11. உங்களுக்கு தெரியுமா எந்த நபியின் எந்த
துவா இன்னும் அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டே உள்ளது என?
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ ٱللَّٰهِ
ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
இப்ராஹீம் (அலை) "எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலைநாட்டுவதற்காக குடியேற்றி இருக்கின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!” (14:37)
இந்த துவா ஓதிய சில மணி நேரங்களிலேயே அல்லாஹீதாலா ஜிப்ரீல் (அலை) மை அனுப்பி ஜம் - ஜம் நீரை ஆசிர்வதித்து அருளினான். சில தினங்களில் ஒரு வணிக கூட்டத்தை அனுப்பி அவர்களோடு வாழச் செய்தான்.
இப்ராஹிம் (அலை) இந்த துவாவை இரண்டாம் தடவையாக, அல்லாஹ்வின் வீட்டை கட்டி முடித்தபின் அவர் மகன் இஸ்மாயில் (அலை) மோடு பிரார்த்தித்தார். அப்போது அந்த இடமும் மக்கா நகரமாக மாறி இருந்தது.
“இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று பிரார்த்தித்தார்;
இது வரை இந்த துவாவை அங்கீகரித்து விவசாயமே இல்லாத பள்ளத்தாக்கில் உலகில் பல்வேறு இடங்களில் விளையும் எல்லா கனிவகைகளையும் வருடமுழுவதும் கிடைக்க அல்லாஹீதாலா வழி வகுத்துள்ளான்.
இப்ராஹிம் (அலை) இந்த துவாவை நம்பிக்கையானர்களுக்காக பிரார்த்திக்க, எல்லாம் வல்லவனும் கருணைமிக்கவனுமாகிய அல்லாஹ் அவர் பிரார்த்தனைக்கு பதிலளிக்கும் வகையில்: “(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்; பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன் - அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.” (2:126) என்று கூறினான்.
அல்லாஹீதாலா அந்த பட்டணத்தை சரணாலயமாக மறுமை நாள் வரை இருக்க வானங்கள் பூமியை படைக்கும் போதே அபயமளிக்கும் பட்டணமாக படைத்துவிட்டான். இதையே திருக்குர்ஆனின் பிரிதொரு இடத்தில், "மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; (3:97) என்றும்: "அன்றியும் (மக்காவைச்) சூழவுள்ள மனிதர்கள் (பகைவர்களால்) இறாய்ஞ்சிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (29:67) என்றும் குறிப்பிட்டள்ளான்.
இவ்வாறாக அல்லாஹீதாலா தன் நண்பனான (கலீல்) இப்ராஹிம் (அலை) மின் துவாவை அங்கீகரித்து அதை இன்றளவும் செயல் படுத்திக் கொண்டே இருக்கின்றான்!
الحمدلله
No comments:
Post a Comment