Wednesday, September 30, 2026

 

மறுமையில் உயிர்த்தெழுவதை நம்பாதவர் கேட் கும் கேள்விகளுக்கு அல்லாஹ் கூறும் பதில்கள்

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

 


அல்லாஹ் மறுமையில் உயிர்த்தெழுவதைப் பற்றி திருக்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளான். அவை:

[50:43] நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மரணிக்கும்படிச் செய்கிறோம் - அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வர வேண்டி யிருக்கிறது.

[23:15 & 16] “…நிச்சயமாக நீங்கள் மரணிப்பவர் களாக இருக்கிறீர்கள். பிறகு, கியாம நாளன்று, நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்.”

[42:9] அவனே இறந்தோரை உயிர்ப்பிக்கிறான் - அவனே எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன்.

[22:66] அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன்.

[45:26] “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். 

[80:22 & 23] அவனை மரணிக்கச் செய்து, அவனை கப்ரில்” ஆக்குகிறான். அவன் விரும்பும் போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.

[50: 42 - 44] அந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மரித்தோர்) வெளியேறும் நாளாகும். நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மரணிக்கும்படிச் செய்கிறோம் - அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வர வேண்டியிருக்கிறது. பூமி பிளந்து, அவர்கள் வேகமாக (வெளியே) வரும் நாள்; இவ்வாறு (அவர்களை) ஒன்று சேர்ப்பது நமக்கு எளிதானதாகும்.

[36:51 & 52] ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள். எங்களு டைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?” என்று அவர்கள் கேட்பார்கள்; அர்ரஹ்மான் வாக்களித்ததும், (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறிய தும் இதுதான்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

[79:14&13] (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்- அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.

[58:6] அல்லாஹ் அவர்கள் அனைவரையும் உயிர் கொடுத்து எழுப்பி, பின்னர் அவர்கள் செய்த வற்றை அவர்களுக்கு அறிவிக்கும் நாளில், அவர்கள் அவற்றை மறந்து விட்ட போதிலும், அல்லாஹ் கணக்கெடுத்து வைத்திருக்கிறான். மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.

 

மழைக்குப் பிறகு வறண்ட நிலத்தில் தாவரங்கள் புத்துயிர் பெறுவதோடு அல்லாஹ் உயிர்த்தெழுதலை ஒப்பிடுகிறான்:

 

[50: 11] (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு இறந்து கிடந்த ஊரை (பூமியை) நாம் உயிர்ப்பிக்கிறோம், இவ்விதமே, (இறந்தவர்கள் உயிர்ப்பிக்கப் பெற்று) வெளியேறுதலும் இருக்கிறது.

[7:57] அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வரண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக.

உயிர்த்தெழுதல் நிகழுமா என கேட்பவர் களுக்கு அல்லாஹ் பதிலளித்துள்ளான்:

இறந்தவர்கள் உயிரோடு கொண்டுவரப்படு கிறார்கள்! இது சூனியம் இல்லையா?:

 

(19:66) " மனிதன் கேட்கிறான்: “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மேலும் எழுப்பப் படுவேனா?

(11:7) “நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால், (அதற்கு) காஃபிர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை” என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.

அல்லாஹ் [சுப்ஹானஹுவதலா] பதிலளிக் கின்றான்:

(19: 67) யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

[36:79] “முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்பு களையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!

 

தூசியிலிருந்தும் எலும்புகளிலிருந்தும் உயிர்த் தெழுதல் எப்படி சாத்தியமாகும்?

 

[56: 47] மேலும், அவர்கள்: “நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?” என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.

[17-49] "“(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப் போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களா?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.

[23:82] “நாங்கள் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டாலுமா நாங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவோம்?” என்று அவர்கள் கூறினார்கள்.

[27:67] “நாங்களும் எங்கள் மூதாதையரும் (மரித்து) மண்ணாகிப் போன பின்னர், மீண்டும் வெளியே கொண்டு வரப்படுவோமா?"

[13: 5] (அவர்களிடம் நம்பிக்கை இல்லையே என்று நபியே!) நீர் ஆச்சரியப்படுவீராயின் அவர்கள், “நிச்சயமாக நாங்கள் (மரித்து) மண்ணாகிவிட்ட பிறகு நாம் புதிதாக படைக்கப்படுவோமா?” என்று கூறுவது (இதைவிட) ஆச்சரியமானதே!

[36: 78] “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?”

[79:10 - 12] “நாம் நிச்சயமாக மண்ணறை களிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?” என்று கேட்கிறார்கள். “மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?”

 

அல்லாஹ் [சுப்ஹானஹுவதஆலா] பதிலளிக் கின்றான்:

 

[37:40, 50 - 55] அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களில் ஒருவர்; எனக்கு (இம்மையில்) உற்ற நண்பன் ஒருவன் இருந்தான் எனக் கூறுவார். (மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை) உண்மையென ஏற்பவர்களில் நிச்சயமாக நீயும் ஒருவனா? எனக் கேட்டான். “நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?” என்றும் கேட்டான்.) (அவ்வாறு கூறியவனை) “நீங்கள் பார்க்(க விரும்பு)கிறீர்களா?” என்றும் கேட்பார். அவர் (கீழே) நோக்கினார்; அவனை நரகத்தின் நடுவில் பார்த்தார்.

 

[17-50 to 52] (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள். “அல்லது மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்;” (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப் படுவீர்கள்). “எங்களை எவன் (மறு முறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்?” என்று அவர்கள் கேட்பார்கள். “உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்!” என்று (நபியே!) நீர் கூறும்; அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். “அது வெகு சீக்கிரத்தில் ஏற்படலாம்” என்று கூறுவீராக! உங்களை (இறுதியில்) அவன் அழைக்கும் நாளில், நீங்கள் அவன் புகழை ஓதியவர்களாக பதில் கூறுவீர்கள்; (மரணத்திற்குப் பின்) சொற்ப(கால)மே தங்கியிருந்ததாக நீங்கள் நினைப்பீர்கள்.

 

இது ஒரு வாக்குறுதியா அல்லது பழங்காலக் கதையா?

 

[23:83] “மெய்யாகவே முன்னர் நாங்கள் (அதாவது) நாமும், எம் மூதாதையரும் - இவ்வாறே வாக்களிக்கப் பட்டிருக்கி றோம்; ஆனால் இது முன்னுள்ளவர்களின் கட்டுக் கதைகளே அன்றி வேறில்லை” (என்றும் கூறுகின்றனர்).

[23:35 & 36] “நிச்சயமாக நீங்கள் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆன பின்னர் நிச்சயமாக நீங்கள் (மீண்டும்) வெளிப்படுத் தப்படுவீர்கள் என்று அவர் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறாரா? (அப்படியாயின்) உங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது, வெகு தொலைவு, வெகு தொலைவு (ஆகவே இருக்கிறது.)

[46:17] ஆனால் (சன்மார்க்கத்தை தழுவுமாறு கூறிய) தன் பெற்றோரை நோக்கி; “சீச்சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது! (மரணத்திற்குப் பின்) நான் உயிர்ப்பித்து எழுப்பப்படுவேன் என்று நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்களா? திடமாக எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர் சென்று விட்டனரே (அவர்கள் எழுப்பப்பட வில்லையா)!” என்று கூறியவனைப் பாதுகாக்கு மாறு அவ்விருவரும், (அல்லாஹ் விடம் பிரார்த்தித்து பிறகு அவனிடம்) “உனக் கென்ன கேடு! நீ ஈமான் கொள்வாயாக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது” என்று அல்லாஹ்விடம் காவல் தேடுகிறார்கள்; அதற்க வன் “இவையெல்லாம் முன்னுள்ள வர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை” என்று கூறுகிறான்.

 

அல்லாஹ் [சுப்ஹானஹுவதலா] பதிலளிக் கின்றான்:

 

[46:18] இத்தகையோரின் நிலையோ, இவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்கள் மனிதர்கள் கூட்டத்தினரில் (பாவம் செய்ததினால்) எவர்களுக்கு எதிராக (அல்லாஹ்வின்) வாக்கு மெய்யாக உறுதியாய் விடுகிறதோ, அது போன்றது தான்; நிச்சயமாக இவர்கள் நஷ்டவாளிகளாய் விட்டனர்.

[16:38 - 40] இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும்; எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை. (இவ்வுலகில்) அவர்கள் எவ்விஷயத்தில் பிணங்கி(த் தர்க்கித்து)க் கொண்டிருந் தார்களோ, அதை அவர்களுக்குத் தெளிவு படுத்துவதற்காக வும், காஃபிர்கள் தாம் பொய்யர்களாக இருந்தார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் (அல்லாஹ் அவர்களை மறுமையில் உயிர்ப்பிப்பான்). ஏனெனில் நாம் ஏதேனும் ஒரு பொருளை (உண்டு பண்ண) நாடினால் நாம் அதற்காகக் கூறுவது, “உண்டாகுக!” என்பது தான். உடனே அது உண்டாகிவிடும். 

 

நமது முதல் மரணத்தைத் தவிர வேறொன்று மில்லை. அப்படியென்றால், எங்கள் முன்னோர் களைத் திரும்பக் கொண்டு வாருங்கள்:

 

[45:25] அவர்களிடம் தெளிவான நம் வசனங்கள் ஓதிக்காண் பிக்கப்பட்டால், அவர்களுடைய வாதமெல்லாம், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்களுடைய மூதாதை யரை (எழுப்பிக்) கொண்டு வாருங்கள்” என்பது தவிர வேறில்லை.

[56- 47 & 48]. “நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப் படுவோமா?” என்று கேட்டுக் கொண்டு இருந்தனர். அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?” என்றும் கூறினர்.

[23:37] “நமது இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (நமக்கு) வேறு வாழ்க்கை இல்லை, நாம் இறப்போம்; (இப்போது) நாம் உயிருடன் இருக்கிறோம்; ஆனால், மீண்டும் நாம் (உயிர் கொடுக்கப்பெற்று) எழுப்பப்படப் போகிறவர்கள் அல்ல.

[23:82 & 83] “நாங்கள் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டாலுமா நாங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவோம்?” என்று அவர்கள் கூறினார்கள். “மெய்யாகவே முன்னர் நாங்கள் (அதாவது) நாமும், எம் மூதாதையரும் - இவ்வாறே வாக்களிக்கப்பட்டிருக்கிறோம்; ஆனால் இது முன்னுள்ள வர்களின் கட்டுக் கதைகளே அன்றி வேறில்லை” (என்றும் கூறுகின்றனர்).

[44:35 & 36] “எங்களுக்கு முதலில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறு எதுவுமில்லை; நாங்கள் மீண்டும் எழுப்படுபவர்கள் அல்லர். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்கள் மூதாதையரை (திரும்பக்) கொண்டு வாருங்கள்.”

[6:29] அன்றியும், “இவ்வுலகத்தில் நாம் வாழ்ந்திருப்பதைத் தவிர (அப்பால் மறுமை வாழ்வு என்று) ஒன்றும் இல்லை; நாம் (மரணத்திற்குப் பின் மறுபடியும்) எழுப்பப் பட மாட்டோம்” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Answer:

[56:49 & 50] (நபியே!) நீர் கூறும்: “(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும். “குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள்.

[45:26] “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். 

[64:7] (மரித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராகரிப்பவர்கள் எண்ணிக் கொண்டனர்;

 

அல்லாஹுத்தஆலா குர்ஆனில் அவர்களுக்குப் பதிலளிக்கின்றான்:

 

[64:7] “அப்படியல்ல! என்னுடைய இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்! பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள் - மேலும் அது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

[13: 5] (ஆகவே, மறுமையில்) இவர்களுடைய கழுத்துகளில் விலங்கிடப்படும்; இவர்கள் நரகவாசிகளே யாவார்கள்; இவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.

 

அவர்கள் அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படும்போது, இறுதியில் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்:

 

[6:30] இவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) இவர்களுடைய இறைவனின் முன் நிறுத்தப்படும்போது இவர்களை நீர் காண்பீராயின் (அது சமயம் இறைவன் கேட்பான்) இது உண்மையல்லவா? என்று; ”ஆம்! எங்களுடைய ரப்பின் மீது ஆணையாக (மெய்தான்)” என்று இவர்கள் கூறுவார்கள்; அப்போது, “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் வேதனையை அனுபவியுங்கள்” என்று அல்லாஹ் கூறுவான். ஆகவே, (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் என்று கூறியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகி விட்டனர்; அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும்பொழுது உலகில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளை தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள்; அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.

 

அல்லாஹுத்தஆலா உயிர்த்தெழுதலை ஒப்பீட்டுடன் விரி வாக விளக்குகிறான்:

 

[22:5 – 7] மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது. இது ஏனெனில்: நிச்சயமாக அல்லாஹ் அவனே உண்மையானவன் - (நிலையானவன்) நிச்சயமாக அவனே மரித்தோரை உயிர்ப்பிக்கின்றான் - இன்னும், நிச்சயமாக அவன்தான் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவன் என்பதனால். (கியாம நாளுக்குரிய) அவ்வேளை நிச்சயமாக வரும்; இதில் சந்தேகமே இல்லை; மண்ணறைகளில் இருப்போரை, நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்.

[30: 19] அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள். 

[30:50] (நபியே!) அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் (இத்தகைய) அத்தாட்சிகளைச் சிந்தித்துப் பார்ப்பீராக! (வரண்டு) மரித்த பிறகு பூமியை அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான்? (இவ்வாறே) மரித்தவர்களையும் அவன் நிச்சயமாக உயிர்ப்பிபவனாக இருக்கிறான்; மேலும் அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.

 

இறுதியாக, அல்லாஹ் கூறுகிறான்:

 

[30:52 & 53] ஆகவே, (நபியே!) மரித்தவர்களை யும் நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது; (உம்முடைய அழைப்பைப்) புறக்கணித்துத் திரும்பி விடும் செவிடர்களையும் (உம்முடைய) அழைப்பை நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது. இன்னும், குருடர்களையும், அவர்களு டைய வழிகேட்டிலிருந்து நேர்வழியில் திருப்புவராகவும் நீர் இல்லை; முற்றிலும் வழி பட்டவர் களாக, நம்முடைய வசனங்களின் மீது ஈமான் கொள்பவர்களைத் தவிர (மற்றெவரையும் உம் அழைப்பைக்) கேட்கச் செய்ய முடியாது. 

 

الحمدلله

 

No comments:

Post a Comment

  மறுமையில் உயிர்த்தெழுவதை நம்பாதவர் கேட் கும் கேள்விகளுக்கு அல்லாஹ் கூறும் பதில்கள் السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱ...