Monday, October 12, 2026

 

உங்களுக்கு தெரியுமா ஏன் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களைப் பார்த்து, ".... ஒவ்வொருவரும் (மறுமை)நாளுக்காக தான் முன் அனுப்பி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும்....." (59:18) என்று? 

السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ


இவ்வுலகில் (அதாவது இந்த நாளில்) வாழும் போது அல்லாஹ்விற்கு பயப்படுங்கள். உம் கடமையை செவ்வனே செய்வீர். உம்முடைய நன்மைக்காக நல்லதையே செய்து நாளை (அதாவது மறுமை வாழ்விற்காக) அனுப்புவீராக!

உயிர்கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில், நீங்கள் தன்னந்தனியாக,  உங்களை படைத்தவன் முன்,  செயல் குறிப்பேட்டை  தங்கள் கைகளில் பெற்று, உதவியின்றி, தனக்காக  வாதாட எவரு மில்லாமல் நிற்கும் பொழுது, ஒருவனின் நற் செயல்களே அவன் கூட நின்று அவனுக்கு கை கொடுக்கும்.

ஆகையால் அல்லாஹுதாலா இறைநம்பிக்கை யாளரை நோக்கி இவ்வுலகைவிட்டு போவதற்கு முன் நிறைய நன்மைகளை செய்து அனுப்பும் படி கூறியுள்ளார். அப்படிச் செய்ய தவறும் பொழுது அவர் நஷ்டத்திற்கு உள்ளாகிறார். ஏனெனில் அவர் எவ்வளவுதான் கெஞ்சினாலும் மறுவுலகிலிருந்து  திரும்பவும் இந்த உலகிற்கு வரமுடியாது.

இதையே  அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங் களில் நினைவுபடுத்தி உள்ளார்:

ஈமான் கொண்டவர்களே! உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் (அல் மாயிதா, 5:105)

உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அல்லாஹ்விடம் அதை பெற்றுக் கொள்வீர்கள். (அல் பகரா, 2:110).

மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக் கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய். (அல் இன்ஷிகாக், 84:6)

அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி) யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான். (அல் கியாமா, 13)

எவர் ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய் கின்றாரோ அவர்கள் தங்களுக்கே நன்மையைச் சித்தப்படுத்திக் கொள்கிறார்கள்.(அர் ரூம், 44)

நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது, மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல் பகரா, 2:62)"

எவரேனும் நன்மையைக் கொண்டு வந்தால் அவருக்கு அதைவிட மேலானது உண்டு எவன் தீமையை செய்கிறானோ தீமை செய்வோர் அவர்கள்  செய்ததற்குச் சமமான கூலியையே பெறுவார்கள். (அல் கஸஸ், 84)

ஆகையால் எல்லாம் வல்ல அல்லாஹ்வை வணங்க மறக்காதீர்கள். அவ்வாறு மறந்தால் நீங்கள் நற்செயல்கள் செய்வதை மறந்து நஷ்டமடைவீர்கள்.


இப்னு கதிர் தன் விளக்க உரையில் இந்த வசனத்தை குறிப்பிடுகையில் கீழ் கண்ட சம்பவத்தை கூறியள்ளார்:

முந்திர் இப்னு ஜரீர் (ரலி) அவர்கள் தம் தந்தை வழியாக அறிவித்தார்கள்: அதிகாலையில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த போது, சிலர் அங்கே வந்தார்கள். அவர்கள் வெறுங்காலுடனும், ஆடையின்றியும், வரிகளுடை ய கம்பளி ஆடைகளையோ அல்லது மேலங்கிக ளையோ அணிந்து, தங்கள் வாள்களை (கழுத்தில்) தொங்கவிட்டபடி இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர், ஏன், அவர்கள் அனைவரும், முதர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்களை வறுமையில் கண்டபோது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் முகத்தின் நிறம் மாறி யது. பின்னர் அவர் (தம் வீட்டிற்குள்) நுழைந்து வெளியே வந்து பிலால் (ரலி)டம் (அதான் கூறு மாறு) கட்டளையிட்டார். அவர் அதான் மற்றும் இக்மாவை ஓதினார், மேலும் அவர் (புனித நபி) (தம் தோழர்களுடன்) தொழுதார், பின்னர் (அவர் களை நோக்கி) திருக்குர்ஆனின் வசனங்களை ஓதிக் காட்டினார்: "மக்களே! உங்களை ஒரே உயி ரினத்திலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள்" என்பதிலிருந்து, "அல்லாஹ் உங்க ளை எப்போதும் கண்காணிப்பவனாக இருக்கி றான்" என்ற வசனத்தின் இறுதி வரை. (பின்னர் அவர்) ஸூரா ஹஷ்ரின் ஒரு வசனத்தை ஓதினார்: "அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆத்மா வும் மறுமைக்காக எதை அனுப்புகிறது என்பதைப் பற்றி சிந்தித்து அல்லாஹ்வுக்கு அஞ்சட்டும்" (19:18).

(பின்னர் கூடியிருந்தவர்கள் தர்மம் செய்வதில் ஒருவருக்கொருவர் போட்டி போடத் தொடங் கினர்.) சிலர் ஒரு தீனாரையும், மற்றவர்கள் ஒரு திர்ஹமையும், இன்னும் சிலர் ஆடைகளையும், சிலர் ஒரு ஸா கோதுமையையும், சிலர் ஒரு ஸா பேரீச்சையையும் நன்கொடையாக வழங்கினர்; இறுதியில் அவர் (புனித நபி) கூறினார்: "அரை பேரீச்சையாக இருந்தாலும் கொண்டு வாருங்கள்." பின்னர் அன்சாரிகளில் ஒருவர் பணப்பையுடன் அங்கு வந்தார், அதைத் தன் கைகளால் தூக்குவது கடினமாக இருந்தது; உண்மையில், அவரால் (தூக்க) முடியவில்லை. பின்னர் மக்கள் தொடர்ந்து வந்தனர், இறுதியில் நான் உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் அடங்கிய இரண்டு குவியல்களைக் கண்டேன், மேலும் தூதரின் (ஸல்) முகம் (மகிழ்ச்சியின் காரணமாக) தங்கத்தைப் போலப் பிரகாசிப்பதையும் கண்டேன். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ் லாத்தில் ஒரு நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்து பவருக்கு, அந்த நற்செயலுக்காக அவருக்கு நற் கூலி உண்டு; மேலும், அதன்பின் அதன்படி செயல் பட்டவர்களுக்கும் அவர்களின் நற்கூலிகளிலிருந்து எந்தக் குறைவும் இன்றி நற்கூலி உண்டு. இஸ்லாத் தில் ஒரு தீய முன்னுதாரணத்தை ஏற்படுத்துபவ ருக்கு, அதன் சுமை அவர்மீதும், அதன் பின் அதன்படி செயல்பட்டவர்களுக்கும் அவர்களின் சுமை உண்டு; அவர்களின் சுமைகளிலிருந்து எந்தக் குறைவும் இன்றி. [ஸஹீஹ் முஸ்லிம், 1017a. Translated from English version]

அல்லாஹ் தன் நல்லடியார்களை இவ்வாறு பிரார்த் திக்குமாறு திருக் குர்ஆனில் கூறுகின்றான. "என் இறைவா!....... நீ  பொருந்திக்கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! (27:19  & 46:15).

ஓ  இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் மறு மைக்காக நன்மைகள் பல செய்து  அனுப்பிக் கொண்டே இருப்பீராக!

الحمدلله

No comments:

Post a Comment

'துன்பம் வரும் போது மனிதன் எப்படி நடந்து கொள்கின்றான்' என்று குர்ஆனில், அல்லாஹ் என்ன கூறுகின்றான் என  உ ங்களுக்குத் தெரியுமா? السل...