Saturday, June 8, 2024

1. ஹஜ் கேள்வி-பதில்.

السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ  

1. ஹஜ் என்றால் என்ன? இஸ்லாத்தில் எத்தனை வகையான ஹஜ்கள் உள்ளன? உம்ராவிற்கும் ஹஜ்ஜிற்கும் என்ன வித்தியாசங்கள்?

ஹஜ்:

ஹஜ் என்பது செளதி அரேபியாவின் மக்காமா நகரத்தில் உள்ள  அல்லாஹீதாலாவின் புனித வீட்டைக் அடைந்து சில சம்பிரதாயங்களை செய்து அல்லாஹ்வின் மன்னிப்பை பெறும் புனித பயணமாகும். இது இஸ்லாத்தின் தலையாய  ஐந்து கடமைகளில் கடைசி கடமையாகும். இதன் சம்பிரதாயங்கள் துல் ஹிஜ்ஜாவின் (பக்ரித்) 7-ம் நாள் தொடங்கி 12 அல்லது 13-ம் நாள் முடிவடையும்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:

"(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது." (3:96).

"அதற்கு (ச் செல்வதற்கு) ரிய பாதையில் பயணம் செய்ய (உடலாலும், செல்வத்தாலும்) சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ் விற்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்." (3:97)

அல்லாஹ் இதை இப்ராஹீம் (அலை) மற்றும் அவர்கள் குடும்பத்தினர் செய்தவற்றை மதச்சடங்காக பின்பற்ற கட்டளையிட்டுள்ளான்:

"நாம் இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து “நீர் எனக்கு எவரையும் இணைவைக்காதீர்; என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் ருகூஃ, ஸுஜூது செய் (து தொழு) வோருக்கும், அதைத் தூய்மையாக்கி வைப்பீராக” என்றும்;

"ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்)."

"தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல் (லி குர்பானி கொடுப்) பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்." என்றும்;

"பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை “தவாஃபும்” செய்ய வேண்டும் என்றும்;

"விக்கிரகங்களின் அசுத்தத்திலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அன்றியும் பொய்யான சொல்லையும் நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்." என்றும் கேட்டுக் கொள்கின்றான். (அல் குர்ஆன்: 22: 26 to 30).

இப்ராஹீம் (அலை) மற்றும் அவர்கள் குடும்பத்தினர் செய்த காரியங்கள் தான் முஸ்லிம்களுக்கு ஹஜ் செய்ய முன்னோடியாய் அமைந்துள்ளன:

1. ஹஜ் நிறைவேற மினா மற்றும் அரஃபாத் செல்வது.

2. ஷைத்தானை விரட்ட ஜம்ரத்தில் கல்லெரிதல்.

3. அல்லாஹ்வின் கட்டளைப்படி தன் ஓரே மகனான இஸ்மாயில் (அலை) பலி கொடுக்க, பிராணிகளை பலி கொடுத்தல் ஹாஜிகளுக்கு கடமை ஆக்கப்பட்டது.

4. இப்ராஹீம் (அலை) மற்றும் இஸ்மாயில் (அலை) கட்டிய காபாவை சுற்றி வருதல், அல்லாஹ்வின் அத்தாட்சியான மகாமே இப்ராஹிமில் இரண்டு

ரகாஅத் தொழுதலும் கடமையாக்கப்பட்டது.

5. பீபி ஹாஜர் தண்ணீர் தேடி ஸஃபா மர்வா மலைகளிடையே ஓடியதை போல், ஹாஜிகள் ஸயீ செய்யவும் சம்பிரதாயமாக ஆக்கப்பட்டது.

6. இதையெல்லாம் செய்து முடித்த ஹாஜிகள் அன்பும் கருணையும் கொண்ட அல்லாஹ்வால் மன்னிக்கப்படுகின்றனர்.

 

ஹஜ்ஜின் கிரியைகள்:

துல்- ஹிஜ்ஜாவின் 7-ம் நாள் ஹாஜிகள் ஹஜ் செய்ய நிய்யத் கொண்டு, மிகாத்தில் இஹ்ராம் அணிந்து, தல்பியா கூறிக்கொண்டு, காபாவை வலம் வந்து, ஸயீ செய்து, தன் முடியை வெட்டி மக்காவில் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை செய்கின்றனர்.

எட்டாம் நாள், அவர்கள் மக்காவிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மினாவில் தங்கி தொழுது, பிரார்த்தித்து, துவா கேட்டு அல்லாஹ்வை வணங்குகின்றனர்.

அங்கிருந்து 9-ம் நாள் காலை 15 கிலோ மீட்டர் தூரமுள்ள அரஃபாத் மைதானத்தை அடைய வேண்டும். அங்கு ஜுஹர் மற்றும் அஸர் தொழுகையை ஒருங்கே தொழுதுவிட்டு, ஜிக்ர் செய்தபின் ஜபலே ரஹ்மத் என்ற மலைக் குன்றிலோ அதன் கீழுள்ள மைதானத்திலோ நின்று அல்லாஹ்விடம் தன் தேவைகளை முறையிட்டு மன்னிப்பு கோரி உகுஃப் செய்ய வேண்டும். இது தான் ஹஜ்ஜின் பிரதான கட்டம்.

சூரிய அஸ்தமனம் தொடங்கு முன் அரஃபாத் மைதானத்தை விட்டு 11 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள முஸ்தலிஃபா சென்று எந்நேரமானாலும் பாங்கு ஓதி, மக்ரீப் மற்றும் இஷா தொழுகை செய்து அந்த திறந்த வெளியில் சிறிது தூங்கி இளைப்பாறலாம். அங்கு மணலிலுள்ள 49 சிறிய கற்களை பொறுக்கி எடுத்துக் கொண்டு.காலை ஃபஜர் தொழுதுவிட்டு மினாவை நோக்கிச் செல்லகின்றனர்.

அன்றைய தினம் (10-ம் நாள்) ஜம்ரத் சென்று மூன்று ஷைத்தானின் தூண்களில் கல் எறிகின்றனர். மினாவில் இரண்டு நாட்கள் (11, 12) தங்கி விலங்கை. பலி கொடுத்துவிட்டு முடி இறக்கி/ வெட்டி இஹ்ராம் களை கின்றனர். வேண்டும். மினாவில் தங்கி இருக்கும் ஒவ்வொரு நாளும்  ஜம்ரத் சென்று கல்லெறிய வேண்டும். அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறவேண்டும்.

மக்கா திரும்பிய 13-ம் நாள் காபாவை தவ்வாஃப் செய்து ஸயீ  நிறைவேற்றி ஹஜ்ஜை பூர்த்தி செய்ய வேண்டும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்விற்காகவே ஹஜ் செய்தால் அவனுடைய தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாப் பாலகனாகத்) திரும்புவான்.' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஸஹிஹ் புகாரி, புத்தகம்: 25,1521)

ஹஜ் என்பது மூன்று வகை பட்டது:

ஹஜ்-உல் இஃப்ராத்

ஹஜ்-உல் கிரான்

ஹஜ்-உல் தமாத்து'

ஹஜ்-உல் இஃப்ராத்:

மக்கா மற்றும் சுற்றியுள்ள மலைகளில் வசிப்பவர்களால் செய்யப்படும் ஹஜ்.

இந்த வகை ஹஜ் செய்பவர் முஃப்ரித் என்று அழைக்கப்படுகிறார்.

அவர்கள் உம்ரா செய்யாமல் ஹஜ் மட்டும் செய்வர்.

அவர்கள் இஹ்ராம் அணிந்து, காபாவை சுற்றிய பிறகு ஸயீ செய்து, தலை முடியை வெட்டாமல், மினா மற்றும் அரஃபாத்தில் செய்ய வேண்டியதை செய்து, மீனா திரும்பி, ஜமாரத்தின் மீது கல்லெறிந்த பின் இஹ்ராமை விட்டு வெளியேறுவர்.

ஒரு முஃப்ரிட் ஒரு விலங்கை பலி கொடுக்கலாம். ஆனால் அது அவர் மீது   கடமை இல்லை.

ஹஜ்-உல் கிரான்:

உம்ராவுடன் இணைந்து இருப்பதால், ஹஜ்-உல் கிரான் என்று இது அழைக்கப்படுகிறது.

இந்த வகை ஹஜ் செய்பவர் காரீன் என்று அழைக்கப்படுகிறார்.

இந்த வகை ஹஜ் மஸ்ஜிதுல்-ஹராமிலிருந்து விலகி வசிப்பவர்களுக்கு அல்லாஹீதாலா ஹஜ் மற்றும் உம்ரா இரண்டையும் ஒரே பயணத்தில் செய்ய வழங்கும் சலுகையாகும்.

இரண்டிற்கும் இடையிலான கால அளவைப் பொருட் படுத்தாமல், இஹ்ராமில் இருந்து  முதலில் உம்ராவும் பின்னர் ஹஜ் செய்யவும் வேண்டும்.  

 

 

 

 

 

மக்காவின் மஸ்ஜிதுல்-ஹராமை அடைந்ததும், காரீன் தவாஃப் மற்றும் ஸயி செய்த பிறகு யாத்ரீகர் தனது தலைமுடியை கத்தரித்துக் கொள்ளலாம் ஆனால் ஹஜ் செய்யும் வரை ஷேவ் செய்யக்கூடாது. பின் அவர்கள், மினா, மற்றும் அரபாத் சென்று, மினா திரும்பி ஜம்ரத்தில் கல் எறிந்து பிராணியைப் பலியிட்ட பிறகு, முடி இறக்கி அல்லது வெட்டி இஹ்ராம் களைய வேண்டும்.

ஹஜ்-உல் தமாத்து':

மக்காவிலிருந்து 48 மைல்களுக்கு மேல் வசிப்பவர்களால் மட்டுமே செய்யப்படும் ஹஜ்.

ஹஜ்-உல் தமத்து' செய்யும் யாத்ரீகரை முட்டாமாட்டி என்பர்.

இந்த வகை ஹஜ் உம்ரா மற்றும் ஹஜ் இரண்டையும் இணைக்கிறது.

உம்ராவைச் செய்தபின், அவர்கள் இஹ்ராமிலிருந்து வெளியேறி, துல்-ஹிஜ்ஜா வின் எட்டாம் தேதி ஹஜ்ஜுக்குச் செல்லும் போது மீண்டும் ஒரு புதிய இஹ்ராமில் நுழைகிறார்கள். மினா, அரஃபாத், முஸ்தலிபா சென்ற பின் மினா திரும்பி ஜம்ரத்தில் கல்லெறிய வேண்டும்

ஹஜ்-உல் கிரானைப் போலவே, இந்த ஹஜ்ஜை நிறைவேற்றும் போது ஒரு முட்டாமாட்டி விலங்கு பலியிட்ட பிறகு முடிவெடுக்க இஹ்ராம் களைய வேண்டும்.

ஹஜ் மற்றும் உம்ரா இடையே உள்ள வேறுபாடுகள்:

முக்கிய வேறுபாடு என்னவென்றால், ஹஜ் செய்வது ஒரு கடமை.  உம்ரா என்பது  சுன்னா.

உம்ரா சடங்குகளை 5 அல்லது 6 மணிநேரங்களில் செய்யலாம், ஹஜ் முடிக்க 5 அல்லத 6 நாட்கள் ஆகும்.

மேலும், ஹஜ், துல்-ஹிஜ்ஜா மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே செய்ய முடியும், ஆனால் உம்ரா ஹஜ் நாட்கள் தவிர ஆண்டு முழுவதும் செய்ய முடியும்.

الحمدلله

   

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...