Saturday, January 17, 2026

 

11. இந்த இரண்டு கடல்களோடு தொடர்புடைய திருக்குர்ஆனின் இரண்டு வசனங்கள் யாவை?

  


                            

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

பதில்:

 “அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோ டொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா.” (அர் ரஹ்மான், 55:19, 20)

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையு முள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானதுஇவ்விரண்டிற்கும் இடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தி இருக்கிறான்.” (25:53).

அலாஸ்கா வளைகுடாவில் இரண்டு கடல்கள் உள்ளன. ஒன்று பனி பாறைகள் உருகுவதாலும், ஆற்று நீராலும் வண்டல் மண்ணோடு கலந்து வரும் நீர். இது வெளிர் நிறத்தில் கனமற்று இருக்கும். இது உப்பில்லா நன்ணீர். மற்றொரு நீர் கனமாகவும், அடர்ந்த நிறத்தில் இருக்கும் உவர் நீர்.

இந்த இரண்டு நீரின் வெப்ப நிலையும் வெவ்வேறாக இருக்கும். இரண்டு நீரும் உப்பின் அளவுகளால் மாறுபட்டு இருப்பதால் கலக்காமல் தனித்தனியாக ஆழம் வரை இருக்கும். இதனால் இந்த இரண்டு நீரும் சேருமிடத்தில் இருக்கும் விளிம்பு நன்கு தெரியும். இந்த விளிம்பின்/தடுப்பின் இடம் நிலையானது அல்ல. ஆற்று நீரின் அளவையும் பனி உருகிய நீரின் அளவைப் பொறுத்து மாறும்.

அது போலவே;

வடக்கு ஜீட்லாண்ட் டென்மார்க்கில் பால்டிக் கடலும் வடக்கு கடலும் சேருமிடத்தில் வெள்ளை நுரை இருக்கும். இந்த விளிம்பு தடுப்பு போல் இரண்டு நீரும் கலக்காமல் தடுக்கும்.

●  கேப் அகுலாஸ் என்ற இடத்தில் அட்லாண்டிக் பெருங்கடலும் இந்திய பெருங்கடலும் சேருமிடத்தில் ஒரு தடுப்பு காணப்படுகிறது.

மற்றொரு தடுப்பு ஜிப்ரால்டர் என்ற இடத்தில் மத்திய தரை கடலும் அட்லாண்டிக் பெருங்கடலும் சேருமிடத்தில் உள்ளது.

இது போல் தடுப்புகள் ஆற்று நீர் கடலோடு கலக்கும் இடங்களில் எல்லாம் இருக்கும். நிறத்தில் மாறுபட்டு இல்லாததால் அவை கண்களுக்கு தென்படாது.

புரிந்து கொள்வோருக்கு இவை எல்லாம் அல்லாஹ்வின் அத்தாட்சிகள். “அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்று கூறுவர்). (3:191).

அல்லாஹ் கூறுகின்றான்: “பூமியில் நீங்கள் பிரயாணம் செய்து, அல்லாஹ் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுள்ளவன்என்று (நபியே!) நீர் கூறுவீராக. (29:20)

எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹ் செய்வீராக. (56:96).


الحمدلله

 

No comments:

Post a Comment

  Q-5                                                                          Ramzan Quiz السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَ...