Tuesday, September 8, 2026

 

20. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ


என்னுடைய அடியார்களே! இந்நாளில் உங்க ளுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்பட வும் மாட்டீர்கள்” (என்று முஃமின்களுக்கு அல்லாஹ்வின் அறிவிப்பு வரும்). இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, (முற்றிலும் வழிப்பட்டு நடந்த) முஸ்லிம்களாக இருந்தனர். நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்த வர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்). (அல்குர்ஆன்: 43:68 - 70).

ஈமான் கொண்டவர்கள் உள்ளத்தாலும் உடலாலும் அல்லாஹ்வின் சட்டங்களுக்குப் பணிந்து நடந்தார்கள். அல்-முஃதமிர் பின் சுலைமான் அவர்கள் தம் தந்தை கூறியதாக அறிவிக்கி றார்கள்: "மறுமை நாள் வந்து மக்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படும்போது, அச்சத்தில் ஆழ்ந்து விடாத மனிதர்களே இருக்க மாட்டார்கள். அப்போது ஓர் அழைப்பாளர் இவ்வாறு அறிவிப் பார்: "என் அடியார்களே! இன்றைய தினம் உங்களுக்கு எந்தப் பயமும் இல்லை, நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள்." இதைக் கேட்டதும்  முஃமின்கள் அனைவரும் நம்பிக்கையூட்டப் படுவார்கள். அல்லாஹ்வின் கருணைக்கு காத்திருப்பார்கள்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறைவ னிடமிருந்து பின்வருமாறு கூறினார்கள்: "என் வல்லமையின் மீது சத்தியமாக, என் அடியானிடம் நான் ஒருபோதும் இரண்டு அச்சங்களையோ அல்லது இரண்டு பாதுகாப்புகளையோ இணைக்க மாட்டேன். அவன் இவ்வுலகில் எனக்கு அஞ்சியி ருந்தால், மறுமை நாளில் நான் அவனைப் பாது காப்பேன். அவன் இவ்வுலகில் என்னிடமிருந்து பாதுகாப்பாக உணர்ந்திருந்தால், மறுமை நாளில் நான் அவனை அஞ்சும்படி செய்வேன். (ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 640)

எவரும் தமது செயல்களினால் மட்டும் சொர்க்கத்தில் நுழைந்து விட முடியாது; அல்லாஹ் வின் கருணையினாலும் கிருபையினாலும் மட்டுமே அது சாத்தியம். இருப்பினும், சொர்க்கத் தின் பல்வேறு அந்தஸ்துகளும் நிலைகளும் ஒருவரது நற்செயல்களுக்கு ஏற்பவே அமையும்.

ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார் கள்: "நேர்மையுடன் இருங்கள் (மற்றும் செயல் படுங்கள்); (சரியானதை) நெருங்கிச் செல்லுங் கள். மேலும் அறிந்து கொள்ளுங்கள்: உங்களில் எவரையும் அவருடைய செயல் (மட்டும்) சொர்க் கத்தில் நுழைவிக்காது. அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல், அது சிறிதளவே ஆயினும், தொடர்ந்து செய்யப்படும் செயலே ஆகும்." [ஹதீஸ் தரம் : ஸஹீஹ் ஸஹீஹுல் புகாரி : 6464]. ஆகையால் நிறைய நற்செயல்களை தொடர்ந்து செய்யுங்கள். அல்லாஹ் தன் வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவான்.

الحمدلله

No comments:

Post a Comment

  20. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஹதீஸ்: السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ “ என்னுடைய அட...