12. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ
وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوْا بِهَا وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ اِذَا هُمْ يَقْنَطُوْنَ
இன்னும் நாம் மனிதர்களை (நம்) அருளை
அனுப விக்கச் செய்தால். அவர்கள் அதைக் கொண்டு மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முன்னரே செய்துள்ளதைக் கொண்டு ஒரு தீங்கு
அவர்களுக்கு சம்பவித்து விட்டால் அவர்கள் நிரா சைப்பட்டு விடுகிறார்கள்.
(அல் குர்ஆன் :30:36)
இத்தகைய மனித இயல்பு கண்டிக்கத்தக்கதாகும். ஏனெனில், "மனிதனுக்கு அருட்கொடைகள் வழங் கப்படும்போது அவன் மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டு,என்னை விட்டுத் துன்பங்கள் நீங்கி விட்டன. (அல் குர்ஆன்:11:10) என்று கூறுகிறான். ஆனால், அல்லாஹ் பாதுகாத்து உதவி செய்தவர் கள் இதற்கு விதிவிலக்கானவர்கள்.
ஆனால், மனிதனுக்குச் சிரமங்கள் ஏற்படும்போது, இனி எக்காலத்திலும் தனக்கு நல்லவை நடக்காது என்று நம்பிக்கையிழந்து விடுகிறான். அல்லாஹ் கூறுகிறான்: எவர் பொறுமை காத்து, நற்செயல் கள் புரிகிறார்களோ அவர்களைத் தவிர. அவர்கள் கஷ்ட காலங்களில் பொறுமை காக்கிறார்கள் மற்றும் நிம்மதியான காலங்களில் நற்செயல்கள் செய்கிறார்கள்.
ஆஹதீஸ்
"ஒரு முஃமினின் நிலை எவ்வளவு ஆச்சரியமானது! அவனுடைய அனைத்து நிலைகளிலும் அவனுக்கு நன்மை இருக்கிறது. இது ஒரு முஃமினுக்கு மட்டுமே உரியது. அவனுக்கு ஒரு மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டால், அவன் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துகிறான்; அது அவனுக்கு நன்மையாக அமைகிறது. அவனுக்கு ஒரு துன்பகரமான நிலை ஏற்பட்டால், அவன் பொறுமையாக இருக்கிறான்; அது அவனுக்கு நன்மையாக அமைகிறது." [ரியாதுஸ் ஸாலிஹீன், 27]
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஓர் அடியான், விதியை அதன் நன்மை தீமைகளுடன் நம்பி, தனக்கு ஏற்பட்ட ஒன்று தன்னைத் தவறியிருக்காது என்பதையும், தன்னைத் தவறிய ஒன்று தனக்கு ஏற்பட்டிருக்காது என்பதையும் அறியும் வரை, அவன் (முழுமையான) ஈமான் கொண்டவனாக ஆகமாட்டான்.' [ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ் ஸலாம் பதிப்பு) ஜாமிஉத் திர்மிதீ : 2144]
الحمدلله
No comments:
Post a Comment