20.
அல்லாஹ் நபி (ﷺ) அவர்களுக்கு
"தஹஜ்ஜுத் தொழுகையைத் தொழுது வருவீராக!" என்று கட்டளையிட்டான். அதனால்
அவருக்கு கிடைப்பது:
a) இந்த உலகத்தில் உயர்ந்த அந்தஸ்து.
b) இறைவனின் கருணை
c) 'மகாமே மஹ்மூத்' என்ற சிறந்த தலம்/அந்தஸ்து.
d) தன் இறைவனின் எல்லா திருவருட்களும்.
பதில்:
c) 'மகாமே மஹ்மூத்' என்ற
சிறந்த தலம்/அந்தஸ்து.
பின்
அல்லாஹ், நபி (ﷺ) அவர்களை
தினமும், உபரியாக இந்த இரவு தொழுகையை அதாவது 'தஹ்ஜுத்' தொழ கட்டளையிட்டான். இதனால் அவருடைய இறந்த கால, வருங்கால பாவங்களை மன்னிப்பதுடன் மகிமை மிக்க புகழுக்குரிய நிலையையும், உயிர்
கொடுத்து எழுப்பும் நாளில் தருவதாக வாக்களித்துள்ளான். "இன்னும் இரவில் (ஒரு
சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக. (இதன் பாக்கியத்தினால்( உம்முடைய இறைவன்,
'மகாமே மஹ்மூத்' என்னும்
(புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும் " (17:79)
இப்னு காதிர் கூறுகிறார், இறை தூதர், உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் நபி (ﷺ) அவர்கள் அவரது உயர்ந்த நன்னடத்தை காரணமாக சில சலுகைகளை பெறுவார். அவை பூமியிலுள்ள யாவரையும் விட முதலாவதாக உயிர் கொடுத்து எழுப்பப்படுவார். பின் எல்லோரும் குழுமி இருக்கும் இடத்திற்கு வருவார் அவர் பதாகையின் (banner) கீழ் ஆதம் (அலை) முதல் கடைசி மனிதர்கள் வரை உள்ள எல்லா மனிதர்களும் பிறந்த போது இருந்தது போல் வெறுங்கால்களுடன் பிறந்த மேனியராய் கூடுவர்.
அல்லாஹ்,
'ஓ முஹம்மத்!' என்று
அழைக்க, அதற்கு அவர் உடனே கூறுவார்: " நான்
தங்களுக்கு பணி செய்ய காத்துக் கொண்டுள்ளேன்!
எல்லா நன்மைகளும் உங்கள் கையில் எந்த தீமையும் உங்களை அண்டாது. நல்வழியின்
சென்றவன் உம்மால் வழிநடத்தி செல்பவன். உங்கள் அடிமை, உங்களால்,
உங்கள் முன் நிற்கிறேன் ! உம்மால் தான் நாங்கள்
இரட்சிக்கப்படுகிறோம். உம்மிடமே நாங்கள் அடைக்கலம் தேடுகின்றோம். நீர் ஆசிர்வதிக்கப்பட்டவர், உயர்ந்தவர். காபாவின்
இறைவனே உம்மை நாம் மகிமை படுத்துகிறோம்.
!" அப்போது எல்லா படைப்பினங்களும் அல்லாஹ்வை மகிமை படுத்தும். அதோடு அவை முஹம்மது (ﷺ) அவர்களின்
புகழையும் மகிமையையும் கூறும். இதை தான் அல்லாஹ் மகாமே மஹமூத் என்று
குறிப்பிடுகின்றான். இப்னு அப்பாஸ் இதை “பரிந்துரைக்கும் தகுதி/உரிமை” என்று
கூறுகிறார்.
பின்னர்
அல்லாஹ், அங்கு கூடியிருக்கும் தன் படைப்பினங்களுக்கு
நீதியை வழங்குவார். நிறைய மனிதர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். அவர்கள்
ஆதம் (அலை) மிடம், பின்
நூஹ் (அலை) மிடம், பின்
இப்ராஹிம் (அலை) மிடம், பின் ஈஸா (அலை) மிடம் என்று ஒவ்வொருவரிடமும் சென்று பரிந்துரைக்க கோருவர். அவர்கள் ஒவ்வொருவரும்
தங்களால் இயலாது என்று கூறிவிடுவர் பின் அவர்கள் யாவரும் முஹம்மது நபி (ﷺ) அவர்களிடம்
வருவர்.
இப்னு
ஜரீர் கூறுகிறார்: " பெரும்பாலான வர்ணனையாளர்களின் வர்ணனைப்படி,
"மறுமை நாளில் நபி (ﷺ) அவர்களுக்கு
கிடைக்கும் இந்த தகுதிற்குத்தான் மகாமே
மஹ்மூத் என்று கூறுகின்றனர். . கஷ்டப்படும் தன் உம்மத்திற்கு அல்லாஹ்விடம்
பரிந்துரை செய்து அவர்களை சுவனபதி கிடைக்கும்படி செய்வார்.'' அவருக்கு மட்டும் தான் இந்த "பெரிய பரிந்துரை" செய்யும்
உரிமை வழங்கப்படும்.
இன்னொரு
அறிவிப்பில் நபி (ﷺ) கூறினார், "அவர்கள்
என்னிடம் வருவார்கள். ஓ முஹம்மத்! நீர் அல்லாஹ்வின் தூதர், இறுதி நபி! அல்லாஹ் உங்கள் கடந்த கால மற்றும் வருங்கால பாவங்களை
எல்லாம் மன்னித்தான்! எங்களுக்காக
உம் இறைவனிடம் பரிந்துரைப்பீராக! நீங்கள் பார்க்கவில்லையா நாங்கள் எவ்வளவு
கஷ்டத்தில் இருக்கிறமென்று?”
நான் அல்லாஹ்வின் அர்ஷிற்கு கீழ்,
முன்னால் வருவேன். அவர் முன் ஸஜ்தாவில் வீழ்வேன், அல்லாஹ் யாருக்குமே கற்றுக் கொடுக்காத
சில வார்த்தைகளை, எனக்கு
கற்று கொடுப்பான். நான் அந்த வார்த்தைகளால்
அவனை புகழ்ந்து பாராட்டுவேன். அல்லாஹ் கூறுவான், ஓ
முஹம்மத்! உம் தலையை நிமிர்த்தும்!
பேசும்! பரிந்துரைக்கும் தகுதியை உமக்கு கொடுக்கின்றோம் நீர் கேளும். உமக்கு கொடுக்கப்படும். பரிந்துரைப்பீர்! உம்
பரிந்துரை ஏற்கப்படும்." நான்
கூறுவேன், " ஓ இறைவா! என் உம்மத், என் உம்மத்". அவர் கூறுவார், நரகத்திற்கு
போய் யார் உள்ளத்தில் மிகச் சிறிய பார்லி
மணியளவு இறைநம்பிக்கை இருக்கிறதோ அவர்களை நரக நெருப்பிலிருந்து கூட்டி கொண்டு
வாரும்!" ஆகையால் நான் சென்று அது போல் செய்வேன்!
பிறகு நான் திரும்பி வந்து அந்த புகழ் மிக்க வார்த்தைகளை கூறி புகழ்ந்து, அவன் முன்னிலையில் ஸஜ்தாவில் வீழ்வேன். அல்லாஹ் கூறுவான், ஓ முஹம்மத்! உம் தலையை நிமிர்த்தும்! பேசும்! பரிந்துரைக்கும் தகுதியை உமக்கு கொடுக்கின்றோம் நீர் கேளும். உமக்கு கொடுக்கப்படும். பரிந்துரைப்பீர்! உம் பரிந்துரை ஏற்கப்படும்." நான் கூறுவேன், " ஓ இறைவா ! “என் உம்மத், என் உம்மத்". அவர் கூறுவார், நரகத்திற்கு போய் யார் உள்ளத்தில் மிகச் சிறிய எறும்பு அல்லது கடுகளவு இறைநம்பிக்கை இருக்கிறதோ அவர்களை நரக நெருப்பிலிருந்து கூட்டி கொண்டு வாரும்!" ஆகையால் நான் சென்று அது போல் செய்வேன்!
பிறகு நான் திரும்பி வந்து அந்த புகழ் மிக்க வார்த்தைகளை கூறி புகழ்ந்து, அவன் முன்னிலையில் ஸஜ்தாவில் வீழ்வேன். அல்லாஹ் கூறுவான், "ஓ முஹம்மத்! உம் தலையை நிமிர்த்தும்! பேசும்! பரிந்துரைக்கும் தகுதியை உமக்கு கொடுக்கின்றோம் நீர் கேளும். உமக்கு கொடுக்கப்படும். பரிந்துரைப்பீர்! உம் பரிந்துரை ஏற்கப்படும்." நான் கூறுவேன், " ஓ இறைவா! என் உம்மத், என் உம்மத்". அவர் கூறுவார் நரகத்திற்கு போய் யார் உள்ளத்தில் மிக மிக லேசான கடுகளவு இறைநம்பிக்கை இருக்கிறதோ அவர்களை நரக நெருப்பிலிருந்து கூட்டி கொண்டு வாரும்!" ஆகையால் நான் சென்று அது போல் செய்வேன்! (ஸஹீஹ் அல் புகாரி, 7510)
ஜாபிர்
பின் அப்துல்லாஹ் பதிவு செய்துள்ளார் நபி (ﷺ) கூறினார்:,
"யார் அஜானை செவி மடுக்குகிறார்களோ அவர்கள்
கூறட்டும்,
اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّداً الْووَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَاماً مَحْمُوداً الَّذِي وَعَدْتَهُ، إَنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ.
"ஓ அல்லாஹ், இந்த முழுமையான அழைப்பின் மற்றும் தொழப் போகும் தொழுகையின் இறைவனே! முஹம்மத் (ﷺ) அவர்களுக்கு உன் நெருக்கத்தையும், மிகச் சிறந்த வெகுமதியையும், நீ வாக்குறுதி அளித்தது போல் அவரை உயிர்த்தெழவைக்கும் போது அவருக்கு மகாமே மஹ்மூத் அளிப்பாயாக! எனக்காக கூலி கொடுக்கும் மறுமை நாளில் அவர் பரிந்துரைக்க வேண்டுகின்றேன்." (ஸஹீஹ் அல் புகாரி, 614)
அல்லாஹ்
திருக்குர்ஆனில் தஹஜ்ஜுத் பற்றி இந்த வசனங்களில் குறிப்பிட்டு உள்ளான்:
(இரவில்) உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு நீர் தஸ்பீஹ் செய்வீராக." (50:39-40).
தஹஜ்ஜுத்தை
இரவின் கடைசி மூன்றில் ஒரு பாகத்தில் தொழுவது சாலச்சிறந்தது. ஏனெனில் நபி
(ﷺ) அவர்கள் கூறுகிறார், "இரவின் கடைசி மூன்றில் ஒரு பாகத்தில் அல்லாஹ் ஒவ்வொரு இரவும் கீழே உள்ள வானத்திற்கு இறங்குகின் றான். அப்போது கூறுவான், " யார் என்னை அழைகின்றார்களோ அவர்களுக்கு நான் பதிலளிப்பேன்! யார் என்னிடம் கேட்கிறாரோ அவர்களுக்கு கொடுப்பேன். யார் மன்னிப்பு
கேட்கிறாரோ அவரை நான் மன்னிப்பேன்!"
(ஸஹீஹ் புகாரி,1145
மற்றும் ஸஹீஹ் முஸ்லிம்,
1261 ).
இவ்வாறு அல்லாஹ் கூறினாலும் அல்லாஹ்வின் கருணை நம் மீது எந்நேரமும்
இருக்கும்.
அல்லாஹ்
தஹ்ஜ்ஜுத்தை கட்டாயமாக்காமல் விரும்பினால் தொழுமாறு நபி (ﷺ) அவர்களின்
உம்மத்திற்கு கூறியுள்ளான . அதனை தொழுதால் அவர்கள் செய்த பாவத்தை மட்டும்
மன்னிக் கின்றான்
இந்த தொழுகையை விரும்பி தொழுவோருக்கு அல்லாஹ்வின் அருகாமை கிடைக்கும் மன அழுத்தம் உள்ளவருக்கு மனச்சாந்தியை அளிக்கும். அது மனத் தைரியத்தையும், பொறுமையையும் கொடுத்து அன்றாடம் நடக்கும் பிரச்சனையை எதிர்கொள்ள வைக்கும். ஆகையால் இரவின் கடைசி மூன்றில் ஒரு பாகத்தில் விழித்தெழுந்து தொழுவீர்களானால் இம்மையிலும் மறுமையிலும் மகத்தான வெற்றியை அடைவீர்!
No comments:
Post a Comment