Saturday, January 17, 2026

 

10. திருக்குர்ஆனின் எந்த வசனம் இந்த படத்திற்கு பொருந்தும்?

لسلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

பதில்:

لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّىٰ يَلِجَ  الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاط[7:40]

"நிச்சயமாக அவர்களுக்கு ( பாவிகள், பொய்ப் பிப்பவர்கள், பெருமையடிப்பவர்கள்) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா. மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள்" [அல் அராஃப், 7:40].

பாவிகளின் மரணத்திற்கு பின் அவர்களின் ஆன்மா மேலே எடுத்துச் செல்லப்படும். சுவர்க் கத்தின் கதவுகள் அவர்களுக்காக திறக்கப் படாது.‌ அவர்கள் சுவர்க்கத்தில் நுழைய முடியாது. அல்லாஹ் அவர்களின் நிலையை  ஒட்டகத்தின் (جَمَلُ) எடுத்து காட்டுடன் விளக்குகின்றான். ஊசியின் காதில் سَمِّ الْخِيَاطِ)) ஒட்டகம் நுழைய முடியாது. அது போலவே பாவிகளும் சுவர்க்கத்தில் நுழைய முடியாது.

அல்லாஹ் ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது என்று மிகைபடத்தி கூறி யிருப்பது அதன் முக்கியத்துவம் தோன்றுவதற்காகத்தான்.

வேறு சிலர் جَمَلُ என்ற வார்த்தைக்கு ஒட்டகத்திற்கு பதில் 'கயிறு' என்ற அர்த்தத்துடன் இந்த வசனத்தை மொழி பெயர்த்துள்ளனர்.

நபி அவர்கள் ஒரு முறை தனது தோழர்களை எச்சரித்தார், "உங்கள் நற் செயல்களின் காரணமாக நீங்கள் சொர்க்கத்தில் நுழைவ தில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்" என்று கூறினார். அவர்கள், “நாங்களா அல்லது நீங்களுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், "ஆம், நானும் அல்லாஹ்வின் கிருபை யினாலும் கருணையினாலும் தான் சொர்க்கத்தில் நுழைவேன்" என்று பதிலளித்தார்.

ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு பிரார்த்தீர்களானால் அல்லாஹ் உங்களை மன்னித்து மறுமையில் சுவர்க்கத்தை அளிப்பான். அதற்கு திருக்குர்ஆனில் கூறிய படி அல்லாஹ்விடம் அடிக்கடி முறையிட வேண்டும்:

இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!" [அஷ் ஷுஅரா, 26:85]
"இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க் கத்தில் ஒரு வீட்டைக் கட்டித்தருவாயாக! (அத் தஹ்ரீம், 66:11)
அல்லாஹ்! நான் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்கின்றேன்! [அபு தாவூத் மற்றும் அல் அல்பானி, ஸஹீஹ் இப்னு மாஜாஹ் 2/328]

யா அல்லாஹ்! குடும்பத்தோடு எங்களை சுவர்க்கத்தில்  நுழைய வைப்பாயாக

ஆமீன் யா ரப்!
 

الحمدلله


No comments:

Post a Comment

  Q-5                                                                          Ramzan Quiz السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَ...