Friday, February 27, 2026

வி-8

                      ரமலான் வினா -விடை                 

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

8. அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? (2:258) யார் அந்த அரசன்?

விடை: பாபிலோனின் மன்னர் நிம்ரோத்

நெருப்பிலிருந்து அல்லாஹ்வின் அருளால் அற்புதமாகத் தப்பித்த பிறகு, இப்ராஹிம் (அலை) அந்நாட்டு மன்னரிடம் கொண்டு வரப்பட்டார். இப்ராஹிம் (அலை) உடன் தகராறு செய்த மன்னன், கானானின் மகன், குஷின் மகன், சாமின் மகன், நூஹ் (அலை)மின் மகன் என்று முஜாஹித் கூறினார்.

நிம்ரோத் தன்னைத் தவிர வேறு கடவுள் இருப்ப தை நினைத்துக் கூட. அவன் கலகக்காரன், ஆணவம் கொண்டவன் அத்துமீறி நடப்பவன், வெகு நீண்ட காலம் நாட்டை ஆட்சி செய்தான். அல்லாஹ் அவனுக்கு அரசாட்சியை  கொடுத் ததால், அல்லாஹ் இருக்கிறார் என்பதற்கான ஆதாரத்தை காட்டுமாறு  இப்ராஹிம் (அலை) அவர்களிடம் கேட்டுக் கொண்டான்.

அவன் நபி இப்ராஹிம் (அலை) அவர்களிடம் "உங்கள் இறைவன் யார்?" என்று கேட்டான். இப்ராஹிம் (அலை) அவர்கள், "என் இறைவன் உயிர் கொடுத்து மரணத்தை ஏற்படுத்துபவன்" (2:258) என்று பதிலளித்தார்.

நிம்ரோத் ஆணவத்துடனும் தான், தான் படைப் பாளன் என்று கூறி, நான் உயிரைக் கொடுப்பேன் மரணத்தையும் ஏற்படுத்துவேன் என்று  பெருமை கொண்டான்.

நிம்ரோது தன்னைத் தவிர வேறு எந்த சக்தி வாய்ந்த படைத்தவரையும் நினைத்துக் கூட பார்த்ததில்லை. "மரணதண்டனைக்கு தகுதியான இரண்டு மனிதர்களை வரவழைத்து, அவன் அவர்களில் ஒருவரைக் கொல்ல உத்தரவிட்டாரன், இரண்டாவது மனிதனை மன்னித்தான்"   "இப்படித் தான் நான் உயிரையும் மரணத்தையும் கொண்டு வருகிறேன்" என்று நிரூபித்தான்.

பின் இப்ராஹிம் (அலை) நிம்ரோதிடம், "நிச்சய மாக, அல்லாஹ் கிழக்கிலிருந்து சூரியனைக் கொண்டு வருகிறான்; நீ அதை மேற்கிலிருந்து உதிக்கச் செய்" என்றார்.  அதனால் அவன் [ஆச்சரி யத்தில்] வாயடைத்துப் போனான். மேலும் அல்லாஹ் அக்கிரமக்காரர்களை வழி நடத்துவதில்லை. [2:258]

அரசரன் தனது பலவீனம், இயலாமை ஆகியவற்றை அறிந்திருந்த தாலும், இப்ராஹிம் (அலை)மின் வேண்டுகோளுக்கு பதிலளிக்க முடியாததால், கருத்து தெரிவிக்காமல்  அமைதியாகி விட்டான்

அவனுக்கு எதிரான ஆதாரம் நிறுவப்பட்டது. அவரன் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டான். அல்லாஹ்வின் கோபத்தை அனுபவித்தான்அவனது மூளைக்குள் நுழைந்த ஒரு சிறிய பூச்சியால் கடுமையான வேதனையை அனுபவித் தான். எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!

الحمدلله



No comments:

Post a Comment

வி -8                        ரமலான் வினா -விடை                  السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ...