Sunday, June 9, 2024

2. ஹஜ் கேள்வி-பதில்.

السلام عليكم ورحمة الله وبركاتة 

  بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

2. விளக்குக:

அ. நான்கு புனித மாதங்கள்

ஆ. தல்பியா

இ. மிகாத்

ஈ. தருவியா நாள்

உ. நஹர் நாள்

ஊ. தஷ்ரீக் நாட்கள்

எ. ஹாதி

அ. நான்கு புனித மாதங்கள்:

"நிச்சயமாக அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை. (ரஜப், துல் கதா,  துல் ஹிஜ்ஜா மற்றும் முஹர்ரம்). (9:36)

இந்த நான்கு புனித மாதங்களில் அநீதி இழைப்பது, கீழ்படியாமை, போர் செய்வது ஆகியவை பெரும் பாவங்கள் ஆகும். இவற்றை இந்த புனித மாதங்களில் செய்தால் அதற்குரிய தண்டனை கடுமையாகவும் அதிகமாகவும் இருக்கும்.

அல்லாஹ் கூறுகின்றான்: "(நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்" (2:217)

அரேபியாவில் இந்த நடைமுறை இஸ்லாம் தொடங்குவதற்கு முன்னரே இருந்தது. ஏனெனில் இந்த மாதங்களில் யாத்ரீகர்களும், வியாபாரிகளும் வணக்க வழிப்பாட்டிற்காகவும், வியாபாரத்திற்காகவும் அதிகமாக வருவதால், அவர்கள் குழப்பமின்றி சாந்திசமாதானத்துடன் தன் காரியங்களை நிறைவேற்றி பாதுகாப்பாக தங்கள் இல்லங்களில் அடைய ஏதுவாக இருந்தது. ஆனால் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறிய படி, "(போர் செய்யக்கூடாது என்ற தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது; இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் போர் புரிவ)தை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்;) மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன; அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான்." (9:37). இஸ்லாம் தோன்றிய பிறகு இம்மாதங்களின் புனித தன்மை இன்னும் அதிகமாக கடைப்பிடிக்கப்பட்டது.

ஆகவே இந்த புனித நான்கு மாதங்களின்  முக்கியத்துவத்தையும் அதன் பயன்களையும் உணர்ந்து,  அல்லாஹ்வின் மீதுள்ள நம் விசுவாசத்தையும் புதுப்பித்து, அர்ப்பணிப்பையும் அதிகரித்து  நம் வாழ்வின் தரத்தை உயர்த்த முயலவேண்டும்.

ஆ. தல்பியா

அப்துல்லாஹ் பின் உமர் (ரஜி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் தல்பியா: 'லப்பைக அல்லாஹும்ம லப்பைக், லப்பைக லா ஷரிகா லக லப்பைக், இன்னா-ல்-ஹம்தா வன்-நி'மாத லக வல்மு எல்கே, லா ஷரிகா லக' (அல்லாஹ் உனது அழைப்புக்கு நான் பதிலளிக்கிறேன், உனது அழைப்புக்கு நான் பதிலளிக்கிறேன். மற்றும் உனது கட்டளைகளுக்கு நான் கீழ்ப்படிகிறேன், உனக்கு துணை இல்லை, உனது அழைப்புக்கு நான் பதிலளிக்கிறேன், அனைத்து புகழும் ஆசீர்வாதங்களும் உனக்கே, எல்லா இறையாண்மையும் உனக்கே, உனக்கு இணையானவர்கள் யாரும் இங்கு இல்லை." [ஸஹி புகாரி, தொகுதி 2, புத்தகம் 26, எண் 621]

தல்பியா என்ற இந்த பக்தி மிக்க பிரார்த்தனையை ஹஜ் மற்றும் உம்ரா செல்லும் யாத்ரீகர்கள் இஹ்ராம் அணிந்தவுடன் தொடங்குகிறார்கள். ஆண்கள் உரக்கவும், பெண்கள் மெதுவாகவும்  அடிக்கடி இந்த யாத்திரை முழுவதும் கூறுவது சுன்னாவாகும்.

முஸ்லிம்கள் மக்காவில் நிறைவேற்றக்கூடிய இபாதத்கள் அனைத்தையும் கலப்படமில்லாமல் அல்லாஹ்விற்காக நிறைவேற்றவேண்டும். அவனுக்கு எந்த ஒன்றையும் இணையாக்கக்கூடாது. இந்த பேருண்மையை ஹஜ்ஜின் துவக்கத்தில் தல்பியாவின் மூலம் பகிரங்கப் படுத்துகிறார்கள்.

"எவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் நம்பிக்கையுடன் (இணைவைத்தல் என்னும்) அநியாயத்தையும் கலந்து விடவில்லையோ அவர்களுக்கே நிச்சயமாக பாதுகாப்பு உண்டு. அவர்கள்தான் நேர்வழியாளர்கள்” (6:82) என்ற அல்லாஹ்வின் வசனத்தை தல்பியா கூறுவதன் மூலம் உண்மை படுத்துகிறார்கள்.

தல்பியா கூறுவதால் உலகத்து செயல்களில் அதிக கவனம் செலுத்தாமல் முழுக்க முழுக்க இறைவனின் நினைவிலேயே ஹஜ்ஜை நிறைவேற்ற ஏதுவாக உள்ளது.

இ. மிகாத்

மிகாத் என்பது "ஒரு குறிப்பிட்ட இடம்".  உம்ரா மற்றும் ஹஜ் செல்லும் யாத்ரீகர்கள், புனித நகரமான மக்காவிற்கு நுழையும் முன் தொழுது, நிய்யத் செய்து இஹ்ராம் அணியும் இடம். இந்த இடங்கள், புனித யாத்திரை செய்பவர்களின் எல்லையை நிர்ணயிக்கும் குறியீடுகளாக அமைந்துள்ளன.

இப்னு அப்பாஸ் அறிவிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர்  ﷺ : "துல் ஹுலைஃபாவை மதீனாவாசிகளுக்கு மிகாத் என்று நிர்ணயித்துள்ளார். ஷாம் மக்களுக்கு அல்-ஜுஹ்ஃபா; மற்றும் நஜ்த் மக்களுக்கான கர்ன் உல்-மனாசில்; யமன் நாட்டு மக்களுக்கு யாலம்லாம். எனவே, அந்த இடங்களில் வசிக்கும் அனைவருக்கும் இவை (மேலே குறிப்பிடப்பட்டவை) மவாகித் ஆகும், மேலும் ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் நோக்கத்துடன் அந்த இடங்கள் வழியாக வருபவர்களுக்கும், இந்த இடங்களுக்குள் வசிப்பவர்கள் தங்கள் வசிப்பிடத்திலிருந்து இஹ்ராம் எடுக்க வேண்டும். , மற்றும் இதேபோல் மக்கா மக்கள் மக்காவில் இருந்து இஹ்ராம் எடுத்துக் கொள்ளலாம். [ஸஹீஹ் புகாரி, 1526].

                             

நபி ﷺ அவர்களுக்குப் பிறகு இஸ்லாம் மற்ற நாடுகளுக்கும் பரவ, கலீஃபா உஸ்மான் (ரஜி) அவர்கள் ஈரான், ஈராக் மற்றும் அந்த திசையில் இருந்து வருபவர்களுக்கான மிகாத்தாக தாட் இர்க் என்ற இடத்தை நிர்ணயித்தார்.

மக்காவில் நுழைந்த இஹ்ராம் களைந்த யாத்ரீகர்கள் மஸ்ஜிதே தானீம் என்றழைக்கப்படும் ஆயிஷா மஸ்ஜிதுல் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம்.

ஈ. தர்வியாஹ் நாள்:

துல் ஹிஜ்ஜாவின் எட்டாம் நாள் தர்வியாஹ் நாள் என்று அழைக்கப் படுகிறது. இப்னு உமர் கூறியதாக  வாபறாஹ் சொல்ல அபு இஸ்ஹாக் பதிவு செய்துள்ளார்: "ஒருவர்  தர்வியாஹ் நாளிலும், அதற்கு முதல் நாளிலும், அரஃபாத் நாளிலும் நோன்பு நோற்கலாம்"

உ. நஹர் நாள்:

துல் ஹிஜ்ஜாவின் பத்தாம் நாள், நஹர் நாள் என்று அழைக்கப்படுகிறது. இந்நாளை ஈதுல்-அதா என்றும் கூறுவர். அந்த வருடத்தின் மிகச் சிறந்த நாள் என்று அது கருதப்படுகிறது. இந்நாளில் யாத்திரை செய்யும்  ஹாஜிகளும் யாத்திரை செய்யாதவர்களும் தக்பீர் (அல்லாஹீ அக்பர்) கூறி, ஈத் தொழுகை தொழுது பின் நேர்ச்சை செய்த பிராணிகளை பலி கொடுப்பர். அதை உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து தாமும் உண்பர்.

அல்லாஹ் கூறுகின்றான்: "இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்." (22:36)

(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!" (22:37)

ஊ. தஷ்ரீக் நாட்கள்:

துல்-ஹஜ்ஜின் 11-12-13-வது நாட்களைத தஷ்ரீக் நாட்கள் என்று கூறுவர். குர்ஆனிலுள்ள இந்த ஆயத் இத்தஷ்ரீக் நாட்களை குறிப்பிடுகிறது என்று இப்னு அப்பாஸ் (ரஜி) கூறுகிறார்: "குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும் (மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை; யார் (ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை; (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது); அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்." (2:203)

இந்த நாட்கள், கடவுளை நினைவு கூறுவதற்கும், கொண்டாடுவதற்கும் ஒதுக்கபபட்டவை. யாத்ரிகர்கள் இந்நாட்களில் நோன்பு நோற்பதை தவிர்க்க வேண்டும். நபி ﷺ அவர்கள் கூறினார்: " இந்த நாட்களில் நோன்பு நோற்க வேண்டாம், ஏனெனில் இவை உண்பதற்கு, பருகுவதற்கும் அல்லாஹ்வை நினைவுகூர்வதற்கும் ஒதுக்கப்பட்டவை" [அஹ்மத், 10286]

எ. ஹாதி:

ஹாதி என்பது நஹ்ர் நாளில் முஸ்லிம்கள் (யாத்ரீகர்கள் மற்றும் யாத்ரீகர்கள் அல்லாதவர்கள்) நன்றி தெரிவிக்கும் வகையில்  பிராணியை பலி கொடுப்பதாகும். நபி இப்ராஹிம் (அலை) தனது மகன் இஸ்மாயிலை (அலை) அல்லாஹ்விற்காக பலியிட விரும்பியதை நினைவுகூரும் வகையில் ஹாதி மேற்கொள்ளப்படுகிறது. ஹஜ்ஜின் போது பிராணி பலி கொடுப்பது  கடமை என பின்வரும் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது: "ஹஜ் மற்றும் உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானி கொடுத்தல் வேண்டும்" (2:196)

ஆயிஷா (ரஜி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மனிதன் நஹ்ர் நாளில் செய்யும் செயல்களில்  அல்லாஹ்வுக்கு மிகவும்  பிரியமான இரத்தம் சிந்தும்  செயலை விட எந்தச் சிறந்த செயலையும் செய்வதில்லை.   கியாமத் நாளில் அது கொம்புகள், முடிகள், குளம்புகளுடன் வெளிப்படும், மேலும் அந்த இரத்தம் பூமியில் விழுவதற்கு முன்பே அது எங்கிருந்து பெறப்படுகிறதோ அந்த இரத்தம் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படும், எனவே உங்கள் இதயம் அதில் மகிழ்ச்சியடையட்டும். [சுனன் அல்-திர்மிதி, 1493]

இப்னு அப்பாஸ் கூறினார்: "ஹாதியில் எட்டு வகையான (ஆண் மற்றும் பெண் உட்பட) விலங்குகள் அடங்கும்:

• ஒட்டகம்,

• மாடு,

• ஆடு மற்றும்

• செம்மறி ஆடு.''

ஒரு செம்மறியாடு அல்லது ஆடு பலியிடலாம். அதற்கு மாற்றாக ஒரு ஒட்டகமாகவோ அல்லது ஒரு மாடாகவோ இருந்தால், ஏழு பேர் கூட்டு சேர்ந்து பலியிடலாம். ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு அல்லது பெரிய விலங்குகளில் ஏழில் ஒரு பங்கோ போதுமானது.

அப்துர்-ரஸ்ஸாக் கூறினார்: "ஒருவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுக்கலாம்" என்று அல்-அவ்ஃபி கூறினார்: "ஒருவரால் வாங்க முடிந்தால், ஒட்டகங்கள், இல்லையெனில் விலையைப் பொறுத்து மாடுகள் அல்லது ஆடுகள்."

பலியிடும் விலங்கு ஆரோக்கியமாகவும், ஊனமற்றதாகவும் இருக்க வேண்டும். உடல் நலம் குன்றியதாகவும், காயப்பட்ட,  உடைந்த கொம்புகள் அல்லது பற்கள்  கொண்ட விலங்குகள் தவிர்க்கப்பட வேண்டும். 

الحمدلله

  

 

2. Hajj Q and A:

 السلام عليكم ورحمة الله وبركاتة 

  بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

2. What is (are)

a. The four Holy months

b. Thalbia

c.  Miqat

d. Day of Tharwiyah

e. Day of nahr

f. Days of Tashriq:

g. Hady


a. The four Holy months:

"Indeed, the number of months with Allah is twelve [lunar] months in the register of Allah [from] the day He created the heavens and the earth; of these, four are sacred.  [Rajab, Dhu'l-Qadah, Dhu'l-Hijjah and Muharram]." (9:36).

Injustice, disobedience and fighting in these four Sacred Months is the greatest sin.  During these months its punishment is more severe and greater. Allah says: “They ask you about the sacred month – about fighting therein. Say, “Fighting therein is great [sin], but averting [people] from the way of Allah and disbelief in Him are greater [sins]…” (2:217).

In Arabia this practice was implemented before Islam because during these months, pilgrims and merchants, could perform their worship and trade peacefully and could return home safely. But as Allah says in Quran: "Those who disbelieve are led astray, violating it one year and keeping it sacred another, that they may agree in the number (of months) that Allah has made sacred, and thus violate what Allah has made sacred; the evil of their doings is made fair seeming to them" (9:37). Islam made this to follow as a strict rule.

By understanding and appreciating the importance and significance of these four sacred months, we can better our lives by renewing our faith and commitment to Allah.

b. Thalbia:

Narrated 'Abdullah bin 'Umar (RA) : The Talbiya of Allah's Apostle ﷺ was : 'Labbaika Allahumma labbaik, Labbaika la sharika Laka labbaik, Inna-l-hamda wan-ni'mata Laka walmu Lk, La sharika Laka'

"I respond to Your call, O Allah, I respond to Your call, and I am obedient to Your orders, You have no partner, I respond to Your call All the praises and blessings are for You, All the sovereignty is for You, And You have no partners with you". [Sahih Bukhari, Volume 2, Book 26, Number 621].

It is the devotional prayer of those who perform Hajj and Umrah. They start reciting this prayer as soon the wear ihram, men loudly and women softly. Reciting frequently throughout the journey is Sunna.

By reciting this prayer, the Muslims are praising and thanking Allah all along their journey and proclaiming the great truth of Allah's Oneness throughout their worship of Hajj. This prayer keeps the pilgrims in a state of purity and get rid of unnecessary worldly affairs.

Thalbia is the practical evidence to the ayath of Allah: "Those who believe and do not mix up their faith with iniquity, those are they who shall have the security and they are those who go aright." (6:82)

c. Miqat:

Miqat means "a stated place", where the pilgrims pray, intend to do Hajj or Umra and wear ihram. It marks the boundary points for pilgrims permissible to pass in the state of Ihram.

Narrated Ibn `Abbas (RA): Allah's Messenger (ﷺ) had fixed Dhul Hulaifa as the Miqat for the people of Madhina; Al-Juhfa for the people of Sham; and Qarn Ul-Manazil for the people of Najd; and Yalamlam for the people of Yemen. So, these (above mentioned) are the Mawaqit for all those living at those places, and besides them for those who come through those places with the intention of performing Hajj and `Umra and whoever lives within these places should assume Ihram from his dwelling place, and similarly the people of Mecca can assume lhram from Makka." (Sahih al-Bukhari 1526).

As Muslim realm expanded during the Califathae Umar (RA), Dhat  lrq was added later for those coming in the direction of Iran, Iraq..

 Masjid Aisha, also known as Masjid Taneem, located about 8 km from the Kaaba and 5 km away from Makkah, in the direction of Madinah is the Miqat for the residence of Makka.

                        

                                  Taken from              https://images.app.goo.gl/ncZUPuSBispSCVRk6

As Muslim realm expanded during the Califathae Umar (RA), Dhat  lrq was added later. Masjid Aisha, also known as Masjid Taneem, located about 8 km from the Kaaba and 5 km away from Makkah, in the direction of Madinah is the Miqat for the residence of Makka.

d.Day of Tharwiyah:

It is the eighth day of Dhul-Hijjah. Abu Ishaq reported from Wabarah from Ibn Umar who said, "One fasts one day before the day of Tarwiyah, the day of Tarwiyah (eighth day of Dhul-Hijjah) and then Arafah day (the ninth day of the month of Dhul-Hijjah).'' 

e. Day of Nahr:

The 10th of Dhul Hijjah is also called the Yawm al-Nahr. The Day of Nahr is the day of 'Eid AlAdh-ha', the Day of the Great Hajj and the best day of the entire year. Both pilgrims and non-pilgrims perform prayer, Takbeer (saying Allahu- Akbar), slaughtering the sacrificial animals.

Allah says, "And (as for) the camels, We have made them of the signs of the religion of Allah for you; for you therein is much good; therefore mention the name of Allah on them as they stand in a row, then when they fall down eat of them and feed the poor man who is contented and the beggar; thus have We made them subservient to you, that you may be grateful." (22:36).

"Their meat will not reach Allah, nor will their blood, but what reaches Him is piety from you. Thus have We subjected them to you that you may glorify Allah for that [to] which He has guided you; and give good tidings to the doers of good." (22:37)

f. Days of Tashriq:

The 11-12-13th day of Dhul-Hijjah are called as the Tashriq days -  three days after to the Day of Nahr. According to Ibn ‘Abbaas they are the days meant in the verse of Allah: "Celebrate the praises of Allah during the Appointed Days. But if anyone hastens to leave in two days, there is no blame on him, and if anyone stays on, there is no blame on him, if his aim is to do right. Then fear Allah, and know that ye will surely be gathered unto Him." (2:203)

These days are considered days of celebration and worship. It is not recommended for the pilgrims to fast on these days.The Prophet said: “Do not fast on these days, for they are the days of eating, drinking and remembering Allah.” [Ahamad, 10286]

g. Hady:

It is the animal sacrifice done as an expression of gratitude by Muslims (both pilgtoms and non-pilgrims) on the day of Nahr. Hady is carried out in remembrance of the prophet Ibrahim’s (AS) willingness to sacrifice his son Ismail (AS).

The obligation of having to perform the sacrifice during Hajj is stipulated in the following verse: "And whosoever performs the Umrah in the months of Hajj, before (performing) the Hajj, (i.e. Hajj al-Tamattu and Hajj al-Qiran), must sacrifice a Hady such as is easy (i.e. that you can afford)" [Surah al-Baqarah, 2:196]

Ayesha (RA) narrates: The Messenger of Allah ﷺ said: ‘A human does no action from the actions on the day of Nahr more beloved to Allah than spilling blood. On the Day of Judgement, it will appear with its horns, and hair, and hooves, and indeed the blood will be accepted by Allah from where it is received before it even falls upon earth, so let your heart delight in it.’ [Sunan al-Tirmidhi]

Ibn Abbas (RA) said: "The Hady includes eight (including male and female) types of animals:

• camels,

• cows,

• goats and

• sheep.''

For sacrifice a sheep or goat or alternatively seven can share if it is a camel or a cow can be used. For non-pilgrims one for one family is enough.

Abdur-Razzaq reported that Ibn Abbas (RA) said: "As much as one could afford.'' Al-Awfi said that Ibn Abbas said, "If one can afford it, then camels, otherwise cows, or sheep.'' `Depending on the price.'

The sacrificing animal should be healthy and free of any defects. Lame, disabled, visibly sick. emaciated, infirm and injured (broken horns or teeth) animals are avoided. 

الحمدلله

Saturday, June 8, 2024

1. ஹஜ் கேள்வி-பதில்.

السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ  

1. ஹஜ் என்றால் என்ன? இஸ்லாத்தில் எத்தனை வகையான ஹஜ்கள் உள்ளன? உம்ராவிற்கும் ஹஜ்ஜிற்கும் என்ன வித்தியாசங்கள்?

ஹஜ்:

ஹஜ் என்பது செளதி அரேபியாவின் மக்காமா நகரத்தில் உள்ள  அல்லாஹீதாலாவின் புனித வீட்டைக் அடைந்து சில சம்பிரதாயங்களை செய்து அல்லாஹ்வின் மன்னிப்பை பெறும் புனித பயணமாகும். இது இஸ்லாத்தின் தலையாய  ஐந்து கடமைகளில் கடைசி கடமையாகும். இதன் சம்பிரதாயங்கள் துல் – ஹிஜ்ஜாவின் (பக்ரித்) 7-ம் நாள் தொடங்கி 12 அல்லது 13-ம் நாள் முடிவடையும்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:

"(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது." (3:96).

"அதற்கு (ச் செல்வதற்கு) ரிய பாதையில் பயணம் செய்ய (உடலாலும், செல்வத்தாலும்) சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ் விற்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்." (3:97)

அல்லாஹ் இதை இப்ராஹீம் (அலை) மற்றும் அவர்கள் குடும்பத்தினர் செய்தவற்றை மதச்சடங்காக பின்பற்ற கட்டளையிட்டுள்ளான்:

"நாம் இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து “நீர் எனக்கு எவரையும் இணைவைக்காதீர்; என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் ருகூஃ, ஸுஜூது செய் (து தொழு) வோருக்கும், அதைத் தூய்மையாக்கி வைப்பீராக” என்றும்;

"ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்)."

"தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல் (லி குர்பானி கொடுப்) பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்." என்றும்;

"பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை “தவாஃபும்” செய்ய வேண்டும் என்றும்;

"விக்கிரகங்களின் அசுத்தத்திலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அன்றியும் பொய்யான சொல்லையும் நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்." என்றும் கேட்டுக் கொள்கின்றான். (அல் குர்ஆன்: 22: 26 to 30).

இப்ராஹீம் (அலை) மற்றும் அவர்கள் குடும்பத்தினர் செய்த காரியங்கள் தான் முஸ்லிம்களுக்கு ஹஜ் செய்ய முன்னோடியாய் அமைந்துள்ளன:

1. ஹஜ் நிறைவேற மினா மற்றும் அரஃபாத் செல்வது.

2. ஷைத்தானை விரட்ட ஜம்ரத்தில் கல்லெரிதல்.

3. அல்லாஹ்வின் கட்டளைப்படி தன் ஓரே மகனான இஸ்மாயில் (அலை) பலி கொடுக்க, பிராணிகளை பலி கொடுத்தல் ஹாஜிகளுக்கு கடமை ஆக்கப்பட்டது.

4. இப்ராஹீம் (அலை) மற்றும் இஸ்மாயில் (அலை) கட்டிய காபாவை சுற்றி வருதல், அல்லாஹ்வின் அத்தாட்சியான மகாமே இப்ராஹிமில் இரண்டு

ரகாஅத் தொழுதலும் கடமையாக்கப்பட்டது.

5. பீபி ஹாஜர் தண்ணீர் தேடி ஸஃபா மர்வா மலைகளிடையே ஓடியதை போல், ஹாஜிகள் ஸயீ செய்யவும் சம்பிரதாயமாக ஆக்கப்பட்டது.

6. இதையெல்லாம் செய்து முடித்த ஹாஜிகள் அன்பும் கருணையும் கொண்ட அல்லாஹ்வால் மன்னிக்கப்படுகின்றனர்.

 

ஹஜ்ஜின் கிரியைகள்:

துல்- ஹிஜ்ஜாவின் 7-ம் நாள் ஹாஜிகள் ஹஜ் செய்ய நிய்யத் கொண்டு, மிகாத்தில் இஹ்ராம் அணிந்து, தல்பியா கூறிக்கொண்டு, காபாவை வலம் வந்து, ஸயீ செய்து, தன் முடியை வெட்டி மக்காவில் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை செய்கின்றனர்.

எட்டாம் நாள், அவர்கள் மக்காவிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மினாவில் தங்கி தொழுது, பிரார்த்தித்து, துவா கேட்டு அல்லாஹ்வை வணங்குகின்றனர்.

அங்கிருந்து 9-ம் நாள் காலை 15 கிலோ மீட்டர் தூரமுள்ள அரஃபாத் மைதானத்தை அடைய வேண்டும். அங்கு ஜுஹர் மற்றும் அஸர் தொழுகையை ஒருங்கே தொழுதுவிட்டு, ஜிக்ர் செய்தபின் ஜபலே ரஹ்மத் என்ற மலைக் குன்றிலோ அதன் கீழுள்ள மைதானத்திலோ நின்று அல்லாஹ்விடம் தன் தேவைகளை முறையிட்டு மன்னிப்பு கோரி உகுஃப் செய்ய வேண்டும். இது தான் ஹஜ்ஜின் பிரதான கட்டம்.

சூரிய அஸ்தமனம் தொடங்கு முன் அரஃபாத் மைதானத்தை விட்டு 11 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள முஸ்தலிஃபா சென்று எந்நேரமானாலும் பாங்கு ஓதி, மக்ரீப் மற்றும் இஷா தொழுகை செய்து அந்த திறந்த வெளியில் சிறிது தூங்கி இளைப்பாறலாம். அங்கு மணலிலுள்ள 49 சிறிய கற்களை பொறுக்கி எடுத்துக் கொண்டு.காலை ஃபஜர் தொழுதுவிட்டு மினாவை நோக்கிச் செல்லகின்றனர்.

அன்றைய தினம் (10-ம் நாள்) ஜம்ரத் சென்று மூன்று ஷைத்தானின் தூண்களில் கல் எறிகின்றனர். மினாவில் இரண்டு நாட்கள் (11, 12) தங்கி விலங்கை. பலி கொடுத்துவிட்டு முடி இறக்கி/ வெட்டி இஹ்ராம் களை கின்றனர். வேண்டும். மினாவில் தங்கி இருக்கும் ஒவ்வொரு நாளும்  ஜம்ரத் சென்று கல்லெறிய வேண்டும். அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறவேண்டும்.

மக்கா திரும்பிய 13-ம் நாள் காபாவை தவ்வாஃப் செய்து ஸயீ  நிறைவேற்றி ஹஜ்ஜை பூர்த்தி செய்ய வேண்டும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்விற்காகவே ஹஜ் செய்தால் அவனுடைய தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாப் பாலகனாகத்) திரும்புவான்.' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஸஹிஹ் புகாரி, புத்தகம்: 25,1521)

ஹஜ் என்பது மூன்று வகை பட்டது:

ஹஜ்-உல் இஃப்ராத்

ஹஜ்-உல் கிரான்

ஹஜ்-உல் தமாத்து'

ஹஜ்-உல் இஃப்ராத்:

★ மக்கா மற்றும் சுற்றியுள்ள மலைகளில் வசிப்பவர்களால் செய்யப்படும் ஹஜ்.

★ இந்த வகை ஹஜ் செய்பவர் முஃப்ரித் என்று அழைக்கப்படுகிறார்.

★ அவர்கள் உம்ரா செய்யாமல் ஹஜ் மட்டும் செய்வர்.

★ அவர்கள் இஹ்ராம் அணிந்து, காபாவை சுற்றிய பிறகு ஸயீ செய்து, தலை முடியை வெட்டாமல், மினா மற்றும் அரஃபாத்தில் செய்ய வேண்டியதை செய்து, மீனா திரும்பி, ஜமாரத்தின் மீது கல்லெறிந்த பின் இஹ்ராமை விட்டு வெளியேறுவர்.

★ ஒரு முஃப்ரிட் ஒரு விலங்கை பலி கொடுக்கலாம். ஆனால் அது அவர் மீது   கடமை இல்லை.

ஹஜ்-உல் கிரான்:

★ உம்ராவுடன் இணைந்து இருப்பதால், ஹஜ்-உல் கிரான் என்று இது அழைக்கப்படுகிறது.

★ இந்த வகை ஹஜ் செய்பவர் காரீன் என்று அழைக்கப்படுகிறார்.

★ இந்த வகை ஹஜ் மஸ்ஜிதுல்-ஹராமிலிருந்து விலகி வசிப்பவர்களுக்கு அல்லாஹீதாலா ஹஜ் மற்றும் உம்ரா இரண்டையும் ஒரே பயணத்தில் செய்ய வழங்கும் சலுகையாகும்.

★ இரண்டிற்கும் இடையிலான கால அளவைப் பொருட் படுத்தாமல், இஹ்ராமில் இருந்து  முதலில் உம்ராவும் பின்னர் ஹஜ் செய்யவும் வேண்டும்.  

 

 

 

 

 

★மக்காவின் மஸ்ஜிதுல்-ஹராமை அடைந்ததும், காரீன் தவாஃப் மற்றும் ஸயி செய்த பிறகு யாத்ரீகர் தனது தலைமுடியை கத்தரித்துக் கொள்ளலாம் ஆனால் ஹஜ் செய்யும் வரை ஷேவ் செய்யக்கூடாது. பின் அவர்கள், மினா, மற்றும் அரபாத் சென்று, மினா திரும்பி ஜம்ரத்தில் கல் எறிந்து பிராணியைப் பலியிட்ட பிறகு, முடி இறக்கி அல்லது வெட்டி இஹ்ராம் களைய வேண்டும்.

ஹஜ்-உல் தமாத்து':

★ மக்காவிலிருந்து 48 மைல்களுக்கு மேல் வசிப்பவர்களால் மட்டுமே செய்யப்படும் ஹஜ்.

★ ஹஜ்-உல் தமத்து' செய்யும் யாத்ரீகரை முட்டாமாட்டி என்பர்.

★ இந்த வகை ஹஜ் உம்ரா மற்றும் ஹஜ் இரண்டையும் இணைக்கிறது.

★ உம்ராவைச் செய்தபின், அவர்கள் இஹ்ராமிலிருந்து வெளியேறி, துல்-ஹிஜ்ஜா வின் எட்டாம் தேதி ஹஜ்ஜுக்குச் செல்லும் போது மீண்டும் ஒரு புதிய இஹ்ராமில் நுழைகிறார்கள். மினா, அரஃபாத், முஸ்தலிபா சென்ற பின் மினா திரும்பி ஜம்ரத்தில் கல்லெறிய வேண்டும்

★ ஹஜ்-உல் கிரானைப் போலவே, இந்த ஹஜ்ஜை நிறைவேற்றும் போது ஒரு முட்டாமாட்டி விலங்கு பலியிட்ட பிறகு முடிவெடுக்க இஹ்ராம் களைய வேண்டும்.

ஹஜ் மற்றும் உம்ரா இடையே உள்ள வேறுபாடுகள்:

● முக்கிய வேறுபாடு என்னவென்றால், ஹஜ் செய்வது ஒரு கடமை.  உம்ரா என்பது  சுன்னா.

● உம்ரா சடங்குகளை 5 அல்லது 6 மணிநேரங்களில் செய்யலாம், ஹஜ் முடிக்க 5 அல்லத 6 நாட்கள் ஆகும்.

● மேலும், ஹஜ், துல்-ஹிஜ்ஜா மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே செய்ய முடியும், ஆனால் உம்ரா ஹஜ் நாட்கள் தவிர ஆண்டு முழுவதும் செய்ய முடியும்.

الحمدلله

   

 

1. Hajj Q and N

 السلام عليكم ورحمة الله وبركاتة   

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ    

1. What is Hajj? How many types of Hajj are there in Islam? What are the differences between Umrah and Hajj?

Hajj:

It is the sacred journey to the house of Allah Subhanahuthala at Makka located in Saudhi Arabia. It is undertaken to get the closeness and forgiveness of Allah. It is the fifth most important duty of Muslims. It is obligatory to those who can afford it. It starts from the 7th day of Dhul-Ḥijjah and ends on the 12th or 13th day.

Allah says in Quran: "Most surely the first house appointed for men is the one at Bekka (Makka), blessed and a guidance for the nations."(3:96). "Pilgrimage to this House is an obligation by Allah upon whoever is able (physically and financially) among the people.” (3:97).

Allah made this as a ritual by Ibrahim (AS) and his family:

"And when We assigned to Ibrahim (AS) the place of the House, saying: Do not associate with Me aught, and purify My House for those who make the circuit and stand to pray and bow and prostrate themselves.

And proclaim among men the Pilgrimage: they will come to you on foot and on every lean camel, coming from every remote path,

That they may witness advantages for them and mention the name of Allah during stated days over what He has given them of the cattle quadrupeds, then eat of them and feed the distressed one, the needy.

Then let them accomplish their needful acts of shaving and cleansing, and let them fulfill their vows and let them go round the Ancient House.

That (shall be so); and whoever respects the sacred ordinances of Allah, it is better for him with his Lord; and the cattle are made lawful for you, except that which is recited to you, therefore avoid the uncleanness of the idols and avoid false words" [Al-Hajj, 22:26 to 30].

The Muslims follow the acts of the highly submissive family of Prophet Ibrahim (AS), the friend (Khaleel) of Allah as Hajj rituals:

1. Going to Mina and Arafath to perform Hajj.

2. Stoning at Jamrath to drive away Shaithan.

3. Giving animal sacrifice, as Ibrahim (AS) readily obeyed Allah's command of sacrificing his only son (at that time) Ismail (AS).

4. Performing tawaf around Kaba built by Ibrahim (AS) and Ismail (AS) and praying at Maqamae Ibrahim, which is the Allah's greater sign.

5. Performing Sa'i between mounts Safa and Marwa as Bibi Hajr did.

6. By performing these rituals the Muslims become completely forgiven from their sins by the Kind and Most Merciful Allah Subhanahuthala.

Rituals of Hajj:

On seventh day of Dhul- Hijjah the persons going for Hajj makes a pure intention and enter into ihram –  sacred state – at the Miqat. By reciting thalbia, they reach Makkah, they perform tawaf around Kaba. They also perform Sa’i. And shave their head or shorten the hair.

On the 8th of Dhull- Hijjah, they move to Mina, the tent city, 8km away from Makka. As Allah says, they spent their time in praying, remembering Allah and supplicating.

On the 9th of Dhull- Hijja pilgrims move to Arafath, 15km away from Mina. The Zuhar and Asr prayers are performed together at noon. After the zikre, from noon to sunset the pilgrims stand before Allah praying and supplicating in and around Jabalae-Rahamath. This is called wuquf, the main ritual of Hajj.

At sunset the pilgrims headed towards Muzdalifah, an open place 11km away from Arafath. As they arrive at different times, everyone will pray Magrib and Isha prayers together and they can rest in that open area. They collect 49 small pebbles and after performing Fajr prayers they walk towards Mina. Staying there and they remember Allah much.

On the 10th of Dhull- Hijjah they visit Jamrath, throw 7 pebbles over the three columns in Jamrath.

The 11th and 12th of this month, they stay in Mina, repeating the stoning in Jamrath every day and waiting for the sacrifice of their animal. If the sacrifice is over they can shave their head or shorten their hair and can come out from ihram.

On 13th they return to Makka and perform final thawaf and sa'i. Thus their Hajj become completed.

The Prophet Muhammad (SAW) said, “Whoever performs Hajj to this Kaaba and does not approach his wife for sexual relations nor commit sins (while performing Hajj), he will come out as sinless as a newborn child, (just delivered by his mother).” [Sahih al-Bukhari]

There are three types of Hajj:

Hajj-ul Ifrad

Hajj-ul Qiran

Hajj-ul Tamattu’

Hajj-ul Ifrad:

★ it is for those who live in and around Makka.

★ it is not accompanied by Umrah.

★ The pilgrim who performs this, is called Mufrid.

★ They perform all the rituals of Hajj at Makka, Mina, Arafath, Muzthalifa and Jamrath.

★ They stay in Ihram till stoning in Jamrath. 

★ A Mufrid can offer an animal sacrifice; eventhough there is no obligation to do so.

Hajj-ul Qiran:

★ It is combined with Umrah.

★The pilgrim who performs this kind of Hajj is called Qarin

★ It is for those who live away from the Masjid al-Haram.

★ They perform both Hajj and Umrah in a single visit and with single ihram, irrespective of the length of duration between the two rituals.

★ After performing Umrah, the pilgrim can trim his hair but not shave until he performs Hajj.

★They then follow all the rituals of Hajj in Mina and Arafath, sacrifice their animal and shave head or cut the hair short and end ihram.

Hajj-ul Tamattu‘:

★ Those are living 48km away from Makka perform this type of Hajj.

★ This type also combines both Umrah and Hajj.

★ But after performing Umrah, they can come out from ihram and wear new ihram for Hajj.

★ they go to Mina, Arafath, Muzthalifa, come back to Mina and perform animal sacrifice [obligatory] and they exit from ihram after it.

Difference between Umrah and Hajj:

 ● Umrah is sunnah and Hajj is farz.

● Umrah can be performed throughout the year.

● But Hajj is performed in fixed days of Dhull- Hijjah.

● Umrah will be completed within 5 or 6 hours.

● To complete Hajj it requires five or six days.

الحمدلله

 

  திராட்சைத் தோட்ட மும்   ஆடுக ளும்  السلام عليكم ورحمة الله وبركاتة   بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ وَدَاوٗدَ وَسُلَيْمٰنَ اِذْ ...