வி-5
ரமலான் வினா - விடை
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
5. நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம். தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை. (96:15 &16). யார் அவன்?
விடை: அபூ ஜஹல்
அபு ஜஹல் மக்காவின் மிகவும்
சக்திவாய்ந்த, செல்வாக்கு மிக்க தலைவன். ஆணவம் கொண்டவன். கருணை என்பதே அறவே அற்றவரன். இஸ்லாத்தின்
மீதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மீது கடும் பகைமையையும் வெறுப்பையும் வளர்த்து தன்
கொடூரத்தை அவ்வப்போது காட்டி பிறரையும் அவ்வாறே கட்டளையிடும் குணம் கொண்டவன்.
அறிவிலும் ஞானத்திலும் சிறந்த அபூ ஜஹல் குர்ஆனின் சொல் நயத்தில் மயங்கி, ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுகையின் போது குர்ஆன் வாசிப்பதை ஒளிந்து நின்று ரசிப்பான். இஸ்லாத்தைப் பற்றிய உண்மையை அவன் உணர்ந்திருந்தாலும், அவனது கௌரவமும், தன் குலப் பெருமையும் அவனை ஒரு விசுவாசியாக மாறவிடாமல் தடுத்தது.
பனூ மக்ஸும் (அபூ ஜஹலின் குலம்) அந்தஸ்தையும், உன்னதத்தையும் அடைய எல்லாவற்றிலும் பனூ ஹாஷிமுடன் (நபியின் குலம்) போட்டியிட்டனர். ‘பனூ ஹாஷிமிலிருந்து ஒரு நபி வந்துள்ளார், வானத்திலிருந்து வெளிப்பாடுகளை இறக்கப் பெறுகிறார். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் அவரை ஒருபோதும் நம்ப மாட்டோம், அவருடைய உபதேசத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்!"
என அடிக்கடி தங்கள் இயலாமையை காட்டிக் கொள்வான். தன்னைத் தானே போதுமானவன் என்று கருதி, மற்றவர்களின் தொழுகையைத் தடுக்க பல தடவை முயற்சித்தான். அல்லாஹ் எச்சரிக்கை மற்றும் அச்சுறுத்தல் மூலம், அவன் தனது கொடூர செய்கைகளை நிறுத்தா விட்டால், அவனது நெற்றியை ஒரு பொய்யான, பாவமுள்ள நெற்றியாக மாற்றுவோம் என்ற வசனத்தை இறக்கினான்! அல்லாஹ் அஸ்வஜல் அவனை பொய்யர் என்று குர்ஆனில் பதிவு செய்து விட்டான்.
அரபு கலாச்சாரத்தில் நெற்றி முடியை பிடித்து இழுப்பது என்பது ஒரு அவமானகரமான மற்றும் அதிகாரபூர்வமான அல்லது ஒருவனை முழுமையாகக் கட்டுப்படுத்தும் செயலாகும். வேறு இரண்டு இடங்களிலும் அல்லாஹ் குர்ஆனில் நெற்றி முடியை இழுப்பது பற்றி குறிப்பிடுகிறான்.:"எந்த உயிர்ப் பிராணியா யினும் அதன் முன்நெற்றி உரோமத்தை அவன் பிடித்தவனாகவே இருக்கின்றான்; (11:56). "குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள் (55:41)
ஒரு படைப்பாளன் தான் ஒன்றை படைக்கும் போது எதற்காக, எப்படி படைக்கிறான் என்பதை அறிவாரன். நரம்பியல் பற்றிய ஆய்வுகள், நெற்றிக்குப் பின்னால் உள்ள மூளை முடிவெடுப்பது, திட்டமிடுவது மற்றும் தன்னார்வ மற்றும் அறிவாற்றல் நடத்தைகளைக் கட்டுபடுத்துவதற்கான மையமாகும். ஒரு நபர் பொய் அல்லது ஏமாற்றுவதில் ஈடுபடும்போது இந்த பகுதி மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதை MRI ஸ்கேன் காட்டுகிறது.
அதனால்தான் அல்லாஹ் நம்மை ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டு சிரம் பணிதலை கட்டாயம் ஆக்கியுள்ளான. ஒருவர் ஒவ்வொரு முறை ஸஜ்தா செய்யும்போதும் அல்லாஹ் அவர்களை சரியான சிந்தனைக்கு வழிநடத்துகிறான். பணிவாகவும் தம்மையே சமர்பிப்பவராகவும் ஆக்குகிறான்.
الحمدلله
No comments:
Post a Comment