3. ரம்ஜான் கேள்வி-பதில்
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
3. எந்த திருக்குர்ஆனின் அத்தியாயம் அதிக சத்தியங்களைக் கொண்டுள்ளது?
பதில்: அஸ்-ஷம்ஷ். அதில் 11 சத்தியங்களை அல்லாஹீ தாலா குறிப்பிட்டுள்ளான்.
وَ الشَّمْسِ وَ ضُحٰىهَا (1) وَ الْقَمَرِ اِذَا تَلٰىهَا (2) وَ النَّهَارِ اِذَا جَلّٰىهَا (3) وَ الَّیْلِ اِذَا یَغْشٰىهَا (4) وَ السَّمَآءِ وَ مَا بَنٰىهَا (5) وَ الْاَرْضِ وَ مَا طَحٰىهَا (6) وَ نَفْسٍ وَّ مَا سَوّٰىهَا (7) فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَ تَقْوٰىهَا (8) قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰىهَا (9) وَ قَدْ خَابَ مَنْ دَسّٰىهَا (10)
தமிழாக்கம்:
1. சூரியன் மீதும், அதன்
பிரகாசத்தின் மீதும் சத்தியமாக 2. பின் அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன்
மீதும் சத்தியமாக 3. சூரிய னால்) பகல் வெளியாகும் போது,
அதன் மீதும் சத்திய மாக 4. (அப்பகலை) மூடிக்
கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக 5. வானத்தின்
மீதும், அதை (ஒழுங்குற) அமைத்திருப்பதின் மீதும்
சத்தியமாக 6. பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக 7.ஆத்மா
வின் மீதும், அதை ஒழுங்கு படுத்தியவன் மீதும் சத்திய
மாக 8. அப்பால், அவன்
(அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தி னான். 9.
அதை (ஆத்மாவை)ப் பரிசுத்த மாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார். 10.ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்ட மாகத் தோல்வி
அடைந்தான்.
1. சூரியன்
2. சந்திரன்
3. பகல்
4. இரவு
5. வானம்
6. பூமி
7. ஆத்மாவும், அதை
ஒழுங்கு படுத்தியவனும்
8. தீமையை
9. நன்மையை பிரித்து உணர்த்தியவன்
10. ஆத்மாவைப் பரிசுத்தமாக்கியவர்
வெற்றியடைந்தார்.
11. அதைப் பாவத்தில் புகுத்தியவன் தோல்வி அடைந்தான்.
அல்லாஹீதாலா தான் படைத்தவற்றின் பெயர்
களைக் கொண்டு சத்தியம் செய்வதன் தத்துவம் என்னவென்றால்:
● அவன்மீது மனிதர்கள் விசுவாசமும்,
நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதற்காகவும்,
● அவன் கூறும் உண்மையின்
யதார்த்தத்தையும், நம்பகத் தன்மையையும் நாம்
அறிவதற்காகவும்,
● அவனது வசனங்களின் தீவிரத்தை உணரவும்,
● அவற்றை பரிபூரணமாக நம்பவும்,
● அவற்றை ஆராய்ந்து மேலும் அதனை உறுதியாக
நம்பவும்,
● நிராகரிப்பாளர்கள் அவற்றை புறக்கணிக்காமல் இருப்பதற்கும்,
● எல்லாம் வல்லவனான நம்மை படைத்தவனிடம்
பணிந்து போவதற்கும் தான்.
அல்லாஹ் சத்தியங்களுக்காக
தேர்ந்தெடுத்த பொருட்கள் மிகச்சிறப்பும் , முக்கியத்துவமும்
வாய்ந்த தாக அமைந்துள்ளன. அவற்றின் சிறப்புகளை, முக்கியத்துவங்களை,
பயன்களை, இரகசியங்களை நாம் உன்னிப்பாக கவனம்
செலுத்த நமக்கு கற்றுக் கொடுக்கின்றான். இந்நூதன குர்ஆனின் நடை (style)யை கொண்டு நமக்கு அவனுடைய
■ தனித்துவத்தையும்,
■ பெருந்தன்மையையும்,
■ பண்புகளையும்,
■ முழு ஒருமையையும்,
■ படைக்கும் ஆற்றலையும்,
■ குறைவிலா வடிவமைப்பையும்,
■ திறமையான திட்டங்களுடன்
■ எல்லாவற்றையும் பழுதற நிர்வகிக்கும் ஆற்றலையும்,
■ கியாமத் நாளை பற்றியும்,
■ உயிர்த்தெழுதல் பற்றியும் அறிய வைக்கின்றான்.
الحمدلله
No comments:
Post a Comment