Thursday, November 14, 2024

 

8. உங்களுக்கு தெரியுமா இப்ராஹிம் (அலை) மின் எந்த துவா அவரால் எதிர்பார்க்கப் பட்டதும், அல்லாஹீதாலாவால் ஏற்கப்பட்டது மான துவா என்று?

السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

அல்லாஹ் சுபஹானஹீதாலா திருக்குர்ஆனில் கூறியதை எண்ணிப் பாருங்கள்: "இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக (த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி (உம் சந்ததியிலுள்ள) அநியாயக் காரர்களுக்குச் சேராது என்று கூறினான். (2:124).

எங்கள் இறைவனே! அவர் (சந்ததி)களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப் படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடை யோனாகவும் இருக்கின்றாய்.”  என பிரார்த்தித்தார். (2:129)

அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து எத்தனை சந்ததிகளை இமாமாக ஆக்கினான் என்பது உங்களுக்கே தெரிந்த ஒன்று. அதாவது:

இஸ்மாயில் (அலை)

இஸ்ஹாக் (அலை)

யாகூஃப் (அலை)

அவரது 12 மகன்கள் ,

யூசுஃப் (அலை)

அய்யூப் (அலை)

ஷூஐப் (அலை)

மூஸா (அலை)

ஹாரூன் (அலை)

நபி உஜேர்

நிறைய நபிமார்கள். ஆனால் பெயர்கள் குர்ஆனில் குறிப்பிடடவில்லை

தாவூத் (அலை)

சுலைமான் (அலை)

ஈஸா (அலை)

முஹம்மத் (ஸல்).

அல்லாஹீதாலா இப்ராஹி ம் (அலை) மின் வேண்டுதலை ஏற்றுக்கொண்டான்,  அவனுடைய நாட்டத்தால் அது நிகழும் என்பதை அவன் முன்பே அறிந்திருந்தான்.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அவருடைய நபித்துவத்தைப் பற்றி கேட்ட போது: “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் நபித்துவம் எப்படி தொடங்கியது என்பதை எங்களிடம் கூறுங்கள்." அவர் கூறினார், "நான் என் தந்தை இப்ராஹீமின் பிரார்த்தனையால், ஈஸா இப்னு மர்யம் (அலை) மின்  நற்செய்தியால்,   மற்றும் என் தாயார் ஆமினா அவர்கள் ஆஷ்-ஷாம் (சிரியா) அரண்மனைகளை ஒளிரச் செய்த ஒரு ஒளியை நான் பிறப்பதற்கு முன்  கண்டதால் தொடங்கியது." என்று கூறினார். 

நீங்களும் உங்களுக்காகவும் உங்கள் சந்ததிகளுக்காகவும் பிரார்த்திப்பீராக! அல்லாஹ்விற்கு அடிபணிந்து அவன் கட்டளையிட்ட பணிகளை செவ்வனே நிறைவேற்றி நல்ல அமல்களை செய்து உங்கள் சந்ததிகளுக்காக பிரார்த்திப்பிர்களானால் அல்லாஹ் உங்கள் துவாவை நிச்சயமாக ஏற்றுக்கொள்வான்.

الحمدلله

 

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...