9. உங்களுக்கு தெரியுமா நம் இறை தூதர்
முஹம்மது (ஸல்) அவர்கள் தன் உம்மத்தின் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்று?
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனையை ஓதினார்கள்.
"ஓ என் இரட்சகரே! அவர்கள் உண்மையில் மனிதர்களில் பலரை வழிகெடுத்துவிட்டனர்" [14:36] பின் `ஈசா இப்னு மரியம் (அலை) கூறியதை, "நீ அவர்களைத் தண்டித்தால், அவர்கள் உனது அடிமைகள்." [5:118] சொல்லி, பின்னர் தனது இரண்டு கைகளை உயர்த்தி கூறினார், "ஓ அல்லாஹ், என் உம்மத்தைக் காப்பாற்று! ஓ, அல்லாஹ், என் உம்மத்தைக் காப்பாற்று! ஓ, அல்லாஹ், என் உம்மத்தைக் காப்பாற்று!" என்று அழுதார்.
அல்லாஹீதாலா ஜிப்ரீல் (அலை) மிடம், "ஓ ஜிப்ரீல், முஹம்மது (ஸல்) மிடம் செல்லுங்கள், உங்கள் இறைவன் ஞானமிக்கவன்!அவரை அழ வைப்பது எது என்று அவரிடம் கேளுங்கள்." ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள், மேலும் அவர் தான் பிரார்த்தித்ததையே மீண்டும் கூறினார்.
அல்லாஹுதலா, “முஹம்மது (ஸல்) அவர்களிடம் சென்று இதைக் கூறுங்கள்; "முஹம்மது (ஸல்) அவர்களே! உங்கள் உம்மத்தால் நாங்கள் உங்களை மகிழ்ச்சியடையச் செய்வோம், நீங்கள் விரும்பாத வகையில் அவர்களை நடத்த மாட்டோம்."
யா அல்லாஹ்! முஸ்லிம்களாகிய எங்களை இந்த நபி (ஸல்) அவர்களின் உம்மத்தாக மரணிக்கச் செய்யுங்கள்.
الحمدلله
No comments:
Post a Comment