Thursday, November 14, 2024

 

6. உலகில் மனிதன் பிரார்த்தித்த முதல் துவா என்னவென்று தெரியுமா?

السلام عليكم ورحمة الله وبركاتة 

 بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

அல்லாஹீதாலா ஆதம் (அலை) மிற்கு பலவற்றை கற்றுக் கொடுத்தான். அதில் ஒன்று இந்த துவா. இதை அல்லாஹ் சுபஹானஹீதாலா குர்ஆனில்  குறிப்பிட்டுள்ளான்.

"ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்" (2:37)

ஷைத்தானின் தூண்டுதலால் தடுக்கப்பட்ட கனியை உண்ட  ஆதம் (அலை) மற்றும் அவரது துணைவியை அல்லாஹ் சுவர்க்கத்தை விட்டு வெளியேற்றினார். அதற்காக ஆதம் (அலை) அவர்கள்  ஷைத்தானையோ, தன் மனைவியையோ நிந்திக்கவில்லை. மாறாக அவர் தன் தவற்றினை உணர்ந்து அல்லாஹ் கற்று கொடுத்தபடி  தன் மனைவியுடன் சேர்ந்து பாவமன்னிப்பு கோரினார்.

அது தான் மனித இனம் முதன் முதலில் பச்சாதப்பட்டு அல்லாஹீதாலாவிடம் மன்னிக்கக் கோரி பிரார்த்தித்த முதல் துவா: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள். (7:23).

மனிதர்களாக நாம், நம்மை அறிந்தோ, அறியாமலே பாவங்களை செய்து நமக்கு நாமே தீங்கிழைத்துக் கொள்கின்றோம். ஆகையால் இந்த துவாவை அடிக்கடி ஓதி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு பெறுவோமாக!

الحمدلله

 

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...