2. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:
السلام عليكم
ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ
وَاِنْ مِّنْکُمْ اِلَّا وَارِدُهَا كَانَ عَلٰى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا
"மேலும், அதனைக் ( சிராத் பாலம்) கடக்காமல் உங்களில் யாரும் ( சுவர்க்கம் புக)
முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான
தீர்மானமாகும்." (அல்குர்ஆன்: 19:71)
இந்த வசனத்தில் சிராத் பாலம் பெயர் குறிப்பிடப் படவில்லை. கீழ் கண்ட ஆஹதீஸ் அந்த பாலத் தைப்பற்றி நமக்கு அறிவிக்கின்றன:
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
...........பிறகு பாலம் கொண்டு வரப்பட்டு நரகத்தின் இரு கரைகளுக்கிடையே வைக்கப்படும். "நான் அதை முதன் முதலில் கடப்பேன் என் உம்மத்துடன்". நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! அது என்ன பாலம்?” என்று கேட்டோம். அவர்கள், “வழுக்கக்கூடியது; சறுக்கக்கூடியது; அதில் கொக்கிகளும், வளைந்த முட்களும் இருக்கும். அவை நஜ்த் பகுதியில் விளையக்கூடிய ‘சஅதான்’ முட்செடியின் முட்களைப் போன்று அகன்றிருக்கும்; அதற்கு வளைந்த முள் இருக்கும்.” “இறைநம்பிக்கையாளர் அதைக் கண் இமைப்பதைப் போன்றும், மின்னலைப் போன்றும், காற்றைப் போன்றும், பந்தயக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களைப் போன்றும் (வேகமாக) கடந்து விடுவார். (அவர்களில்) சேதமின்றி தப்புபவரும் உண்டு; காயங்களுடன் தப்புபவரும் உண்டு; நரக நெருப்பில் தள்ளப்படுபவரும் உண்டு. அவர்களின் கடைசி நபர் தரதரவென இழுத்துச் செல்லப்படுவார்.........” {ஸஹீஹுல் புகாரி : 7439].
சிராத் தொடர்பான மற்ற ஹதீஸ்கள் பின் வருமாறு:
மஸ்ரூக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஆயிஷா (ரழி) அவர்கள் இந்த ஆயத்தை ஓதிய போது: "பூமி வேறொரு பூமியாக மாற்றப்படும் அந்நாளில்..." (குர்ஆன் 14:48). ஆயிஷா (ரழி) கேட்டார்கள்: "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் எங்கே இருப் பார்கள்?" அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள்: "ஸிராத்தின் (நரகத்தின் மீது அமைக்கப்படும் பாலத்தின்) மீது." [ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு) ஜாமிஉத் திர்மிதீ : 3121]
மஸ்ரூக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள்: "அல்லாஹ்வின் தூதரே! '(வல்அர்ளு ஜமீஅன் கப்ளத்துஹு யவ்மல் கியாமதி வஸ்ஸமாவாது மத்விய்யாதுன் பியமீனிஹி)' (அதாவது: 'பூமி முழுவதும் மறுமை நாளில் அவனது பிடியில் இருக்கும்; வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும்' - அல்-குர்ஆன் 39:67). (இத்தகைய மகத்தான நாளில்) நம்பிக்கையாளர்கள் எங்கே இருப்பார் கள்?" என்று. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஆயிஷாவே! (நரகத்தின் மீது அமைக்கப்படும்) ஸிராத்தின் மீது (அவர்கள் இருப்பார்கள்)!" [ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு) ஜாமிஉத் திர்மிதீ : 3242]
சுபஹானல்லாஹ்! அப்பாலத்தை நாம் கற்பனை பண்ணி கூட பார்க்க முடியாத படி உள்ளது. யா அல்லாஹ்! நாங்கள் அதை எளிதாக கடந்து சுவர்க்கத்தை அடைய அருள் புரிவாயாக! ஆமீன்!
الحمدلله
No comments:
Post a Comment