'துன்பம் வரும் போது மனிதன் எப்படி நடந்து கொள்கின்றான்' என்று குர்ஆனில், அல்லாஹ் என்ன கூறுகின்றான் என உங்களுக்குத் தெரியுமா?
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ ٱللَّٰهِ
ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
" மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமா னால்
அவன் (சாய்ந்தோ) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற
நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான்,
ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோ மானால்,
அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது
போல வே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய
செயல்கள் (இவ் வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன." [யூனுஸ், 10:12]
மனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்ல தைக் கேட்பதற்குச் சோர்வடைவதில்லை. ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமு டைந்து நிராசையுள்ளவனாகின்றான்." (ஃபுஸ்ஸிலத், 41: 49)
"எனினும்அவனைத் தீண்டியிருந்த
கெடுதிக்குப் பின் நாம் அவனை நம் ரஹ்மத்தை - கிருபையைச் சுவைக்கச் செய்தால்,
அவன் "இது எனக்கு உரிய தேயாகும் அன்றியும் (விசாரணைக்குரிய) வேளை ஏற்படுமென நான் நினைக்கவில்லை; நான் என்னு டைய
இறைவனிடம் திருப்பி அனுப்பப் பட்டாலும், நிச்சயமாக
அவனிடத்தில் எனக்கு நன்மையே கிடைக்கும்" என்று திடமாகச் சொல்கிறான். (ஃபுஸ்ஸி லத்,
41:50).
◆ "அன்றியும், மனிதனுக்
கு நாம் அருள் புரிந்தால் அவன் (நன்றியுணர்வின் றி) நம்மைப் புறக்கணித் து,
விலகிச் செல்கிறான் - ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட
பிரார்த்தனை செய்(பவனா)கின்றான். (ஃபுஸ்ஸிலத், 41:51)
◆
" நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங் கினால் அவன்
(நன்றி செலுத்தாமல்) புறக்கணித் து(த் தோளை உயர்த்திப்) பெருமை கொள்கிறான்;
அவனை (ஏதேனுமொரு) தீங்கு தொடுமானால் அவன் நிராசை கொண்ட வனாகி
விடுகிறான்." [அல் இஸ்ரா, 17:83]
◆ மனிதர்களுக்கு (பசி, நோய், வறுமை,
பஞ்சம் போன்ற ஏதேனும்) சங்கடம் ஏற்பட்டால் அவர்கள் தங்கள்
இறைவனிடம் முகம் திருப்பி, (அதை நீக்கியருள) அவனிடம் பிரார்த்தனை
செய்கிறார் கள்; பிறகு அவன் அவர்களுக்கு தன்னிடமிருந்து ரஹ்மத்தை சுவைக்கச் செய்தால், அவர்களில் ஒரு
பிரிவினர் தம் இறைவனுக்கு இணை வைக்கின் றனர்." ( அர்-ரூம், 30:33).
◆"இன்னும் நாம் மனிதர்களை (நம்) ரஹ்மத்தை ருசிக்கச் செய்தால் அவர் கள்
அதைக் கொண்டு மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முன்னரே
செய்துள்ளதைக் கொண்டு ஒரு தீங்கு அவர்களுக்கு சம்பவித்து விட்டால் அவர்கள் நிராசைப்பட்டு
விடுகிறார்கள்."[அர் ரூம், 30:36]
◆ "இன்னும் மனிதனை ஏதேனும் ஒரு துன்பம்
தீண்டுமானால், அவன் தன் இறைவன்பால் திரும்பி அவனை அழை
(த்துப்பிரார்த்தி)க்கின் றான்; பின்னர் (இறைவன்) தன்னிடமிருந்து ஓர்
அருட்கொடையை அவனுக்கு அளித்தானானால், முன்னர் அவன்
எதற்காக அவனை அழைத்து(ப் பிரார்த்தித்து)க் கொண்டிருந்தானோ அதை மறந்து விடுகின்றான்." (அஜ் ஜுமர், 39:8)
◆ மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமா னால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக் கிறான்; பிறகு,
நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால்;
அவன்; "இது எனக்குக் கொடுக்கப் பட்டதெல்லாம், என்
அறிவின் காரணமாகத் தான்!" என்று கூறுகின் றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே! ஆனால் அவர்களில் பெரும் பாலோர் (இதை) அறிய மாட்டார்கள். (அஜ் ஜுமர்,
39:49)
◆ இன்னும், கடலில் உங்களை ஏதேனும் துன்பம்
தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள்
என்று) எவற்றை அழைத்துக் கொண்டிருந்
தீர்களோ, அவையாவும் மறைந்து விடும்; எனி னும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையள வில் கொண்டு வந்து
சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக் கணித்து விடுகிறீர்கள் - இன்னும்,
மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.(அல் இஸ்ரா,
17:67)
◆ மேலும் அவர்கள் மரக் கலங்களில் ஏறிக் கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க் கத்தில் வழிப்படடவர்களாக அல்லாஹ்வைப்
பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன்
அவர்களை (பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங் கால், அவர்கள் (அவனுக்கு) இணை வைக்கின் றனர். (அல் அன்கபூத், 29:65).
ஆகையால் ஓ நம்பிக்கையாளர்களே!
உங்களுக்கு துன்பம் வரும் போது:
★
மற்ற அருள் வளங்களை
குறைவில்லாமல் கொடுத்தற்காக இறைவனுக்கு நன்றி செலுத் துங்கள்.
★ இத்துன்பத்தை
எதிர்த் து நிற்க உங்களுக்கு சக்தி தரும்படி இறைவனிடம் இறைஞ்சுங்கள்.
★ இத்துன்பத்தின் காரணமாக நேர் வழியை
விட்டு பிறழாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.
★ பாவமன்னிப்பு கேட்டு முழுமையாக அல்லாஹ் வின் விருப்பத்திற்கு சரணடையுங்கள்.
★
அல்லாஹ் எவரையும் தன் சக்திற்கு மேல் சோதிக்கமாட்டான் என்பதை அறியுங்கள்.
★
இவ்வுலக வாழ்க்கை நிலையற்றதும், துன்பங்
கள் நிறைந்தது என்பதை என்றும் நினைவில் நிறுத்துங்கள்.
★ பொறுமையோடிருந்து அல்லாஹ்விடம் முழு மையான நம்பிக்கையுடன் உங்கள் காரியங்களை ஒப்படைத்து மறுமையில் மாபெரும் வெற்றியை அடையுங்கள்!
ஆகையால் நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு துன்பம் வரும் போது கீழ் கண்ட அயூப் (அலை) அவர்களின்
பிரார்த்தனையும், யூனுஸ் (அலை) அவர்களின் பிரார்த்தனையையும் தஸ்பீஹ் செய்யுங்கள்:
إِذْ نَادَىٰ
رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
"நிச்சயமாக என்னை துன்பம் தீண்டியிருக்கிறது (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக
இருக்கின்றாய்" (அல்அன்பியா, 21:83)
لَّا إِلَٰهَ
إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
"உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன்
யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்" (அல்
அன்பியா, 21:87).
الحمدلله

No comments:
Post a Comment