வி- 11
ரமலான் வினா - விடை
السلام عليكم
ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
11. அல்லாஹ் தன் திருக்குர்ஆனில், "அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்". (21:78) என்று குறிப்பிட்டுள்ளான். யார் அந்த இருவர்?
விடை: தாவூத் (அலை) மற்றும் சுலைமான் (அலை).
இப்னு காதிர் தனது தஃப் ஸீரில் இந்த வழக்கைக் குறிப்பிடுகிறார்: இப்னு மஸ்`ஊத் கூறியதாக இப்னு ஜரீர் பதிவு செய்துள்ளார்: "திராட்சைகள் காய்த்து தொங்கிய தோட்டத்தில் பக்கத்து வயலின் செம்மறி ஆடுகள் இரவில் மேய்ந்து வீணாக்கி விட்டன. இருவரும் தாவூத் (அலை) வந்து தீர்ப்பு கேட்டனர். திராட்சை வயலின் உரிமையாளருக்கு அந்த ஆடுகளை கொடுக்க வேண்டும் என்று தாவூத் (அலை) தீர்ப்பளித்தார்".
வயலில் ஏற்பட்ட இழப்பு ஆடுகளின் மதிப்புக்கு சமம். ஆனால் ஆடுகளின் உரிமையாளருக்கு ஆடுகளைத் தவிர வேறு எந்த வருமானமும் இல்லை. அவர், "எந்த வருமானமும் இல்லாமல் நான் எப்படி வாழ்வேன்?" என்றார்.
பக்கத்தில் இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சுலைமான் (அலை) தனது தந்தையிடம், 'இப்படி இல்லை, அல்லாஹ் வின் தூதரே!' என்று பணிவுடன் கூறினார். தாவூத் (அலை) 'அப்படியானால் எப்படி?' என்று கேட்டார்.
சுலைமான் (அலை) கூறினார்: 'ஆடுகளின் உரிமையாளரிடம் வயலைக் கொடுத்து, அதை கண்காணித்து உழைத்து மீண்டும் பழைய நிலைக்கு வரும் வரை திராட்சை கொடிகளை வளர்த்து வர வேண்டும். ஆடுகளை அவர் வயலின் உரிமையாளரிடம் கொடுத்து, திராட்சைகள் மீண்டும் வளரும் வரை ஆடுகளிலிருந்து அத்தோட்டக்காரர் பயனடையட்டும். பின்னர் நிலத்தை, காய்த்த திராட்சைகளோடு அவற்றின் உரிமை யாளரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும், அவர் ஆடுகளை அவற்றின் உரிமையாளரிடம் திருப்பிக் கொடுக்கவேண்டும்'. இதனால் இரு தரப்பினரும் தங்கள் நிரந்தர சொத்தை இழக்காமல் மீட்டுக் கொண்டார்கள்.
அல்லாஹ் கூறினான்: "(வழக்கை) சுலைமான் (அலை) அவர்களுக்குப் புரிய வைத்தோம்; மேலும் அவர்கள் இருவரில் ஒவ்வொருவருக்கும் ஞானத்தையும் அறிவை யும் வழங்கினோம். (21:79) அல்லாஹ் சுலைமான் (அலை) அவர்களைப் புகழ்ந்தான். ஆனால் தாவூத் (அலை) அவர்களைக் கண்டிக்க வில்லை.
இந்தத் தீர்ப்பு சுலைமான் (அலை) அவர்களை ஒப்பில்லா, ஞானம் மற்றும் நீதியின் உருவமாக நிறுவியது. இது "சுலைமான் ஞானி" (Sulaiman the Wise) என்ற பட்டத்தை அவருக்கு தந்தது.
ஆனால் அல்லாஹ் தாவூத் (அலை) அவர்களுக்கு பிரிதொரு இடத்தில் கூறினான்: "ஓ தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்; ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், மனோ இச்சையைப் பின் பற்றாதீர்;
மேலும் அல்லாஹ் கூறினான்: "நிச்சயமாக தாவூத் (அலை) மிற்கு நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு" என்று (38:25). ஸுலைமான் (அலை) கூறினார்: "நாங்கள் எல்லா விதப் பொருள்களி லிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும். (27:16)
الحمدلله
No comments:
Post a Comment