Friday, January 16, 2026

 

9.எந்த  திருக்குர்ஆனின் வசனங்கள் இந்த படத்தை பார்த்தவுடன் நினைவிற்கு வருகின்றன?



السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

பதில்:

யூனுஸ் (அலை) நிச்சயமாக  அனுப்பப்பட்டவர் களில் நின்றுமுள்ளவர். நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளிந்தோடிய போது (க்கப்பலி லுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் - இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்). ஆகவே, பழிப்புக்கிடமான நிலை யில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்; ஒரு மீன் விழுங்கிற்று. (37: 139 -142).


அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்துஉன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்என்று பிரார்த்தித்தார். (21:87)

ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்துகொண்டிரா ட்டால்எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற் றிலேயே தங்கியிருந்திருப்பார். (37:143 -144)

நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம். (21:88)


அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை  வெட்ட வெளியில் போட்டோம். நாம் அவருக்கு மேல் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்(து நிழலிடுமாறு செய்)தோம்நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கதிகமானவர்களிடம் அனுப்பி வைத்தோம்அவர்கள் ஈமான் கொண்டார்கள்; நாம் அவர்களை ஒரு காலம் வரை சுகிக்கச் செய்தோம். (37:145 -148)

அல்லாஹீதாலா நம் நபி (ஸல்) மிடம் கூறுகின்றான்: தம் சமூகத்தவரை விட்டும் கோபமாக வெளியேறிய மீனுடையவரைப் போன்று (அவசரப்படா)மல் உம் இறைவனின் கட்டளைக்காக (நபியே!) நீர் பொறுத்திருப்பீராக; அவர் துன்பம் நிறைந்தவராகத் (இறைவனை) அழைத்த போது:அவனின் அருள் கொடையால் அவரை தேர்ந்தெடுத்துநல்லவர்களில்  ஆக்கினான். இல்லை எனில் அவர் பழிக்கப் பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார்.
(68:48 - 50)

الحمدلله


No comments:

Post a Comment

  Q-5                                                                          Ramzan Quiz السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَ...