Friday, November 22, 2024

 

9. உங்களுக்கு தெரியுமா நம் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தன் உம்மத்தின் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்று?

السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனையை ஓதினார்கள்.

"ஓ என் இரட்சகரே! அவர்கள் உண்மையில் மனிதர்களில் பலரை வழிகெடுத்துவிட்டனர்" [14:36] பின் `ஈசா இப்னு மரியம் (அலை) கூறியதை, "நீ அவர்களைத் தண்டித்தால், அவர்கள் உனது அடிமைகள்." [5:118] சொல்லி, பின்னர் தனது இரண்டு கைகளை உயர்த்தி கூறினார், "ஓ அல்லாஹ், என் உம்மத்தைக் காப்பாற்று! ஓ, அல்லாஹ், என் உம்மத்தைக் காப்பாற்று! ஓ, அல்லாஹ், என் உம்மத்தைக் காப்பாற்று!" என்று அழுதார்.

அல்லாஹீதாலா  ஜிப்ரீல்  (அலை) மிடம், "ஓ ஜிப்ரீல், முஹம்மது (ஸல்) மிடம் செல்லுங்கள், உங்கள் இறைவன் ஞானமிக்கவன்!அவரை அழ வைப்பது எது என்று அவரிடம் கேளுங்கள்." ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள், மேலும் அவர் தான் பிரார்த்தித்ததையே மீண்டும் கூறினார்.

அல்லாஹுதலா, “முஹம்மது (ஸல்) அவர்களிடம் சென்று இதைக் கூறுங்கள்; "முஹம்மது (ஸல்) அவர்களே! உங்கள் உம்மத்தால் நாங்கள் உங்களை மகிழ்ச்சியடையச் செய்வோம், நீங்கள் விரும்பாத வகையில் அவர்களை நடத்த மாட்டோம்."

யா அல்லாஹ்! முஸ்லிம்களாகிய எங்களை இந்த நபி (ஸல்) அவர்களின் உம்மத்தாக மரணிக்கச் செய்யுங்கள்.

الحمدلله


 

9. Do you know how our Prophet (SAW) love his Ummah?

السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

Abdullah bin `Amr (RA) narrated that the Messenger of Allah (SAW) recited Ibrahim’s (AS) supplication, "O my Lord! They have indeed led astray many among mankind" [14:36] and the supplication of `Isa ibn Marium (AS), "If You punish them, they are Your servants." [5:118] then raised his hands and said, "O Allah, Save my Ummah! O, Allah, Save my Ummah! O, Allah, save my Ummah!" and cried.

Allah said to the angel Jibril (AS), “O Jibril, go to Muhammad, and Your Lord has more knowledge and ask him what makes him cry.” Jibril (AS) came to the Prophet (SAW) and asked him, and he repeated to him what he said (in his supplication).

Allahuthala said, “Go to Muhammad (SAW) and tell him this; `We will make you pleased with your Ummah, O Muhammad (SAW) and will not treat them in a way you dislike.”’

O Allah! Make us to die we Muslims as Umma of this Great Prophet (SAW).

الحمدلله

 

Thursday, November 14, 2024

 

8. உங்களுக்கு தெரியுமா இப்ராஹிம் (அலை) மின் எந்த துவா அவரால் எதிர்பார்க்கப் பட்டதும், அல்லாஹீதாலாவால் ஏற்கப்பட்டது மான துவா என்று?

السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

அல்லாஹ் சுபஹானஹீதாலா திருக்குர்ஆனில் கூறியதை எண்ணிப் பாருங்கள்: "இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக (த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி (உம் சந்ததியிலுள்ள) அநியாயக் காரர்களுக்குச் சேராது என்று கூறினான். (2:124).

எங்கள் இறைவனே! அவர் (சந்ததி)களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப் படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடை யோனாகவும் இருக்கின்றாய்.”  என பிரார்த்தித்தார். (2:129)

அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து எத்தனை சந்ததிகளை இமாமாக ஆக்கினான் என்பது உங்களுக்கே தெரிந்த ஒன்று. அதாவது:

இஸ்மாயில் (அலை)

இஸ்ஹாக் (அலை)

யாகூஃப் (அலை)

அவரது 12 மகன்கள் ,

யூசுஃப் (அலை)

அய்யூப் (அலை)

ஷூஐப் (அலை)

மூஸா (அலை)

ஹாரூன் (அலை)

நபி உஜேர்

நிறைய நபிமார்கள். ஆனால் பெயர்கள் குர்ஆனில் குறிப்பிடடவில்லை

தாவூத் (அலை)

சுலைமான் (அலை)

ஈஸா (அலை)

முஹம்மத் (ஸல்).

அல்லாஹீதாலா இப்ராஹி ம் (அலை) மின் வேண்டுதலை ஏற்றுக்கொண்டான்,  அவனுடைய நாட்டத்தால் அது நிகழும் என்பதை அவன் முன்பே அறிந்திருந்தான்.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அவருடைய நபித்துவத்தைப் பற்றி கேட்ட போது: “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் நபித்துவம் எப்படி தொடங்கியது என்பதை எங்களிடம் கூறுங்கள்." அவர் கூறினார், "நான் என் தந்தை இப்ராஹீமின் பிரார்த்தனையால், ஈஸா இப்னு மர்யம் (அலை) மின்  நற்செய்தியால்,   மற்றும் என் தாயார் ஆமினா அவர்கள் ஆஷ்-ஷாம் (சிரியா) அரண்மனைகளை ஒளிரச் செய்த ஒரு ஒளியை நான் பிறப்பதற்கு முன்  கண்டதால் தொடங்கியது." என்று கூறினார். 

நீங்களும் உங்களுக்காகவும் உங்கள் சந்ததிகளுக்காகவும் பிரார்த்திப்பீராக! அல்லாஹ்விற்கு அடிபணிந்து அவன் கட்டளையிட்ட பணிகளை செவ்வனே நிறைவேற்றி நல்ல அமல்களை செய்து உங்கள் சந்ததிகளுக்காக பிரார்த்திப்பிர்களானால் அல்லாஹ் உங்கள் துவாவை நிச்சயமாக ஏற்றுக்கொள்வான்.

الحمدلله

 

 

8. Do you know the most expected and accepted dua of Ibrahim (AS)?

السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

Remember what Allah Subhanahuthala proclaimed in Holy Quran: "When the Lord of Ibrahim (AS) [i.e., Allah] tried him with (certain) Commands, which he fulfilled. Allah said (to him), “Verily, I am going to make you a leader (Prophet) of mankind.”

[Ibrahim (AS)] asked, “And of my offspring (to make leaders)?” (Allahuthala) answered, “My Covenant (Prophethood, etc.) includes not the wrong-doers.” [2:124]. He prayed, “Our Lord! Send amongst them a Messenger of their own, who shall recite unto them Your Verses and instruct them in the Book and Al-Hikmah and sanctify them. Verily! You are the All-Mighty, the All-Wise.” [2:129]

Allahuthala accepted his prayer and made in his offspring the Imams, which you are familiar about:

Ismail (AS)

Ishaq (AS)

Yaqub (AS)

His 12 sons,

Yusuf (AS)

Ayub (AS)

Shuayb (AS)

Musa (AS)

Harun (AS)

Nabi Uzaer

Many Prophets whose name was not mentioned in Quran,

Dawud (AS)

Sulaiman(AS)

Isa ibn Marium (AS)

Muhammad (SAW)

Allah accepted Ibrahim’s supplication, although He had full knowledge beforehand that it will occur by His decree. A hadhees about  Messenger of Allah says, when he was asked, “O Messenger of Allah! Tell us about how your Prophet hood started.” He said, "I am the supplication of my father Ibrahim (AS), the good news of Isa ibn Marium (AS), and my mother saw a light that radiated from her which illuminated the castles of Ash-Sham (Syria)." 

Kindly pray for you and your offspring too! If you totally submit to Allah; perform all the duties commanded to you whole heartedly; do lot of good deeds and pray for your offspring, Allahuthala certainly answer your prayers and make your family a successful one.


الحمدلله

 

7. உங்களுக்கு தெரியுமா எதற்கு "ரப்பனா ஆதினா" என்ற துவாவை அல்லாஹீதாலா இறக்கி அருளினான் என்று?

السلام عليكم ورحمة الله وبركاتة 

 بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

இஸ்லாத்திற்கு முந்திய காலத்தில், அரபிகள் ஹஜ் கிரிகைகளை முடித்தபின், ஒன்று கூடி தன் மூதாதையரின் புகழை பாடி மகிழ்ந்து ஆசிர்வதிக்கப்பட்ட புனித நாட்களை வீணடிப்பர். ஆகையால் அல்லாஹீதாலா இப்புனித நாட்களில் அவர்களை, அல்லாஹீதாலாவை அதிகமாக நினவுறுத்த கட்டளையிடுகின்றார்.

"உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள் (இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்-இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்’”

மனிதர்களில் சிலர், “எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு” என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. (2:200)

இன்னும் அவர்களில் சிலர், “ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” எனக் கேட்போரும் அவர்களில் உண்டு. (2:201)

இவ்வாறு, (இம்மை-மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு; தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன். (2:202)

الحمدلله

 

7. Do you know why Allah Subhanahuthala revealed “Rabbana Athina” dua?

السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

The Arabs of the Jahiliyyah after finishing rituals of Hajj hold gatherings to recite poetry to praise the deeds of their forefathers and waste the precious time of those blessed days. So Allahuthala asked those who performed Hajj to remember Allah more.

"So when you have accomplished your Manasik [Tawaf of the Ka’bah and As-Safa and Al-Marwah, stay at ‘Arafat, Muzdalifah and Mina, stoning of the specified pillars in Mina, slaughtering of animal], “Remember Allah as you remember your forefathers or with a far more remembrance."

But of mankind there are some who say: “Our Lord! Give us (Your Bounties) in this world!” and for such there will be no portion in the Hereafter. [2:200]

And there are some among them who say: “Our Lord! Grant us good in this world and good in the hereafter, and save us from the torment of the fire. [2:201]. For them there will be allotted a share for what they have earned. And Allah is Swift at reckoning. [2:202]

الحمدلله


 

6. உலகில் மனிதன் பிரார்த்தித்த முதல் துவா என்னவென்று தெரியுமா?

السلام عليكم ورحمة الله وبركاتة 

 بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

அல்லாஹீதாலா ஆதம் (அலை) மிற்கு பலவற்றை கற்றுக் கொடுத்தான். அதில் ஒன்று இந்த துவா. இதை அல்லாஹ் சுபஹானஹீதாலா குர்ஆனில்  குறிப்பிட்டுள்ளான்.

"ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்" (2:37)

ஷைத்தானின் தூண்டுதலால் தடுக்கப்பட்ட கனியை உண்ட  ஆதம் (அலை) மற்றும் அவரது துணைவியை அல்லாஹ் சுவர்க்கத்தை விட்டு வெளியேற்றினார். அதற்காக ஆதம் (அலை) அவர்கள்  ஷைத்தானையோ, தன் மனைவியையோ நிந்திக்கவில்லை. மாறாக அவர் தன் தவற்றினை உணர்ந்து அல்லாஹ் கற்று கொடுத்தபடி  தன் மனைவியுடன் சேர்ந்து பாவமன்னிப்பு கோரினார்.

அது தான் மனித இனம் முதன் முதலில் பச்சாதப்பட்டு அல்லாஹீதாலாவிடம் மன்னிக்கக் கோரி பிரார்த்தித்த முதல் துவா: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள். (7:23).

மனிதர்களாக நாம், நம்மை அறிந்தோ, அறியாமலே பாவங்களை செய்து நமக்கு நாமே தீங்கிழைத்துக் கொள்கின்றோம். ஆகையால் இந்த துவாவை அடிக்கடி ஓதி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு பெறுவோமாக!

الحمدلله

 

To get the highest status from Allah SWT