWT