வி- 7
ரமலான் வினா -விடை
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
7. அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்கு வோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ள வில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும். (27:82)
பூமியிலிருந்து வந்த அந்த உயிரினம்
"தாப்பத்துல் அர்த்" என்று அழைக்கப் படுகிறது. "அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம்
வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக்
காண்பிக்கும்." (27:82).
மனிதகுலம் அல்லாஹ் வின் கட்டளைகளை புறக்கணித்து, உண்மை யான மதத்தை மாற்றி, ஊழல்களில் ஈடுபட்டிருக் கும், உலக இறுதிக் காலத்தின் போது இது வெளிப்படும்.
குர்ஆனில் இந்த வசனத்திற்கு மேல் எதுவும் கொடுக்கப்படவில்லை. இந்த விலங்கைப் பற்றிய பல ஹதீஸுகள் பலவீனமானதாகவும் சரியான சங்கிலி தொடர் இல்லாததாகவும் உள்ளன.
1. அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதா வது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார் கள்: "மூன்று (அடையாளங்கள்) வெளிப்பட்டுவிட்டால், அதற்கு முன் ஈமான் கொள்ளாதவருக்கோ அல்லது தனது ஈமானின் மூலம் நன்மையைச் சம்பாதிக்காதவருக்கோ அவரின் ஈமான் பயனளிக்காது: (அவை) சூரியன் அது மறையும் இடத்திலிருந்து உதிப்பது, தஜ்ஜால் மற்றும் பூமியிலிருந்து வெளிப்படும் பிராணி." [மிஷ்கத் அல்-மசாபிஹ் 5467; ஸஹீஹ் முஸ்லிம் : 158].
2. அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பூமியிலிருந்து ஒரு மிருகம் வெளிப்படும். அதனுடன் சுலைமான் (அலை) அவர்களின் மோதிரமும் மூஸா (அலை) அவர்களின் கைத்தடியும் இருக்கும். அது விசுவாசியின் முகத்தைப் பிரகாசமாக்கும், மேலும் நிராகரிப்பவனின் மூக்கில் மோதிரத்தால் முத்திரையிடும். ஒரு உணவு மேசையைச் சுற்றி மக்கள் ஒன்று கூடும்போது கூட (அவர்கள் அடையாளம் காணப்படுவார்கள்). அப்போது, 'இதோ! ஓ முஃமினே!' என்றும், 'இதோ! ஓ காஃபிரே!' என்றும் (அவர்கள் அடையாளம் காணப்பட்டு) அழைக்கப்படுவார்கள். மேலும், 'இவர் காஃபிர்!' என்றும், 'இவர் முஃமின்!' என்றும் (மக்கள் ஒருவரை யொருவர் சுட்டிக்காட்டி) கூறுவார்கள்." ஜாமிஉத் திர்மிதீ : 3187
3. அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஆறு விஷயங்கள் (நிகழ்வதற்கு) முன் நற்செயல்கள் புரிவதற்கு விரையுங்கள். (அவை): தஜ்ஜால், புகை, பூமிப் பிராணி, சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, பொதுவான விவகாரம் (மறுமை நாள் அல்லது பெரும் அழிவு), மற்றும் உங்களில் ஒருவருடைய தனிப்பட்ட விவகாரம் (மரணம்)." [ஸஹீஹ் முஸ்லிம் : 2947 b].
இப்னு காதிர் தனது தஃப்ஸீரில் பின்வரும் தகவல்களை வழங்கி யுள்ளார்:
வெளிப்படும் இடம்:
இந்த விலங்கு மற்றவைகளைப் போல் பிறக்காது. தல்ஹா இப்னு உமர் (ரலி) அபு தாவூத் தயலிசி கூறுவதாவது: இந்த மிருகம் மக்காவில் சாரா மலையிலிருந்து வெளிப்படும், மேலும் அதன் தலையிலிருந்து தூசியை சுத்தம் செய்த பினா புனித கருங்கல்லுக்கும் மகாமே இப்ராஹிம் இடையிலான ஒரு இடத்தினை அடையும். இந்த உயிரினத்தைக் கண்டதும், மக்கள் தலை தெரிக்க ஓடத் தொடங்குவார்கள். ஒரு குழு மக்கள் மட்டுமே தங்கி இருப்பார்கள். பின்னர் மிருகம் அவர்கள் முகங்களை நட்சத்திரங்களைப் போல மின்னச் செய்யும். அதன் பிறகு அது உலகில் வெளியே சென்று, ஒவ்வொரு காஃபிரின் முகத்திலும் காஃபிரின் அடையாளத்தை வைக்கும். அதன் பிடியிலிருந்து யாராலும் வெளியேற முடியாது. "அது ஒவ்வொரு விசுவாசியையும் காஃபிரையும் அடையாளம் காணும்."
அதன் தோற்றம்:
இந்த மிருகம் அசாதாரண மானது, விசித்திரமானது. இப்னு அஸ்-ஜுபைர் இந்த மிருகத்தை, "அதன் தலை ஒரு காளையின் தலை போன்றது, அதன் கண்கள் ஒரு பன்றியின் கண்கள் போன்றவை, அதன் காதுகள் யானையின் காதுகள் போன்றவை, அதன் கொம்புகள் ஒரு மானின் கொம்புகள் போன்றவை, , அதன் கழுத்து ஒரு தீக்கோழியின் கழுத்து போன்றது, அதன் மார்பு சிங்கத்தின் மார்பு போன்றது, அதன் நிறம் ஒரு புலியின் நிறம் போன்றது, அதன் கைகள் ஒரு பூனையின் கைகள் போன்றது, அதன் வால் ஒரு ஆட்டுக்கடாவின் வால் போன்றது, அதன் கால்கள் ஒட்டகத்தின் கால்கள் போன்றது. அதன் ஒவ்வொரு ஜோடி மூட்டுகளுக்கும் இடையில் பன்னிரண்டு முழ தூரம் உள்ளது." என்று விவரித்துள்ளார்.
அல்லாஹ்விற்குத் தான் நன்றாகத் தெரியும்!
الحمدلله
No comments:
Post a Comment