6 திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஹதீஸ்:
السلام عليكم
ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ
وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ اِلٰى مَا مَتَّعْنَا بِهٖۤ
اَزْوَاجًا مِّنْهُمْ زَهْرَةَ الْحَيٰوةِ الدُّنْيَا ۙ لِنَفْتِنَهُمْ فِيْهِ وَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَّاَبْقٰى
இன்னும், அவர்களில் சில பிரிவினர் இன்பமனு பவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவை யெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற் காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமை யில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலை யானதும் ஆகும். (அல்குர்ஆன் : 20:131)
இப்னு காதிர் தன் விளக்க உரையில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை ஹதீஸ்களிலிருந்து உதாரணமாக எழுதியுள்ளார்:
உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்கள், அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மனைவியரி டமிருந்து விலகி இருப்பதாகச் சத்தியம் செய்து விட்டுத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டி ருந்த ஒரு சிறிய அறைக்குள் நுழைந்தார்கள். அவர் உள்ளே சென்றபோது, நபி (ஸல்) அவர்கள் கரடுமுரடான ஒரு பாயின் மீது படுத்திருப்பதைப் பார்த்தார். அந்த அறையில் ஒரு குவியல் கருவேல மரக் காய்களையும், தொங்கிக்கொண்டிருந்த சில தோல் பைகளையும் தவிர வேறெதுவும் இருக்க வில்லை. இதைக் கண்ட உமர் (ரழி) அவர்களின் கண்கள் கண்ணீரால் பெருகின. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் கேட்டார்கள்: 'உமரே! நீர் ஏன் அழுகிறீர்?' அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! பாரசீக மன்னன் கிஸ்ராவும் ரோமானிய மன்னன் சீசரும் சகல ஆடம்பர வசதிகளுடன் வாழ்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் தனது படைப்புகளிலேயே தேர்ந் தெடுத்த உற்ற நண்பரான தாங்களோ இத்தகைய நிலையில் இருக்கிறீர்களே!" என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "கத்தாபின் மகனே! உமக்கு இன்னும் சந்தேகம் இருக்கிறதா? அவர்கள் தங்க ளுக்குரிய நல்லவைகளை இவ்வுலக வாழ்க்கை யிலேயே அவசரமாகப் பெற்றுக் கொண்ட சமூகத் தினர் ஆவர்."
இவ்வாறாக, உலக சுகபோகங்களை அடையும் ஆற்றல் இருந்த போதிலும், இவ்வுலக ஆடம்பரங் கள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் மிகவும் பற்றற்றவர்களாகவே இருந்தார்கள். உலகச் செல் வங்களில் ஏதேனும் கிடைத்தால் கூட, அதனை அல்லாஹ்வின் அடியார்களுக்காக இங்கும் அங்குமாகச் செலவிட்டு விடுவார்கள். மறுநாளுக் காக எதனையும் தமக்கெனச் சேமித்து வைக்க மாட்டார்கள்.
الحمدلله
No comments:
Post a Comment