Wednesday, February 18, 2026

 

வி-1

                     ரமலான் வினா-விடை

السلام عليكم ورحمة الله وبركاتة   

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

1. இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர் களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன். (அல்குர்ஆன் : 24:22)

 இந்த வசனம் எப்போது, யாருக்காக  இறக்கி யருளப்பட்டது?


பதில்:               

இந்த வசனம் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களுக் காக இறக்கியருளப் பட்டதுஅவரது மகள் ஆயிஷா (ரலி) அவர்களின் அவதூற்றை துடைக்க இறக்கியருளப்பட்ட வசனங்களுடன் இது வெளிப் படுத்தப்பட்டது.

மிஸ்தாஹ்  என்பவர் அபூபக்கர் அஸ்-சித்திக் (ரலி) அவர்களின் தாய்வழி ஒன்று விட்ட சகோதரர்.  அவர் மிகவும் ஏழை, அல்லாஹ்விற்காக ஹிஜ்ரத் செய்தவர்களில் ஒருவர். அபூபக்கர் அவருக்காக செலவழிக்கும் ஒரே பணத்தில் அவர் வாழ்ந்து வந்தார்.  ஆயிஷா (ரலி) அவர்களின் பொய்யான  அவதூற்றைப் பரப்பியவர்களில் இவரும் ஒருவர். எனவே அபூபக்கர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அவருக்காக ஒருபோதும் செலவு செய்ய மாட்டேன்" என்று சத்தியம் செய்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களின் குற்றமற்ற தன்மையை நிரூபிக்கும் வசனங்களுடன்,  "அல்லாஹ் உங்களை மன்னிப்பதை நீங்கள் விரும்புகிறீர் களா, மேலும் 'நீங்கள் மற்றவர்களை மன்னித் தால், நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்' என அஸ்-சித்தீக் அவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளான்.  அதனை அறிந்த அவர், "நிச்சயமாக, அல்லாஹ் வின் மீது ஆணையாக, நான் உம்மை விரும்பு கிறேன் - என் இறைவனே - நீ என்னை மன்னிப் பாயாக.'' என்றார்.

"அல்லாஹ்வின் மீது ஆணையாக நான்  மிஸ்தா வுக்கு ஒருபோதும் செலவு செய்வதை நிறுத்த மாட்டேன்" என்று கூறினார். நபி (ஸல்) அவர் களின் உற்ற நண்பரும், மாமனாரும், ஆன இளகிய மனம் கொண்ட அவர், மிகவும் மனம் வருந்தி அதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு துவாவை ஓதினார்.

الحمدلله                                                                      

No comments:

Post a Comment

  வி- 2                              ரமலான் வினா விடை السلام عليكم ورحمة الله وبركاتة     بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ  ...