Sunday, January 18, 2026

 

12. எந்த திருக்குர்ஆனின் வசனம் இந்த படத்தை பார்த்தவுடன் நினைவிற்கு வருகின்றது?  

       

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

பதில்:

 وَلَقَدْ خَلَقْنَا الإِْنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِھِ نَفْسُھُ وَنَحْنُ أَقْرَبُ إِلَیْھِ مِنْ حَبْلِ الْوَرِیدِ (சூரா காஃப், 50:16)

"நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும்; நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்)நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்." (50:16).


அல்லாஹ் நாம் பேசுவதை மட்டும் அறிவதில்லை. நாம் என்ன நினைக் கிறோம் என்பது கூட அவனுக்கு தெரியும். மனிதர்களே மனதில் உள்ளதை அறியும் போது நம்மை படைத்த இறைவன் அறியாமல் இருப்பானா?

இதைப் போலவே மற்ற சில இடங்களிலும் அல்லாஹ் திருக்குர்ஆனில் எடுத்தரைத்துள்ளான்:
“(
நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்என்று கூறுவீராக. (2:186).

"
ஒரு போரின் போது நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு உயர்ந்த இடத்தில் ஏறும்போதோ, மலையில் ஏறும்போதோ அல்லது பள்ளத்தாக்கில் இறங்கும்போதோ,  'அல்லாஹு அக்பர்' என்று குரல் எழுப்பிச் சொல்வோம். நபி (ஸல்) அவர்கள் எங்கள் அருகில் வந்து, " மக்களே! உங்கள் மீது கருணை காட்டுங்கள் (அதாவது, உங்கள் குரல்களை உயர்த்தாதீர்கள்), ஏனென்றால் நீங்கள் காது கேளாதவரையோ அல்லது இல்லாதவரையோ அழைக்கவில்லை,

மாறாக அனைத்தையும் கேட்பவரானபார்ப்பவர் அல்லாஹ்வை  அழைக்கிறீர்கள். நீங்கள் அழைக்கும் ஒருவர் உங்களில் விலங்கின் கழுத்தை விட நெருக்கமானவர்" என்று கூறினார்கள் என்று இமாம் அஹ்மத் பதிவு செய்துள்ளார்.

மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இமாம் அஹ்மத் பதிவு செய்துள்ளார்: "நான் என் அடியான் என்னைப் பற்றி நினைப்பது போல் இருக்கிறேன், அவன் என்னை அழைக்கும் போதெல்லாம் நான் அவனுடன் இருக்கிறேன்" என்று கூறினார்கள்."

الحمدلله

 

No comments:

Post a Comment

                                 தமத்துஉ   ஹஜ்                                                السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱلل...