Monday, August 10, 2026

 

9. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான  விளக்கம் :

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ


وَكَمْ أَهْلَكْنَا مِنَ ٱلْقُرُونِ مِنۢ بَعْدِ نُوحٍۢ ۗ وَكَفَىٰ بِرَبِّكَ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرًۢا بَصِيرًۭا 

நூஹுக்குப்பின் எத்தனை தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம்? இன்னும், தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிபவனாகவும், பார்ப்பவனாகவும் உமது இறைவன் போதுமானவன்

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "ஆதம் (அலை) அவர்களுக்கும் நூஹ் (அலை) அவர்களுக்கும் இடையே பத்து தலைமுறைகள் இருந்தன. அந்த எல்லாக் காலத்திலும் மனிதர்கள் இஸ்லாத்தையே பின்பற்றினார்கள்." " நிராகரிப்பாளர்(குறைஷி)களே! நீங்கள் அவர்களை விட அல்லாஹ்வுக்கு அதிகப் பிரியமானவர்கள் அல்ல. மேலும் நீங்கள் தூதர்களிலேயே மிகவும் கண்ணியமான வரையும், படைப்புகளிலேயே மிகச் சிறந்தவரையும் நிராகரித்து விட்டீர்கள். எனவே, நீங்கள் தண்டனைக்கு மிகவும் தகுதியானவர்கள்" என்பதே (இந்த வசனத்தின்) பொருளாகும்.

الحمدلله

No comments:

Post a Comment

  10. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஹதீஸ்: السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ   فَأَقِي...