பலவீனமானவர்களுக்கு மீனா திரும்ப முன்சலுகை
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் குடும்பத்தாரில் பலவீனமானவர்களை (முன்கூட்டியே) அனுப்பி வைப்பார்கள். எனவே அவர்கள் இரவில் முஸ்தலி ஃபாவிலுள்ள ‘அல்-மஷ்அருல் ஹராம்’ அருகில் நின்று, அல்லாஹ்வை தங்களுக்கு இயன்றவரை நினைவு கூர்வார்கள். பிறகு இமாம் (தங்குவதற்கு) நிற்பதற்கு முன்பாகவும், (மினாவிற்குப்) புறப்படுவதற்கு முன்பாகவும் அவர்கள் (மினாவிற்குத்) திரும்பி விடுவார்கள். அவர்களில் சிலர் ஃபஜ்ர் தொழுகைக்கு மினாவை அடைவார்கள்; அவர்களில் சிலர் அதற்குப் பிறகும் வருவார்கள். அவர்கள் (மினாவிற்கு) வந்து சேர்ந்ததும் ஜம்ராவில் கல்லெறிவார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவர்களுக்கு (இவ்வாறு செய்ய) சலுகை அளித்தார்கள்" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள். ஹதீஸ் தரம் : ஸஹீஹ் [ஸஹீஹுல் புகாரி : 1676]
الحمدلله
No comments:
Post a Comment