Monday, January 26, 2026

 

எவற்றின் தீமைகள் உம் இறைவனிடத்தில் வெறுக்கப்பட்டதாக இருக்கிறன?

  


                                     

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

பதில்

தவ்ஹீதில் உறுதியாக இருங்கள். (17:22)

ஷிர்க்கை தவிருங்கள. பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்;  இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (17:23)

இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; (17:24)

உறவினருக்கு, ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும்,

அவருடைய உரிமைகளைக் கொடுப் பீராக;  வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர்.(17:26)

வீண் விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்(17:27)

(உம்மிடம் பொருள் இல்லாமல் இருக்கும் போது அவர்களிடம் கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக! (17:28)

(உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; (17:29)

சிலருக்கு விசாலமாகவும், சிலருக்கு அளவாகவும் கொடுக்கிறான் – நிச்சயமாக அவன் தன் அடியார்களை நன்கு அறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். (17:30)

நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். (17:31)

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக் கேடானதாகும். மேலும், தீய வழியாகவும் இருக்கின்றது.(17:32)

  எந்த மனிதனையும் நியாயமான காரண மின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; (17:33)

நியாயமான முறையிலன்றி அநாதைகளுடைய பொருளை நெருங்காதீர்கள், இன்னும் வாக்குறுதியை நிறை வேற்றுங்கள்; (17:34)

மேலும் நீங்கள் அளந்தால், அளவைப் பூர்த்தி யாக அளவுங்கள்; சரியான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள். இதுவே நன்மையுடைய தாகவும், முடிவில் அழகானதுமாகும்.(17:35)

எதைப்பற்றி உமக்கு (த் தீர்க்க) ஞானமில் லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; (17:36)

மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது. (17:37)

இவையனைத்தின் தீமையும் உம் இறைவனிடத்தில் வெறுக்கப்பட்டதாக இருக்கிறது. (17:38)

الحمدلله

No comments:

Post a Comment

  Narrated Abu Huraira  (RA): I heard Allah's Messenger (SAW) saying." By Allah! I ask for forgiveness from Allah and turn to Him ...