10. உங்களுக்கு
தெரியுமா இம்ரானின் மனைவி, பீபி மர்யம் பிறந்த போது என்ன துவா ஓதினார்
என்று?
السلام عليكم
ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
இம்ரானின் மனைவி “என் இறைவனே! என்
கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து
கொள்கிறேன்; எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக்
கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று கூறியதையும் - (3:35)
(பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: “என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்” எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்; ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) “அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன். (3:36)
அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். (3:37).
ஷைத்தான் ஆதம் (அலை) மை, இப்ராஹிம் (அலை) மை, யூசுஃப் (அலை) மை, அய்யூப் (அலை) மை, மூஸா (அலை) மை, மேலும் முஹம்மது (ஸல்) மை கூட மனதில் அல்லாஹ்வைப் பற்றி சஞ்சலம் ஏற்படுத்த முயன்றான் என பல குர்ஆனின் வசனங்கள் மூலம் அறியலாம். ஆனால் பிபீ மர்யமின் மனதிலோ, ஈஸா இப்னு மர்யம் (அலை) மனதிலோ சஞ்சலத்தை ஏற்படுத்தினான் என்ற எந்த சந்தர்ப்பமும் எந்த செயலும் எங்குமே குறிப்பிடப்படவில்லை என்பது இம்ரானின் மனைவி அதாவது மர்யமின் தாய் செய்த பிரார்த்தனையின் சக்தி. அதை அங்கீகரித்த அல்லாஹ்வின் நாட்டம்.
ஆகையால் தாய்மார்களே!
பெரியவர்களே!
பிறந்த குழந்தையை ஆணோ, பெண்ணோ, கையில் வாங்கும் போது இப்பிரார்த்தனையை கூறினால் அல்லாஹ் அந்த துவாவை நிச்சயம் அங்கீகரிப்பான்.
இல்லாவிடினும் இந்த துவாவை உம் சந்ததிக்கு ஓதினால் அல்லாஹீதாலா அதை தன் கடமையாக
ஏற்றுக் கொண்டு நிச்சயம் அங்கீகரிப்பான். ஆமீன்!
الحمدلله
No comments:
Post a Comment