வி-6
ரமலான் வினா - விடை
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
6. ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்: “என் இறைவன் அல்லாஹ்வே தான்!” என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? (40:28) இவ்வாறு கேட்ட நபர் யார்?
இந்த முஃமின் ஃபிர்அவ்னின் குடும்பத்தைச் சேர்ந்த எகிப்தியர். ஃபிர்அவ்னின் தந்தைவழி ஒன்று விட்ட சகோதரர் இவர், தனது விசுவாசத்தை தனது மக்களிடமிருந்து மறைத்தார். ஃபிர்அவ்ன், "மூசா (அலை) அவர்களைக் கொல்ல என்னை விட்டுவிடு" என்று கூறிய நாளில் ஃபிர்அவுனுக்கும் அவனுடைய அரசியல் பிராதானிகளுக்கும் உபதேசித்தார்.
சூரா முஃமின் 26 வானத்திலிருந்து 45-வது வசனத்தின் சாரம்:
அவர் ஃபிர்அவுனின் அவையோரிடம் கேட்டார்: "என் இறைவன் அல்லாஹ் என்று ஒரு மனிதன் கூறியதற்காக நீங்கள் அவனைக் கொல்வீர்களா?" மேலும் விளக்கினார், "மூசா (அலை) பொய்யர் என்றால், அவர் பொய் அவருக்கு பாவத்தை விளைவிக்கும்; ஆனால் அவர் உண்மையைச் சொன்னால், அவர் அச்சுறுத்தும் சில துன்பங்கள் உங்கள் மீது ஏற்படும். எனவே நீங்கள் அவரையும் அவரது மக்களையும் தனியாக விட்டுவிட வேண்டும், அவர்களுக்கு தீங்கு விளைவிக்காதீர்கள்." என கேட்டுக் கொண்டார்.
அவர் மேலும் தொடர்ந்தார், "அல்லாஹ் இந்த ராஜ்ஜியத்தையும், பூமியில் ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும், உங்களுக்கு அருளியுள்ளான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதன் மூலமும், அவருடைய தூதரை நம்புவதன் மூலமும், அல்லாஹ்வின் தண்டனையைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பதன் மூலமும் இந்த அருளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்."
இவ்வாறு அவர் ஃபிர்அவ்னின் பக்கம் சேர்ந்தவர் போலவும், தனது மக்களுக்கு நல்வாழ்வை மட்டுமே விரும்புவது போலவும் பேசினார்.
ஃபிர்அவ்ன் தனது மக்களிடம், "எனக்கு நல்லது என்று நான் நினைப்பதை மட்டுமே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்" என்று கூறினார். ஆனால் ஃபிர்அவ்ன் ஒரு பொய்யை இட்டுக்கட்டிவிட்டான். அவன் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்ப மறுத்து, மேலும் தனது மக்களை நேர்மையாக அறிவுரை கூறாமல் நேர் வழி செல்லவிடாமல் தடுத்தான்.
அவர்களது செயல்களின் தீமை அவர்களை சரியான பாதையிலிருந்து தடுத்தது. மேலும் ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அவர்களுக்கு இழப்பு மற்றும் அழிவைத் தவிர வேறொன்றையும் ஏற்படுத்தவில்லை.
ஆனால் ஃபிர்அவ்னும் அவரது பிரமுகர்களும், மக்களும் பிடிவாதமாக நடந்து கொண்டபோது, அவர் தான் மறைத்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
அவர் கூறினார்: “என் மக்களே! என்னைப் பின்பற்றுங்கள், நான் உங்களுக்கு நன்னெறியின் பாதையில் வழிகாட்டுவேன். இந்த உலக வாழ்க்கை ஒரு இன்பத்தைத் தவிர வேறில்லை, ஆனால் மறுமை நிரந்தரமான வீடு. நல்ல விசுவாசிகள் சொர்க்கத்தில் நுழைவார்கள்."
அவர் அவர்களை இரட்சிப்பின் பக்கம் அழைத்தார். வல்லமையுள்ள, மன்னிப்பவனின் பக்கம் அழைத்தார், ஏனெனில் நாம் எல்லோரும் அல்லாஹ்விடமே திரும்புவோம்.
இறுதியாக அவர் அவர்களிடம், "நான் என் காரியத்தை அல்லாஹ்விடம் விட்டுவிடுகிறேன். நிச்சயமாக, அல்லாஹ் (தன்) அடியார்களைப் பார்ப்பவனாக இருக்கின்றான்." என்றார்.
அவர்கள் (அவருக்கு எதிராக) சூழ்ச்சி செய்த தீமைகளிலிருந்து அல்லாஹ் அவரைக் காப்பாற்றினான், அதே நேரத்தில் ஒரு தீய வேதனை ஃபிர்அவ்னின் மக்களைச் சூழ்ந்தது.
"ஜிஹாதில் சிறந்தது ஒரு அநீதியான ஆட்சியாளருக்கு முன் நீதியான வார்த்தையைப் பேசுவதாகும்" என்று கூறும் ஹதீஸின் சிறந்த எடுத்துக்காட்டு இந்த விசுவாசி. மூஸா (அலை) முடன் காப்பாற்றப்பட்ட பாரா (Pharah) அவர்தான்.
குர்ஆனில் அவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. சில இஸ்லாமிய மரபுகள் மற்றும் அறிஞர்கள் அவர் பெயர் ஹிஸ்கீல் அல்லது ஹெஸகீல் (حزقيل) என்று குறிப்பிடுகின்றனர்.
الحمدلله
No comments:
Post a Comment