7. உங்களுக்கு
தெரியுமா எதற்கு "ரப்பனா ஆதினா" என்ற துவாவை அல்லாஹீதாலா இறக்கி அருளினான் என்று?
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ ٱللَّٰهِ
ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
இஸ்லாத்திற்கு முந்திய காலத்தில், அரபிகள் ஹஜ் கிரிகைகளை முடித்தபின், ஒன்று கூடி தன் மூதாதையரின் புகழை பாடி மகிழ்ந்து ஆசிர்வதிக்கப்பட்ட புனித நாட்களை வீணடிப்பர். ஆகையால் அல்லாஹீதாலா இப்புனித நாட்களில் அவர்களை, அல்லாஹீதாலாவை அதிகமாக நினவுறுத்த கட்டளையிடுகின்றார்.
"உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள் (இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்-இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்’”
மனிதர்களில் சிலர், “எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு” என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. (2:200)
இன்னும் அவர்களில் சிலர், “ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” எனக் கேட்போரும் அவர்களில் உண்டு. (2:201)
இவ்வாறு, (இம்மை-மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான்
அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு; தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன். (2:202)
الحمدلله
No comments:
Post a Comment