Friday, February 27, 2026

வி-8

                      ரமலான் வினா -விடை                 

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

8. அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? (2:258) யார் அந்த அரசன்?

விடை: பாபிலோனின் மன்னர் நிம்ரோத்

நெருப்பிலிருந்து அல்லாஹ்வின் அருளால் அற்புதமாகத் தப்பித்த பிறகு, இப்ராஹிம் (அலை) அந்நாட்டு மன்னரிடம் கொண்டு வரப்பட்டார். இப்ராஹிம் (அலை) உடன் தகராறு செய்த மன்னன், கானானின் மகன், குஷின் மகன், சாமின் மகன், நூஹ் (அலை)மின் மகன் என்று முஜாஹித் கூறினார்.

நிம்ரோத் தன்னைத் தவிர வேறு கடவுள் இருப்ப தை நினைத்துக் கூட. அவன் கலகக்காரன், ஆணவம் கொண்டவன் அத்துமீறி நடப்பவன், வெகு நீண்ட காலம் நாட்டை ஆட்சி செய்தான். அல்லாஹ் அவனுக்கு அரசாட்சியை  கொடுத் ததால், அல்லாஹ் இருக்கிறார் என்பதற்கான ஆதாரத்தை காட்டுமாறு  இப்ராஹிம் (அலை) அவர்களிடம் கேட்டுக் கொண்டான்.

அவன் நபி இப்ராஹிம் (அலை) அவர்களிடம் "உங்கள் இறைவன் யார்?" என்று கேட்டான். இப்ராஹிம் (அலை) அவர்கள், "என் இறைவன் உயிர் கொடுத்து மரணத்தை ஏற்படுத்துபவன்" (2:258) என்று பதிலளித்தார்.

நிம்ரோத் ஆணவத்துடனும் தான், தான் படைப் பாளன் என்று கூறி, நான் உயிரைக் கொடுப்பேன் மரணத்தையும் ஏற்படுத்துவேன் என்று  பெருமை கொண்டான்.

நிம்ரோது தன்னைத் தவிர வேறு எந்த சக்தி வாய்ந்த படைத்தவரையும் நினைத்துக் கூட பார்த்ததில்லை. "மரணதண்டனைக்கு தகுதியான இரண்டு மனிதர்களை வரவழைத்து, அவன் அவர்களில் ஒருவரைக் கொல்ல உத்தரவிட்டாரன், இரண்டாவது மனிதனை மன்னித்தான்"   "இப்படித் தான் நான் உயிரையும் மரணத்தையும் கொண்டு வருகிறேன்" என்று நிரூபித்தான்.

பின் இப்ராஹிம் (அலை) நிம்ரோதிடம், "நிச்சய மாக, அல்லாஹ் கிழக்கிலிருந்து சூரியனைக் கொண்டு வருகிறான்; நீ அதை மேற்கிலிருந்து உதிக்கச் செய்" என்றார்.  அதனால் அவன் [ஆச்சரி யத்தில்] வாயடைத்துப் போனான். மேலும் அல்லாஹ் அக்கிரமக்காரர்களை வழி நடத்துவதில்லை. [2:258]

அரசரன் தனது பலவீனம், இயலாமை ஆகியவற்றை அறிந்திருந்த தாலும், இப்ராஹிம் (அலை)மின் வேண்டுகோளுக்கு பதிலளிக்க முடியாததால், கருத்து தெரிவிக்காமல்  அமைதியாகி விட்டான்

அவனுக்கு எதிரான ஆதாரம் நிறுவப்பட்டது. அவரன் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டான். அல்லாஹ்வின் கோபத்தை அனுபவித்தான்அவனது மூளைக்குள் நுழைந்த ஒரு சிறிய பூச்சியால் கடுமையான வேதனையை அனுபவித் தான். எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!

الحمدلله



 

Q-8                                                                      

                                Ramzan Quiz

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

8. Have you not considered the one who argued with Ibrahim (AS) about his Lord [merely] because Allāh had given him kingship? [2:258] Who is that King?

Answer: King Nimrod in Babylone

After the miraculous escape from fire by the Mercy of Allah Azwazal, Ibrahim (AS) was brought to the king. Mujahid stated that the king who disputed with Ibrahim (AS) was the King Nimrod, son of Canaan, son of Kush, son of Sam, son of Noah (AS).

Nimrod denied the existence of a god other than himself. He was rebellious, arrogant, transgresser, ruled the country for a long time. Because Allah had given him the kingdom, he asked Ibrahim (AS) to produce proof that Allah exists.

He asked the Prophet Ibrahim (AS) "Who is your Lord?" Ibrahim (AS) answered, "My Lord is the one who gives life and causes death,"(2:258). Nimrod arrogantly and defiantly claimed that he was the creator and pretended that it was he who give life and cause death."

Nimrod cannot think the One, the Most Powerful other than himself. He proved by bringing, "Two men who deserved execution, he commanded to kill one of them and pardoned the second man. He said, "This is how I bring life and death.''

Then Ibrahim (AS) asked to Nimrod, "Verily, Allah brings the sun from the east; then bring it you from the west". So he was overwhelmed [by astonish- ment], and Allāh does not guide the wrongdoing people. [2:258]

The king was aware of his weakness, inadequacy and that he was not able to reply to Ibrahim's request, he was idle, silent and unable to comment. Therefore, the proof was established against him. He was utterly defeated.  The king had experianced Allah's anger and suffered a severe torment by a small insect that went inside his brain. All praise is due to Allah!

الحمدلله

 

Tuesday, February 24, 2026

 

வி- 7

                          ரமலான் வினா -விடை                 

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

7. அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்கு வோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ள வில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும். (27:82)

பூமியிலிருந்து வந்த அந்த உயிரினம் "தாப்பத்துல் அர்த்" என்று அழைக்கப் படுகிறது. "அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்." (27:82).

மனிதகுலம் அல்லாஹ் வின் கட்டளைகளை புறக்கணித்து, உண்மை யான மதத்தை மாற்றி, ஊழல்களில் ஈடுபட்டிருக் கும், உலக  இறுதிக் காலத்தின் போது இது வெளிப்படும்.

குர்ஆனில் இந்த வசனத்திற்கு மேல் எதுவும் கொடுக்கப்படவில்லை. இந்த விலங்கைப் பற்றிய  பல ஹதீஸுகள் பலவீனமானதாகவும் சரியான சங்கிலி தொடர் இல்லாததாகவும் உள்ளன.

1. அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதா வது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார் கள்: "மூன்று (அடையாளங்கள்) வெளிப்பட்டுவிட்டால், அதற்கு முன் ஈமான் கொள்ளாதவருக்கோ அல்லது தனது ஈமானின் மூலம் நன்மையைச் சம்பாதிக்காதவருக்கோ  அவரின் ஈமான் பயனளிக்காது: (அவை) சூரியன் அது மறையும் இடத்திலிருந்து உதிப்பது, தஜ்ஜால் மற்றும் பூமியிலிருந்து வெளிப்படும் பிராணி."  [மிஷ்கத் அல்-மசாபிஹ் 5467; ஸஹீஹ் முஸ்லிம் : 158].

2. அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பூமியிலிருந்து ஒரு மிருகம் வெளிப்படும். அதனுடன் சுலைமான் (அலை) அவர்களின் மோதிரமும் மூஸா (அலை) அவர்களின் கைத்தடியும் இருக்கும். அது விசுவாசியின் முகத்தைப் பிரகாசமாக்கும், மேலும் நிராகரிப்பவனின் மூக்கில் மோதிரத்தால் முத்திரையிடும். ஒரு உணவு மேசையைச் சுற்றி மக்கள் ஒன்று கூடும்போது கூட (அவர்கள் அடையாளம் காணப்படுவார்கள்). அப்போது, 'இதோ! ஓ முஃமினே!' என்றும், 'இதோ! ஓ காஃபிரே!' என்றும் (அவர்கள் அடையாளம் காணப்பட்டு) அழைக்கப்படுவார்கள். மேலும், 'இவர் காஃபிர்!' என்றும், 'இவர் முஃமின்!' என்றும் (மக்கள் ஒருவரை யொருவர் சுட்டிக்காட்டி) கூறுவார்கள்." ஜாமிஉத் திர்மிதீ : 3187

3. அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஆறு விஷயங்கள் (நிகழ்வதற்கு) முன் நற்செயல்கள் புரிவதற்கு விரையுங்கள். (அவை): தஜ்ஜால், புகை, பூமிப் பிராணி, சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, பொதுவான விவகாரம் (மறுமை நாள் அல்லது பெரும் அழிவு), மற்றும் உங்களில் ஒருவருடைய தனிப்பட்ட விவகாரம் (மரணம்)." [ஸஹீஹ் முஸ்லிம் : 2947 b].

இப்னு காதிர் தனது தஃப்ஸீரில் பின்வரும் தகவல்களை வழங்கி யுள்ளார்:

வெளிப்படும் இடம்:

இந்த விலங்கு மற்றவைகளைப் போல் பிறக்காது. தல்ஹா இப்னு உமர் (ரலி) அபு தாவூத் தயலிசி கூறுவதாவது: இந்த மிருகம் மக்காவில் சாரா மலையிலிருந்து வெளிப்படும், மேலும் அதன் தலையிலிருந்து தூசியை சுத்தம் செய்த பினா புனித கருங்கல்லுக்கும் மகாமே இப்ராஹிம்  இடையிலான ஒரு இடத்தினை அடையும். இந்த உயிரினத்தைக் கண்டதும், மக்கள் தலை தெரிக்க ஓடத் தொடங்குவார்கள். ஒரு குழு மக்கள் மட்டுமே தங்கி இருப்பார்கள். பின்னர் மிருகம் அவர்கள் முகங்களை நட்சத்திரங்களைப் போல மின்னச் செய்யும். அதன் பிறகு அது உலகில் வெளியே சென்று, ஒவ்வொரு காஃபிரின் முகத்திலும் காஃபிரின் அடையாளத்தை வைக்கும். அதன் பிடியிலிருந்து யாராலும் வெளியேற முடியாது. "அது ஒவ்வொரு விசுவாசியையும் காஃபிரையும் அடையாளம் காணும்."

அதன் தோற்றம்:

இந்த மிருகம் அசாதாரண மானது, விசித்திரமானது. இப்னு அஸ்-ஜுபைர் இந்த மிருகத்தை,  "அதன் தலை ஒரு காளையின் தலை போன்றது, அதன் கண்கள் ஒரு பன்றியின் கண்கள் போன்றவை, அதன் காதுகள் யானையின் காதுகள் போன்றவை, அதன் கொம்புகள் ஒரு மானின் கொம்புகள் போன்றவை, , அதன் கழுத்து ஒரு தீக்கோழியின் கழுத்து போன்றது, அதன் மார்பு சிங்கத்தின் மார்பு போன்றது, அதன் நிறம் ஒரு புலியின் நிறம் போன்றது, அதன் கைகள் ஒரு பூனையின் கைகள் போன்றது, அதன் வால் ஒரு ஆட்டுக்கடாவின் வால் போன்றது, அதன் கால்கள் ஒட்டகத்தின் கால்கள் போன்றது. அதன் ஒவ்வொரு ஜோடி மூட்டுகளுக்கும் இடையில் பன்னிரண்டு முழ தூரம் உள்ளது." என்று விவரித்துள்ளார்.

அல்லாஹ்விற்குத் தான் நன்றாகத் தெரியும்!

الحمدلله

 

Q- 7                                                                                           Ramzan Quiz

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

7. And when the word [i.e., decree] befalls them, We will bring forthfor them a creature from the earth speaking to them, [saying] that the peoplewere, of Our verses, not certain [in faith]. [27:82] What is that beast?

The creature from earth mentioned here is called "Dabbathul Ardh". The ayath continues as: "Will speak to them because mankind believed not with certainty in Our Ayath" (27:82). It emerges during end time, when mankind has been involved in corruption,  neglecting the commands of Allah and even changing the true religion.

Nothing more is given in Quran. The information about this beast are all from ahadith which are considered to be weak and with no proper chain.

1. Abu Huraira (RA) reported the Prophet (SAW) as saying, "When three things appear faith will not benefit anyone who has not previously believed or acquired any good from his faith: the rising of the sun in its place of setting, the dajjal, and the beast of the earth." [Mishkat al-Masabih 5467; Sahih Muslim 158]

2. Narrated Abu Hurairah (RA): that the Messenger of Allah (SAW) said: "A beast will emerge from the earth. With it shall be the ring of Sulaiman (AS) and the staff of Musa (AS). It will brighten the face of the believer, and stamp the nose of the disbeliever with the ring, such that when the people gather to eat, it will be said to this one: 'O believer! and to that one: 'O disbeliever!'" [Jami` at-Tirmidhi 3187] Grade : Da'if

3. Abu Huraira reported Allah's Messenger (SAW) as saying: Hasten in performing these good deeds (before these) six things (happen): (the appearance) of the Dajjal, the smoke, the beast of the earth, the rising of the sun from the west, the general turmoil (leading to large-scale massacre) and death of masses and individuals. [Sahih Muslim 2947 b]

Ibn Khathir in his tafsir provided the following information:

Place of emergence:

It will not be born.  Talhah ibn 'Umar through Abu Dawud Tayalisi that this beast will emerge in Makkah from the mount of Sara, and after cleaning the dust from its head will reach at a point between the Black Stone and the Station of Ibrahim. Seeing this creature , people will start running helter-skelter. Only one group of people will stay behind. Then the beast will make their faces glitter like stars. After that it will go out in the world, and put a sign of infidelity on the face of every infidel. No one will be able to get out of its grasp. It will recognize every believer and the infidel."

It's appearance:

This beast will be extra- ordinary, strange-looking. Ibn Jurayj reported that Ibn Az-Zubayr described the beast and said, "Its head is like the head of a bull, its eyes are like the eyes of a pig, its ears are like the ears of an elephant, its horns are like the horns of a stag, , its neck is like the neck of an ostrich, its chest is like the chest of a lion, its color is like the color of a tiger, its haunches are like the haunches of a cat, its tail is like the tail of a ram, and its legs are like the legs of a camel. Between each pair of its joints is a distance of twelve cubits".

Allah knows best!

الحمدلله

 

 

வி-6                                                       

                     ரமலான் வினா - விடை

السلام عليكم ورحمة الله وبركاتة   

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

6. ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்: “என் இறைவன் அல்லாஹ்வே தான்!” என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா?  (40:28)  இவ்வாறு கேட்ட நபர் யார்?

இந்த முஃமின் ஃபிர்அவ்னின் குடும்பத்தைச் சேர்ந்த எகிப்தியர். ஃபிர்அவ்னின் தந்தைவழி ஒன்று விட்ட சகோதரர் இவர், தனது விசுவாசத்தை தனது மக்களிடமிருந்து மறைத்தார்.  ஃபிர்அவ்ன், "மூசா (அலை) அவர்களைக் கொல்ல என்னை விட்டுவிடு" என்று கூறிய நாளில் ஃபிர்அவுனுக்கும் அவனுடைய அரசியல் பிராதானிகளுக்கும் உபதேசித்தார்.

சூரா முஃமின் 26 வானத்திலிருந்து 45-வது வசனத்தின் சாரம்:

அவர் ஃபிர்அவுனின் அவையோரிடம் கேட்டார்: "என் இறைவன் அல்லாஹ் என்று ஒரு மனிதன் கூறியதற்காக நீங்கள் அவனைக் கொல்வீர்களா?"  மேலும் விளக்கினார், "மூசா (அலை) பொய்யர் என்றால், அவர் பொய் அவருக்கு பாவத்தை விளைவிக்கும்; ஆனால் அவர் உண்மையைச் சொன்னால், அவர் அச்சுறுத்தும் சில துன்பங்கள் உங்கள் மீது ஏற்படும். எனவே நீங்கள் அவரையும் அவரது மக்களையும் தனியாக விட்டுவிட வேண்டும், அவர்களுக்கு தீங்கு விளைவிக்காதீர்கள்." என கேட்டுக் கொண்டார்.

அவர் மேலும் தொடர்ந்தார், "அல்லாஹ் இந்த ராஜ்ஜியத்தையும், பூமியில் ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும்உங்களுக்கு அருளியுள்ளான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதன் மூலமும், அவருடைய தூதரை நம்புவதன் மூலமும், அல்லாஹ்வின் தண்டனையைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பதன் மூலமும் இந்த அருளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்."

இவ்வாறு அவர் ஃபிர்அவ்னின் பக்கம் சேர்ந்தவர் போலவும், தனது மக்களுக்கு நல்வாழ்வை மட்டுமே விரும்புவது போலவும் பேசினார்.

ஃபிர்அவ்ன் தனது மக்களிடம், "எனக்கு நல்லது என்று நான் நினைப்பதை மட்டுமே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்" என்று கூறினார். ஆனால் ஃபிர்அவ்ன் ஒரு பொய்யை இட்டுக்கட்டிவிட்டான். அவன் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்ப மறுத்து, மேலும் தனது மக்களை நேர்மையாக அறிவுரை கூறாமல் நேர் வழி செல்லவிடாமல் தடுத்தான்.

அவர்களது செயல்களின் தீமை அவர்களை சரியான பாதையிலிருந்து தடுத்தது. மேலும் ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அவர்களுக்கு இழப்பு மற்றும் அழிவைத் தவிர வேறொன்றையும் ஏற்படுத்தவில்லை.

ஆனால் ஃபிர்அவ்னும் அவரது பிரமுகர்களும், மக்களும் பிடிவாதமாக நடந்து கொண்டபோது, அவர் தான் மறைத்த நம்பிக்கையை  வெளிப்படுத்தினார்.

அவர் கூறினார்: “என் மக்களே! என்னைப் பின்பற்றுங்கள், நான் உங்களுக்கு நன்னெறியின் பாதையில் வழிகாட்டுவேன். இந்த உலக வாழ்க்கை ஒரு இன்பத்தைத் தவிர வேறில்லை, ஆனால் மறுமை நிரந்தரமான வீடு. நல்ல விசுவாசிகள் சொர்க்கத்தில் நுழைவார்கள்."

அவர் அவர்களை இரட்சிப்பின் பக்கம் அழைத்தார். வல்லமையுள்ள, மன்னிப்பவனின் பக்கம் அழைத்தார், ஏனெனில் நாம் எல்லோரும் அல்லாஹ்விடமே திரும்புவோம்.

இறுதியாக அவர் அவர்களிடம், "நான்  என் காரியத்தை  அல்லாஹ்விடம் விட்டுவிடுகிறேன். நிச்சயமாக, அல்லாஹ் (தன்) அடியார்களைப் பார்ப்பவனாக இருக்கின்றான்." என்றார்.

அவர்கள் (அவருக்கு எதிராக) சூழ்ச்சி செய்த தீமைகளிலிருந்து அல்லாஹ் அவரைக் காப்பாற்றினான், அதே நேரத்தில் ஒரு தீய வேதனை ஃபிர்அவ்னின் மக்களைச் சூழ்ந்தது.

"ஜிஹாதில் சிறந்தது ஒரு அநீதியான ஆட்சியாளருக்கு முன் நீதியான வார்த்தையைப் பேசுவதாகும்" என்று கூறும் ஹதீஸின் சிறந்த எடுத்துக்காட்டு இந்த விசுவாசி. மூஸா  (அலை) முடன் காப்பாற்றப்பட்ட பாரா (Pharah) அவர்தான்.

குர்ஆனில் அவர் பெயர் குறிப்பிடப்படவில்லை.  சில இஸ்லாமிய மரபுகள் மற்றும் அறிஞர்கள் அவர் பெயர்  ஹிஸ்கீல் அல்லது ஹெஸகீல் (حزقيل) என்று குறிப்பிடுகின்றனர்.

الحمدلله   

                                                                                   

 

Q-5                                                                      

                                Ramzan Quiz

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

6. And a believing man of Firaun’s family, who hid his faith said: “Would you kill a man because he says: My Lord is Allah, and he has come to you with clear signs from your Lord? (40:28). Who is he?

This believing man was a Egyptian belonging to Pharah's family, a paternal cousin of Firaun. He concealed his Faith from his people, till a day when Firaun said, "Leave me to kill Musa (AS)"

He asked, "Would you kill a man because he says: My Lord is Allah? He further explained, "If Musa (AS) is a liar, upon him will be his lie; but if he is telling the truth, some calamity he threatens will befall on you. So you should leave him and his people alone, and not harm them."

He continued, "Allah has blessed you with this kingdom, dominance in the land, power and authority, so take care of this blessing by giving thanks to Allah and believing in his Messenger, and beware of the punishment of Allah." He thus spoke as if he also belonged to Pharaoh’s side, and was only wishing his people well.

Firaun said to his people, in response to this advice of "I only tell you and advise you to do that which I think is good for myself.' But Firaun has fabricated a lie. He betrayed Allah and His Messenger, and cheated his people by not advising them sincerely. The evil of his deeds has hindered from the Right Path, and the plot of Fir’aun led to nothing but loss and destruction for them.

But when Pharaoh and his courtiers behaved stubbornly, he disclosed the secret of his belief. He said: “O my people! Follow me, I will guide you to the way of right conduct. This life of the world is nothing but a enjoyment, but Hereafter is the eternal home. The righteous believer will enter Paradise." He called them to salvation. He invited them to the All-Mighty, the Oft-Forgiving as our return will be to Allah.

Finally he addressed them, "I am telling you, and my affair I leave it to Allah. Verily, Allah is the All-Seer of (His) slaves.” So Allah saved him from the evils that they plotted (against him), while an evil torment encompassed Fir’aun’ people.

He was the best example of hadith which says, "The best of Jihad is to speak a just word before an unjust ruler." He was the one who was saved along with Musa, (AS)

الحمدلله

 

Sunday, February 22, 2026

 




Q-5                                                                        

 Ramzan Quiz

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

5. Allah Subhanahuthala says, "We will certainly drag him by the forelock, a lying, sinful forelock. [96: 15 & 16} Who is he?

Answer: Abu Jahal

He was a most powerful and a great tyrant of Makkah. An arrogant, heartless, most ungrateful transgressor and a strong opposer of Islam. He developed unflinching enmity and hatered towards Islam and Allah's Messanger (SAW)

As a man of wisdom, Abu Jahl was mesmerized and touched by the eloquence of Quran. He liked to hear it during Tahajjud prayers of Prophet (SAW). Though he realized the truth about Islam, his prestige and tribal pride prevented him from becoming a believer.

The Banu Makhzum (Abu Jahl’s clan)  competed with Banu Hashim (Prophet's clan) in everything to attain status and nobility.  ‘A Prophet has come from Banu Hashim, receiveing revelations from the heaven’  By Allah, we will never believe in him and we will never accept his message!” He considers himself self-sufficient and attempts to prevent others from prayer.

Allah says by way of warning and threatening, if he ceases not, We will scorch his forehead a lying, sinful forehead! He was sealed as a lier by Allah Subhanahuthala.

In Arabic culture to pull the hair of forehead is a humiliating and authoritative or a fully controlling act. In two other places Allah mentions forelock in Quran. "...There is no creature but that He holds its forelock [i.e., has full control over it]...".(11:56) ;"The criminals will be known by their marks, and they will be seized by the forelocks and the feet". (55:41).

A Creator knows what He creates. Studies on Neuroscience shows that brain behind the forehead called frontal lobe is the centre of decision making, planning, and initiating voluntary and cognitive behaviors. MRI scans shows that this region is highly active when a person is engaged in lying or deceiving.

That's why Allah made prostration compulsary in Salah, especially two, in every rakath. Every time a person perform prostration Allah guides them to right thinking, become humble and submissive

الحمدلله

 

 





வி-5

                    ரமலான் வினா - விடை

السلام عليكم ورحمة الله وبركاتة   

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

5. நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம். தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை. (96:15 &16). யார் அவன்?

விடை: அபூ ஜஹல்

அபு ஜஹல் மக்காவின் மிகவும் சக்திவாய்ந்த, செல்வாக்கு மிக்க  தலைவன். ஆணவம் கொண்டவன்.  கருணை என்பதே அறவே அற்றவரன். இஸ்லாத்தின் மீதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மீது கடும் பகைமையையும் வெறுப்பையும் வளர்த்து தன் கொடூரத்தை அவ்வப்போது காட்டி பிறரையும் அவ்வாறே கட்டளையிடும் குணம் கொண்டவன்.

அறிவிலும் ஞானத்திலும் சிறந்த அபூ ஜஹல் குர்ஆனின் சொல் நயத்தில் மயங்கிஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுகையின் போது குர்ஆன் வாசிப்பதை ஒளிந்து நின்று ரசிப்பான்.  இஸ்லாத்தைப் பற்றிய உண்மையை அவன் உணர்ந்திருந்தாலும், அவனது கௌரவமும், தன் குலப் பெருமையும் அவனை ஒரு விசுவாசியாக மாறவிடாமல் தடுத்தது.

பனூ மக்ஸும் (அபூ ஜஹலின் குலம்) அந்தஸ்தையும், உன்னதத்தையும் அடைய எல்லாவற்றிலும் பனூ ஹாஷிமுடன் (நபியின் குலம்) போட்டியிட்டனர். ‘பனூ ஹாஷிமிலிருந்து ஒரு நபி வந்துள்ளார், வானத்திலிருந்து வெளிப்பாடுகளை இறக்கப் பெறுகிறார். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் அவரை ஒருபோதும் நம்ப மாட்டோம், அவருடைய உபதேசத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்!"

என அடிக்கடி தங்கள் இயலாமையை காட்டிக் கொள்வான். தன்னைத் தானே போதுமானவன் என்று கருதி, மற்றவர்களின் தொழுகையைத் தடுக்க பல தடவை முயற்சித்தான். அல்லாஹ் எச்சரிக்கை மற்றும் அச்சுறுத்தல் மூலம், அவன் தனது கொடூர செய்கைகளை நிறுத்தா விட்டால், அவனது நெற்றியை ஒரு பொய்யான, பாவமுள்ள நெற்றியாக மாற்றுவோம் என்ற வசனத்தை இறக்கினான்! அல்லாஹ் அஸ்வஜல் அவனை பொய்யர் என்று குர்ஆனில் பதிவு செய்து விட்டான்.

அரபு கலாச்சாரத்தில் நெற்றி முடியை பிடித்து இழுப்பது என்பது ஒரு அவமானகரமான மற்றும் அதிகாரபூர்வமான அல்லது ஒருவனை முழுமையாகக் கட்டுப்படுத்தும் செயலாகும். வேறு இரண்டு இடங்களிலும் அல்லாஹ் குர்ஆனில் நெற்றி முடியை இழுப்பது பற்றி குறிப்பிடுகிறான்.:"எந்த உயிர்ப் பிராணியா யினும் அதன் முன்நெற்றி உரோமத்தை அவன் பிடித்தவனாகவே இருக்கின்றான்; (11:56). "குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள் (55:41)

ஒரு படைப்பாளன் தான் ஒன்றை படைக்கும் போது எதற்காக, எப்படி  படைக்கிறான் என்பதை அறிவாரன். நரம்பியல் பற்றிய ஆய்வுகள்நெற்றிக்குப் பின்னால் உள்ள மூளை முடிவெடுப்பது, திட்டமிடுவது மற்றும் தன்னார்வ மற்றும் அறிவாற்றல் நடத்தைகளைக் கட்டுபடுத்துவதற்கான மையமாகும். ஒரு நபர் பொய் அல்லது ஏமாற்றுவதில் ஈடுபடும்போது இந்த பகுதி மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதை MRI ஸ்கேன் காட்டுகிறது.

அதனால்தான் அல்லாஹ் நம்மை  ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டு சிரம் பணிதலை கட்டாயம் ஆக்கியுள்ளான. ஒருவர் ஒவ்வொரு முறை ஸஜ்தா செய்யும்போதும் அல்லாஹ் அவர்களை சரியான சிந்தனைக்கு வழிநடத்துகிறான். பணிவாகவும் தம்மையே சமர்பிப்பவராகவும்  ஆக்குகிறான்.

 الحمدلله                                                                                                                       

Saturday, February 21, 2026

 

வி-4

                ரமலான் வினா - விடை

السلام عليكم ورحمة الله وبركاتة   

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

4. உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்க வில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் (வெற்று) வார்த்தை, அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர்வழி காட்டுகிறான்." (33:4). இந்த வசனம் யாரை குறிப்பிடுகிறது?

விடை: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகன் ஜைது இப்னு ஹாரிதா (ரலி)

ஜைது (ரலி) அவர்களின் கதை:

ஒருமுறை ஜைதின் தாய் தனது மகனுடன் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவர்களின் எதிரிகளால்  தாக்கப்பட்டனர். அவர்கள் அந்தச் சிறுவனைப் பிடித்து உகாத் சந்தையில் விற்றனர். பீபி கதீஜா (ரலி) அவர்களின் மருமகன் ஹக்கீம் இப்னு ஹுஸாம்  இந்த இளம் பையனை வாங்கி பீபி கதீஜா (அலை) அவர்களுக்கு பரிசளித்தார்.   பீபி கதீஜா(அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பரிசாக தந்தார்.

நபி (ஸல்) அவர்கள் அவரை அடிமைத்தனத் திலிருந்து விடுவித்து, தனது சொந்த மகனாகவே நடத்தினர். அவர்கள் எப்போதும் ஒன்றாகவே இருந்தனர். ஜைத் "முகம்மது (ஸல்) அவர்களின் அன்பானவர் (ஹபிபி)" என்று அழைக்கப்பட்டார். நபி (ஸல்) அவர்களுக்கு வெளிப்பாடு வந்தபோது,  முஸ்லிமாக மாறிய முதல் இளைஞர் அவர்.

பல ஆண்டுகளாக ஜைதின் தந்தை ஹாரிதா தனது மகனைத் தேடிக் கொண்டிருந்தார். அவரது குல மக்கள் வருடாந்திர புனித யாத்திரைக்காக மக்காவிற்கு வருகை தந்த போது, ஜைது (ரலி) அவர்களை அடையாளம் கண்டுகொண்டு, அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். ஹாரிதா தனது சகோதரருடன் மக்காவிற்கு வந்து நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, தனது மகனை ஒரு பணயமாக திருப்பித் தருமாறு  கேட்டுக் கொண்டார்.


ஜைத் (ரலி) தனது தந்தையுடன் செல்ல விரும்பி னால், அவர் பணயமாக அனுப்பப்படுவார் என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். இருப்பினும், அவர் அவருடன் தங்க விரும்பினால், ஹாரிதா அவரை தங்க அனுமதிக்க வேண்டும். ஜைத் (ரலி) அழைக்கப்பட்டார். அவர் தனது தந்தையை யும் சித்தப்பாவையும் அடையாளம் கண்டு கொண்டார். ஆனால் அவர் உறுதியாக, "நான் இந்த உலகில் எதற்கும் முஹம்மது (ஸல்) அவர்களை விட்டுவிட மாட்டேன்." என கூறினார்


நபி (ஸல்) ஜைது (ரலி) அவர்களை காபாவிற்கு அழைத்துச் சென்று, அவரை தனது மகனாகவும் வாரிசாகவும் தத்தெடுத்ததாக பகிரங்கமாக அறிவித்தார். அவர் ஜைது இப்னு முஹம்மது என்று அழைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தனது மகன் குரைஷிகளின் கௌரவமான குடும்பத்துடன்  இருப்பதாக ஹாரிதா திருப்தி அடைந்தார்.


மேற்கண்ட வசனத்தோடு அல்லாஹுதாலா  இதையும் இறக்கியருளினான்: "வளர்ப்பு மகன்களை அவர்களின் தந்தையின் பெயர்களைக் கொண்டு அழையுங்கள்; இது அல்லாஹ்விடம் மிகவும் நீதியானது; ஆனால் நீங்கள் அவர்களின் தந்தையர்களை அறியாவிட்டால், அவர்கள் உங்கள் விசுவாச சகோதரர்களும் உங்கள் நண்பர்களுமாவார்கள்; நீங்கள் தவறு செய்ததில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை, உங்கள் இதயங்கள் வேண்டுமென்றே செய்வதைத் தவிர (குற்றம் உங்கள் மீது இருக்கலாம்), மேலும் அல்லாஹ் மன்னிப்பவன், கருணையுள்ள வன்." (33:5). அன்றிலிருந்து ஜைத் (ரலி) ஜைத் இப்னு ஹாரிதா (ரலி) என்று அவரது உண்மை யான தந்தையின் பெயரால் அறியப்பட்டார்.

எனவே இந்த தீர்ப்பு ரத்து செய்யப்பட்டபோது, அல்லாஹ் ஒரு மனிதன் தனது வளர்ப்பு மகனின் முன்னாள் மனைவியை திருமணம் செய்து கொள்ள அனுமதி அளித்தார். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜைது பின் ஹாரிதா (ரலி) அவர்களின் விவாகரத்து பெற்ற மனைவி ஜைனாப் பின்த் ஜஹ்ஷை மணந்தார்கள்.

இஸ்லாத்தில், தத்தெடுக்கப் பட்ட மகனுக்கு, தாய்ப்பால் கொடுத்தால் மட்டுமே மஹ்ரம்களாகவும், வாரிசாகவும் எல்லா வகையிலும் தங்கள் சொந்த மகனாகக் கருத முடியும்.
  

الحمدلله                                                                                                                       

                 

 

 Q-4                                                                      

 Ramzan Quiz

 السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

4. "And He has not made your claimed [i.e., adopted] sons your [true] sons. That is [merely] your saying by your mouths, but Allāh says the truth, and He guides to the [right] way." This verse points out to whom?

Answer: Prophet Mohammad (SAW)'s adopted son Zayd ibn  Harithah (RA)

The story of Zayd (RA):

Once Zayd’s mother was travelling with his son, on their way, they were attacked by their enemy tribe. They captured the boy and sold in the market of Ukaadh. A nephew of Bibi Khathija (RA) named Hakim ibn Huzaam bought him and gifted this young boy to her. Zyad (AS) was gifted to the Prophet (SAW) by Bibi Khadija (RA).

Prophet (SAW) freed him from slavery and treated him not as a slave but as his own son.  They were always together. Źayd was called as the “beloved (habibi) of the Mohammad (SAW)”. He was the first youth to become Muslim, when revelation came to the Prophet (SAW).  

For years Zayd’s father Harithah was searching for his son. His tribal people when visited Makkah for annual pilgrimage, recognized Zayd (RA) and informed his father.  Harithah came to Makkah with his brother and met the Prophet (SAW) and required him to return his son, for a ransom.

Prophet (SAW) told them if Zayd (RA) wished to go along with his father, he will be sent without ransom. However, if he desired to stay with him, then Harithah must allow him to do so. On Zayd (RA) being called for he recognized his father and his uncle. But he asserted firmly, “I would never leave Muhammad (SAW) for anything in this world.”

He took Zayd (RA) to Kabah and publicly proclaimed that he had adopted Zayd (RA) as his son and as an heir. He should be called as Zayd ibn Muhammad. Harithah was satisfied that his son was with the honorable family of the Quraish.

Allahuthala revealed the above said ayath along with this: “Nor has He made your adopted sons your real sons. That is but your saying with your mouths. But Allah says the truth, and He guides to the (Right) Path.” (33:4). "Call the adopted sons by their father's names; this is more equitable with Allah; but if you do not know their fathers, then they are your brethren in faith and your friends; and there is no blame on you concerning that in which you made a mistake, but (concerning) that which your hearts do purposely (blame may rest on you), and Allah is Forgiving, Merciful.” (33:5). Zayd (RA) was from then onwards known by his real name as Zyad ibn Harithah (RA).

Hence when this ruling was abrogated, Allah made it permissible for a man to marry the ex-wife of his adopted son. and the Messenger of Allah (SAW) married Zaynab bint Jahsh, the divorced wife of Zayd bin Harithah (RA)

In Islam an adopted son, if breast fed only can be treated as their own son in every respect, as Mahrams and also in inheritence. 

الحمدلله


Friday, February 20, 2026

 

வி-3

                      ரமலான் வினா - விடை

السلام عليكم ورحمة الله وبركاتة   

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

3. “எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமை யையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்ட வர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக் க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” (எனப் பிரார்த்தித்தனர்) (7:126). இது யாருடைய பிரார்த்தனை?

விடை: இது ஃபிர்அவுன் வரவழைத்து தோல்வி கண்ட  சூனியக்கார் களின் பிரார்த்தனை.

அல்லாஹுதாலாவின் அறிவுறுத்தலின்படி மூஸா (அலை) மத்யனில் இருந்து எகிப்துக்கு வந்தார். அவரும் அவரது சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களும் ஃபிர்அவ்னிடம் சென்று, அல்லாஹ் விடமிருந்து கொண்டு வந்த சத்தியத்திற்கான தெளிவான சான்று களை யும்அற்புதங்களையும் காட்டினர்.

ஃபிர்அவ்ன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மந்திரவாதிகளைச் சேகரித்து, அவர்களுக்குப் பெரும் வெகுமதிகளை கொடுப்பதாக உறுதி யளித்தான். அவர்கள் தங்கள் சூனியத்தை  வெளிப்படுத்தினர், பின் மூஸா (அலை) தனது தடியை எறிந்து  ஒரு பெரிய பாம்பை உருவாக்க, அது மந்திரவாதிகள் உருவாக்கிய அனைத்து சூனியங்களையும் விழுங்கியது.இவ்வாறு உண்மை நிலைநாட்டப்பட்டது. சூனியக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டு முற்றிலும் அவமானப் படுத்தப்பட்டனர். அவர்கள் பிரபஞ்சத்தின் இறைவனுக்கும், மூஸா மற்றும் ஹாரூன் (அலை) அவர்களின் இறைவனுக்கும் ஸஜ்தா செய்து விழுந்தனர்.

ஆனால் ஃபிர்அவ்ன், 'நான் உங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பு நீங்கள் அவரை நம்புவதற்கு எவ்வளவு தைரியம்? இந்த நகரத்தை விட்டு மக்களை விரட்ட நீங்கள் தீட்டிய சதி இது!' விரைவில் நீங்கள் பார்ப்பீர்கள்". உங்களுடைய மாறு கைகளையும் மாறு கால்களையும் வெட்டி, அனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவதாக அவர்களை மிரட்டினான்.

ஆனால் அவர்கள், "நிச்சயமாக, அல்லாஹ்வின் தண்டனை உன் தண்டனையை விடக் கடுமை யானது, இன்று நீ எங்களை அழைத்த தற்கும், நீ எங்களை கட்டாயப்படுத்தி செய்த சூனியத் திற்கும், அவனுடைய தண்டனை உன் வேதனை யை விடப் பெரியது. எனவே, இன்று உன் தண்ட னையை எதிர்கொள்வதில் நாங்கள் பொறுமை யைக் கடைப்பிடிப்போம், இதனால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து நாங்கள் காப்பாற்றப் படுவோம்.' என்றனர். (7:118 - 126)

உண்மையான விசுவாசிகள் சோதனைகளை எதிர்கொள்வார்கள், ஆனால் அவர்கள் பொறுமை யாக இருந்தால் அல்லாஹ் அவர்களை ஆதரிப் பான்.  இந்த வசனம் பொய்யை விட சத்தியமே இறுதியில் வெற்றி தரும் என்பதை காட்டுகிறது.  

  

الحمدلله

 

Q-3

                                       Ramzan Quiz

السلام عليكم ورحمة الله وبركاتة   

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

Question 3.

"Our Lord, pour upon us patience and let us die as Muslims [in submission to You].” [7:126]

Whose prayer is this?

Answer: Prayer of Firaun's Magicians

Musa (AS) came to Egypt  from Madyan, as per instruction of Allahuthala. He and his brother Harun (AS) went to Firaun and demonstrated miracles and clear proofs for the Truth that he brought.

Firaun collected magicians from various parts of the country, promised them great rewards. They displayed their magic and when Musa (AS) displayed magic by throwing his stick, a huge serpant formed, swallowed all the magic produced by the magicians.

Thus the truth was established. The magicians were defeated and utterly humiliated. They fell down in prostration to the Lord of Universe and Lord of Musa and Harun (AS'). But Firaun said, ‘How dare you believe in Him before I have given you permission? This is a plot you have hatched to drive the people out of this city! Soon you will see". He threatened them with cutting off their hands and feet on opposite sides and  crucify them all.

But they said, "Certainly, Allah's punishment is more severe than your punishment and His torment for what you are calling us to, this day, and the magic you forced us to practice, is greater than  your torment. Therefore, we will observe patience in the face of your punishment today, so that we are saved from Allah's torment.' (7:118 - 126)

The true believers will face trials but will be supported by Allah if they remain patient. This verse also highlights the eventual triumph of truth over falsehood. 

الحمدلله

 

 

Thursday, February 19, 2026

 

வி-2

                          ரமலான் வினா விடை

السلام عليكم ورحمة الله وبركاتة   

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

 "அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம்." [15:74]

இந்த வசனம் எந்த நபியின் ஊரைப்பற்றி குறிப்பிடுகிறது?


விடை: லூத் (அலை) அவர்களின் ர்


இப்ராஹீம் (அலை) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆன லூத் (அலை) அவர்கள் சாக் கடலுக்கு வடக்கே உள்ள இடத்திற்கு நபியாக அனுப்பப்பட்டார். அம்மக்கள் வழிபறி கொள்ளை யிலும், பல விதமான தீய காரியங்களையும் செய்து கொண்டிருந்தனர்.

அவர் அவர்களிடம் கூறினார், “உண்மையில், நீங்கள் உலகங்களில் உங்களுக்கு முன் யாரும் செய்யாத அளவுக்கு ஒழுக்கக்கேட்டைச் செய்கி றீர்கள். உண்மையில், நீங்கள் மனிதர்களை அணுகி, பாதையைத் தடுத்து, உங்கள் கூட்டங் களில் [ஒவ்வொரு] தீமையையும் செய்கிறீர்கள். இல்லை, நீங்கள் எல்லா வரம்புகளையும் மீறிய ஒரு சமூகத்தினர்.” [29:28 & 29]. அவர்கள் அவரை அச்சுறுத்தினர்: “ஓ லூத்! நீர் விலகவில்லை என்றால், (எங்கள் நகரங்களிலிருந்து) வெளியேற் றப்பட்டவர்களில் ஒருவராக இருப்பீர்கள்” (26:167).

அவர் மேலும் கடுமையான தண்டனையைப் பற்றி அவர்களை எச்சரித்தார். அவர்கள் கூறினர்: “நீங் கள் உண்மையாளர்களில் ஒருவராக இருந்தால் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வாருங்கள்.” [29:29]

அவர் அல்லாஹ்விடம், “என் இறைவனே, குழப்பம் விளைவிக்கும் மக்களுக்கு எதிராக எனக்கு ஆதரவளிப்பாயாக” என்று பிரார்த்தனை செய்தார். [29:30]

இதற்கிடையில், அல்லாஹ் மனிதர்களைப் போல மாறுவேடமிட்ட ஜிப்ரீல் உட்பட மூன்று தேவதைகளை அனுப்பினான். லூத் (அலை) அவர்களை தனது வீட்டிற்கு விருந்தினராக அழைத்துச் சென்றார். அவரது மக்கள் மகிழ்ச்சியுடன் அவரது வீட்டிற்கு வந்தனர், அவருடைய விருந்தினர்களை வற்புறுத்தி தம்முடன் அனுப்பும் படி கேட்டனர், [15:61-72] ஆனால் அல்லாஹ் அவர்களின் கண்களை அழித்துவிட்டு, “என் தண்டனையையும் எச்சரிக்கையையும் சுவையுங்கள்” என்று கூறினான். அதிகாலையில் அவர்கள் மீது இழிவான தண்டனை வந்தடைந்தது. (54: 33-38).

நாம் லூத் (அலை)மையும் அவரது குடும்பத் தினரையும்  காப்பாற்றினோம்,  (அவரது வயதான பின் தங்கிய மனைவி) தவிர. [26:169 -171]

நாம் மற்றவர்கள் மீது எச்சரிக்கப்பட்ட (வேதனை யின்) மழையைப் பொழிந்து அழித்தோம். அது எவ்வளவு கெட்டது. அது அவர்களது ஊரை தலை கீழாக மாற்றி, அவர்கள் மீது சுட்ட களிமண் கற்களைப் பொழிந்தது. [15:74].

நிச்சயமாக, இதில் ஒரு அத்தாட்சி இருக்கிறது, ஆனால் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. [26:173 - 174] அல்லாஹ் கூறுகிறான், "நிச்சயமாக, நீங்கள் காலையிலும் இரவிலும் அப்பாதைகளைக் கடந்து செல்கிறீர்கள். நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?" (37:137-138) 

الحمدلله                                                                                      

  Narrated Abu Huraira  (RA): I heard Allah's Messenger (SAW) saying." By Allah! I ask for forgiveness from Allah and turn to Him ...