Sunday, October 11, 2026

 

"உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது.. (4:79) என அல்லாஹ் குர்ஆனில் ஏன் கூறுகின்றானென உங்களுக்குத் தெரியுமா?

السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ


அல்லாஹ் தன் இரக்கத்தாலும், கருணையாலும் பல அருட்கொடைகளை மனிதனுக்கு அள்ளித்தரு கின்றான். அவனுடைய தாராளமான அருட்கொ டைகள் பல. அவற்றில் சில:

நல்லவிளைச்சலை தரும் நிலம், மிக்க குறைவான விலையில் கிடைக்கும் பொருட்கள், வருட முழுவ தும் மிதமான மழை, உணவு, பழங்கள், மதிப்பு, உற்ற நேரத்தில் உதவி, வெற்றி, நல்ல குடும்பம், பிள்ளைகள், பெற்றோர், நல்ல நண்பர்கள், நல்ல அண்டை வீட்டார், நல்ல ஆட்சியாளர்கள்.

தன் உரிமையாலும், நற்செயல்களாலும் மட்டுமே இந்தஅருட்கொடைகளை ஒரு  மனிதன்  பெற  முடியாது. அவனது அளவற்ற அருட்கொடை களுக்கு முன் நாம் செய்யும் வழி பாடு வெகு சொற்பம். அவனது மன்னிப்பும் நமக்கு கொடுக் கப்போகும் சுவர்க்கமும் அவன் விரும்பி நமக்கு தந்தால் தான் நாம் பெற முடியும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவரு டைய செயலும் அவரைச் சொர்க்கத்தில் நுழைவிப் பதில்லை" என்று கூறக் கேட்டேன். அவர்கள் (நபித் தோழர்கள்), "அல்லாஹ்வின் தூதரே! தாங்க ளுமா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "இல்லை, நானும்தான்; அல்லாஹ் தனது அருளா லும் கருணையாலும் என்னை அரவணைத்துக் கொண்டாலே தவிர (நானும் சொர்க்கம் செல்ல முடியாது). ஆகவே, நீங்கள் நேர்மையாகச் செயல் படுங்கள்; (இலக்கை) நெருங்கிச் செயல்படுங் கள்; உங்களில் எவரும் மரணத்தை விரும்ப வேண்டாம். ஏனெனில், அவர் நன்மை செய்பவ ராயின் (உயிர் வாழ்வதால்) நன்மையை அதிகப் படுத்திக்கொள்ளலாம்; தீமை செய்பவராயின் அவர் (பாவத்திலிருந்து) மீட்சி பெறலாம்" என்று கூறினார்கள். [ஸஹீஹுல் புகாரி, 5673]

அல்லாஹ் தன் அருட்கொடைகளை  தான் விரும்பி யவர்களுக்கு  தாராளமாகவோ அல்லது அளவாக வோ கொடுப்பான். சில சமயங்களில் சோதனை செய்வான் சில சமயங்களில் தண்டிப்பான். அப் படி தண்டிக்கும் பொழுது அவர்களின் பாவங் களை மன்னித்து அவர்களை தூய்மைபடுத்து வான்.

நோய்,  துரதிஷ்டம்,  வறட்சி, பற்றாக்குறை, பொருட்களின் அதிக விலை ஆகியவை, கீழ்படியா மை, வரம்பு மீறுதல், பெருமை, விரும்பத்தகாத காரியங் களை செய்தல், பாவங்கள் செய்தல், கவனக்குறைவு, மறதி ஆகியவையால் மனிதர்கள் துன்பங்களையும், பேரிடர்களையும் சந்திக்க நேரும்.

 

இதையே அல்லாஹ் அல் குர்ஆனில் வெவ்வேறு இடங்களில் கூறுகின்றான்:

"அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல் லாம், அது உங்கள் கரங் கள் சம்பாதித்த (கார ணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான். (அஷ் ஷுர்ரா, 42:30)."

"மனிதர்களை அவர்கள் சம்பாதித்த (தீ) வினைக் காக அல்லாஹ் அவர்க ளை (உடனுக்குடன்) பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் பூமியில் உயிர்ப் பிராணிகள் ஒன்றையுமே விட்டு வைக்க மாட்டான்; ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களைப் (பிடிக்காது) பிற்படுத்து கிறான்; அவர்களுடைய தவணை வந்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாக  இருக்கின்றான். [ஃபாத்திர்,  35:45]."

" மேலுமவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பிடும் பொருட்டுப் பெரிய வேத னையை (மறுமையில் அவர்கள்) அடைவதற்கு முன்னதாகவே (இம்மை யில்) சமீபமான ஒரு வேதனையை அவர்கள் அனுபவிக்கும்படிச் செய்வோம் (அஸ் ஸஜ்தா 32:21)"

" மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச்செ யல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின் (தீமைகளி லிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர் கள் செய்தார்களே (தீவி னைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக் கும்படி அவன் செய்கிறான்" [அர் ரூம், 30:41]

இது போல் துன்பங்கள் வரும் போது அதை எதிர் கொள்ள குர்ஆனில் அல்லாஹ் கீழ்கண்ட வாறு மனிதனுக்கு அறிவுறுத்துகின்றான்:

  ★ ஆகவே, அல்லாஹ்விடமிருந்து எவரும் தடுத்து நிறுத்த முடியாத (அந் தத் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன், நீர் உம் முகத்தை நிலையான மார்க்கத்தில் சரிபடுத்துவீராக!"  [அர் ரூம், 30:43].

★   நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங் கள்; அல்லாஹ் நிச்சயமாக  பொறுமையுடைய வர்களுடன் இருக்கிறான். (அல் பகறா, 2:153).

  ★ (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக அல்லாஹ் வுக்கே நாம் உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறு வார்கள். (அல் பக றா, 2:156)

  ★   ".......அவர்கள் பாவ மன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களை அல்லாஹ் வேதனை செய்பவனாக இல்லை" (அல் அன்ஃ பால், 8:33)

   ★ "......நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு அல்லாஹ்விடம் தவ்பா (செய்து மன்னிப்புக்) கேட்க மாட்டீர்களா?" (அந் நமல், 27:46)

  ★   “ஆகவே, குர்ஆனிலிருந்து உங்களுக்குச் சுலப மான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறை யாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படு வோருக்கு) அல்லாஹ் வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள்,  நன்மைகளில் எவற்றை நீங் கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக் காக) முற்படுத்துகி றீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற் கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றி யும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் அல்லாஹ் நிச்சயமாக மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்” (அல் முஜம்மில், 73:20).

الحمدلله

 

No comments:

Post a Comment

  " உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. இன்னும் , உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான்...