Thursday, November 28, 2024

 

12. உங்களுக்கு தெரியுமா யூசுஃப் (அலை) அவர்கள் பிரார்த்தித்த துவா என்ன என்று?

السلام عليكم ورحمة الله وبركاتة 

 بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

 என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு கற்றுத்தந்தாய்; வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” (என்று அவர் பிரார்த்தித்தார்.) (12:101)

யூசுப் (அலை)  அவர்களுக்கு அல்லாஹீதாலா நபித்துவம் அருளி, நாட்டின் தானிய களஞ்சியத்திற்கு பொறுப்பாளாராக ஆக்கினான். அவர் தன்னை கிணற்றில் எறிந்த சகோதர்கள் தானியம் வாங்க வந்த போது பழி வாங்காமல், அவர்களை மிக்க கண்ணியத்தோடு உபசரித்தார். தன் சிறிய சகோதரரை வரவழைத்து தன்னோடு வைத்துக் கொண்டார். அவர்களையும் மன்னித்து தன் தாய் தந்தையையும் வரவழைத்தார்.

இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), “என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்;

மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்” என்று கூறினார். (12:100)

பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் மீண்டும் இணைந்ததன் பின்  அல்லாஹ்விடம்: தான் இறக்கும் போதுஒரு முஸ்லிமாகவே இறந்துவிடவும்நல்லவர்களளோடு தன்னை சேர்த்துக் கொள்ளவும் பிரார்த்தித்தார். இந்த துவாவை நாமும் அடிக்கடி ஓதலாமே!

الحمدلله

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...