Monday, March 2, 2026

வி- 10

                 ரமலான் வினா -  விடை                 

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

10. நூஹ் தன் இறைவனிடம் “என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே; உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது; நீதி வழங்குவோர்களில்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்” எனக் கூறினார். (11:45) யார் அந்த தந்தை தன் இறைவனிடம் தன் மகனுக்காக முறையிட்டது?

விடை: தந்தை நூஹ் (அலை)

நிச்சயமாக நாம் நூஹ் (அலை) அவர்களை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம், அவர் ஐம்பது ஆண்டுகள் குறைய ஆயிரம் ஆண்டுகள் அவர்களிடையே இருந்தார் (29:14). அவர் தனது சமூகத்தாரை ஈமானின் பக்கம் அழைத்தபோது, அவர்கள் தங்கள் காதுகளில் விரல்களை வைத்துக்கொண்டு, அவரைக் கேட்பதையோ அல்லது பார்ப்பதையோ தவிர்க்க தங்கள் ஆடைகளால் தங்களை மூடிக்கொண்டனர். பின்னர், நிச்சயமாக, அவர் அவர்களை வெளிப்படையாக அழைத்தார்; அந்தரங்கமாக அவர்களிடம் முறையிட்டார், ஆனால் அவரது அழைப்பு (அவர்கள்) (சத்தியத்திலிருந்து) வெளியேறுவதைத் தவிர வேறொன்றையும் அதிகரிக்கவில்லை. (71:5 & 9)

அவர்கள் கூறினார்கள்: “ஓ நூஹ்! நீ எங்களுடன்  அதிகமாக நீ தகராறு செய்துள்ளீர். இப்போது நீ உண்மையாளர்களில் ஒருவராக இருந்தால், நீர்  அச்சுறுத்துவதை எங்களிடம் கொண்டு வாரும். (11:32 & 33)

எனவே அல்லாஹுதாலா நூஹ் (அலை)யிடம், அவனது அருளாலும் வழிகாட்டுதலாலும் ஒரு கப்பலை உருவாக்கும்படி கட்டளையிட்டார். (11:37). கப்பல் கட்டி முடித்ததும், நூஹ் (அலை) ஒவ்வொரு இன உயிரினங்களையும் (ஆண் மற்றும் பெண்), அவரது குடும்பத்தினர் மற்றும் எண்பது விசுவாசிகளை  அக்கப்பலில் ஏற்றினார். அல்லாஹ்வின் கட்டளைப்படி பூமியிலிருந்து அடுப்பு பொங்கி எழுந்தது, வானத்திலிருந்து தண்ணீர் கொட்டியது, கப்பல் மலைகள் போன்ற அலைகளுக்கு மத்தியில் அல்லாஹ்வின் கட்டளையுடன் பயணித்தது. நூஹ் (அலை) தன்னைப் பிரிந்து சென்ற தனது மகனை அழைத்து, “ஓ என் மகனே! எங்களுடன் ஏறிக்கொள், அக்கிரமக்காரர்களுடன் இருக்காதே” (11:42)

மகன் பதிலளித்தார்: “நான் ஒரு மலையில் ஏறுவேன், அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்.” நூஹ் (அலை) அவர்கள் கூறினார்கள்: “இன்று அல்லாஹ்வின் கட்டளை யிலிருந்து தப்பிபபவர்  வேறு யாரும் இல்லை, அவன் கருணை காட்டுகிறவனைத் தவிர” அவர்களிடையே ஒரு அலை வந்து, அவன் (அந்த மகன்) மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகிவிட்டான். (11;43)

நூஹ் (அலை) அவர்கள் தம் இறைவனை அழைத்து, “ஓ என் இறைவா! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன்! நிச்சயமாக உன் வாக்குறுதி உண்மையானது, நீயே நீதிமான்.” (11:45)

எல்லாம் அறிந்த அல்லாஹ் கூறினான்: “ஓ நூஹ் (அலை)! நிச்சயமாக அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல; நிச்சயமாக அவன் செயல் அநீதியானது, எனவே உமக்குத் தெரியாததை என்னிடம் கேட்காதீர்! நீர் அறியாதவர்களில் ஒருவனாகிவிடாதபடிக்கு நான் உம்மை உபதேசிக்கிறேன்.” (11:46).

நூஹ் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் மிகவும் வருந்தி பச்சாதபட்டு, “ஓ என் இறைவா! எனக்கு அறிவு இல்லாததை உன்னிடம் கேட்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து என் மீது கருணை காட்டா விட்டால், நான் நஷ்டமடைந்த வர்களில் ஒருவ னாகிவிடுவேன்” என்று பிரார்த்தித்தார்கள். (11:47)

الحمدلله



 

No comments:

Post a Comment

வி - 11 ரமலான் வினா -   விடை   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ 12. அல்லாஹ் (அவருக்கு) அர...