7 திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ
ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَلَيْسَ بِضَآرِّهِمْ شَيْـًٔا إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ
அல்லாஹ்வுடையை அனுமதியின்றி (ஈமான் கொண்டவர்களுக்கு) ஷைத்தானால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது; எனவே முஃமின்கள் அல்லாஹ்வையே முற்றிலும் நம்பியிருக்க வேண்டும். (அல்குர்ஆன் : 58:10)
குர்ஆனில் ஷைத்தானைப் பற்றி அல்லாஹு தாலா கூறுகிறான்:
ஷைத்தான் பரிகாசம் செய்பவன் (2:14 ); ஆணவம் கொண்டவன் (2:34); துஷ்டன் (4:117); நன்றி கெட்டவன் (17: 27); அர்ரஹ்மானுக்கு மாறு செய்பவன் (19:44 &18:50 ); விரட்டப்பட்டவன் (16:98); சிறுமை அடைந்தவன் (7:13); வழிதவறியவன் (7:175); சதி செய்பவன் (25:29); மற்றும் மனிதகுலத்திற்கு பகிரங்க விரோதி யாக இருக்கின்றான்.(2:168, 6:142, 12:5; 17:53, 28:15)
அவனுடைய செயல்கள்:
அவன் மக்களை மறக்கும்படிச் செய்கிறான் (6:68; 12:42 & 16:63); தன் சகாக்களைக் கொண்டு பயமுறுத்துகிறான் (3:175); மக்களுக்குள் பிணக்கை ஏற்யடுத்துகிறான் (17:27); அவர்களுக்கு அவன் வாக்களிப்பதெல்லாம் வெறும் ஏமாற்றேயன்றி வேறில்லை (17:64 & 4:120); (தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று) பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; (2:268); அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாக (6:43 & 8:48) காண்பித்து அவர்களை நேர்வழியில் (போக விடாது) தடுத்து விடுவான். (29:38).
அலங்காரமான பேச்சால் இரகசியமாக ஏமாற்றுவான் (6:112); அவன் உறவினர்களிடை யே பகைமையைத் தூண்டுகிறான் (12:100);
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக்
கொண்டும், சூதாட்டத்தைக்
கொண்டும் மக்களிடையே பகைமையையும்,
வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின்
நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் தடுத்து விடத்தான்; (5:91) அவன் (தன்னைப் பின்பற்றும்) தன்
கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய்
அவர்கள் இருப்பதற்காகவேதான். (35:6).
அல்லாஹ் அவனை சபிக்கப்பட்டவனாக வெளியேற்றினான்:
ஆதமுக்கு சிரம்பணிய அல்லாஹ் கட்டளையிட, அவன் மறுத்தான். (7:11) அதற்கு இறைவன், “இதிலிருந்து நீ
இறங்கி விடு; நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை; நீ நிந்திக் கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும்
ெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந் தோரில் ஒருவனாகி விட்டாய்” (7:13.)
உன் சகாக்கள் யாவரையும், உன்னைப்
பின்பற்று வோரையும், கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்” என்று அல்லாஹ் கூறினான். (7:18)
அல்லாஹ்விடம் அவன் அவகாசம் கொடுக்க வேண்டினான்:
(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” (7;14) என இப்லீஸ் வேண்டினான். (]அதற்கு அல்லாஹ்) “நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்” என்று கூறினான். (7:15)
அவன் அல்லாஹ்விடம் சவால் விடுத்தான்:
அதற்கு இப்லீஸ் “உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக நீ என்னை வழிதவறச் செய்ததால், நிச்சயமாக நான் உனது நேரான பாதையில் ஆதமுடைய சந்ததிகளுக்கு எதிராகக் காத்திருப்பேன். அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன். பின்னர் நான் அவர்களுக்கு முன்னாலும் பின்னாலும், அவர்களின் வலப்புறத்திலிருந்தும் இடப்புறத்திலிருந்தும் வருவேன். அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துபவர்களாக இருப்பதை நீ காணமாட்டாய்.” (7:16 &17) “உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நான் நிச்சயமாக எடுத்துக் கொள்வேன், நீ தேர்ந்தெடுத்த அடியார்களைத் தவிர” (38:82 & 83) என்றும், இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; (4: 118 & 119)
நியாயத்தீர்ப்பு நாளில் அவன் தன்னை பின்பற்றுபவர்களைக் கைவிடுவான்:
மனிதர்களுக்கு இடையேயான விஷயங்கள் தீர்க்கப்படும்போது, அவன் தன்னை பின்பற்றுபவர்களிடம் கூறுவான், “நான் உங்களுக்கு வாக்குறுதி அளித்தேன், ஆனால் நான் உங்களுக்குத் துரோகம் செய்துவிட்டேன். ஆனால் நான் உங்களை அழைத்ததைத் தவிர, உங்கள் மீது எனக்கு வேறு அதிகாரம் இல்லை, நீங்கள் எனக்குப் பதிலளித்தீர்கள். எனவே என் மீது பழி சுமத்தாதீர்கள்; உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்.” நான் உங்களுக்கு உதவ அழைக்கப்பட முடியாது, நீங்களும் எனக்கு உதவ அழைக்கப்பட முடியாது. நிச்சயமாக, நீங்கள் என்னை [அல்லாஹ்வுடன்] இணைத்ததை நான் மறுக்கிறேன். நிச்சயமாக, அநியாயம் செய்பவர்களுக்கு வேதனையான தண்டனை உண்டு." (14:22). மேலும் அவன் கூறுவான், "நான் உங்களை விட்டு விலகிவிட்டேன். நிச்சயமாக, அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கு நான் அஞ்சுகிறேன்." (59:16)
நியாயத்தீர்ப்பு நாளில் அவன் அல்லாஹ்விடம் கூறுவான்: "நான் அவர்களை வரம்பு மீறச் செய்யவில்லை - மாறாக, அவர்கள் தாங்களாகவே வெகுதூரம் வழிதவறிச் சென்றனர்." (50:27) ஆதலால் அல்லாஹ் ஆதமின் சந்ததியினருக்கு எச்சரிக்கை விடுக்கிறான்:
அல்லாஹ் "ஆதமின் சந்ததியினரே!" என்று நம்மை அழைத்து, கூறுகிறான்.
“ஷைத்தான் உங்களைச் சோதிக்காதிருக்கட்டும் (7:27); அவனை வணங்காதீர்கள் (36:60); அவன் உங்களைத் தடுக்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள் (43:62); அவனது சூழ்ச்சி பலவீனமானது (4:76); எனவே அவனது அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள் (2:168; 6:142; 24:21); ஏனெனில் அவன் ஒழுக்கக்கேட்டையும் அநியாயத்தையும் ஏவுகிறான் (24:21); அவர்களுக்கு ஆசைக் காட்டி, நீடித்த நம்பிக்கையை அளிக்கிறான் (47:25).
அவனது தூண்டுதலிலிருந்து விடுபடுவது எப்படி?
ஷைத்தானிடமிருந்து ஒரு தீய எண்ணம் வந்தால், அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள் (7:200). ஷைத்தானிடமிருந்து ஒரு தூண்டுதல் ஏற்படும்போது, அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறவர்கள் அவனை நினைவு கூர்கிறார்கள், உடனடியாக அவர்களுக்குப் புரிதல் ஏற்படுகிறது. (7:201). மேலும் குர்ஆன் ஓதும்போது, [முதலில்] அல்லாஹ்விடம் (16:98), "என் இறைவா, ஷைத்தான்களின் தூண்டுதல்களிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்." (23:97) என கூறுங்கள்.
முடிவாக அல்லாஹ் சுப்ஹானஹுதாலா கூறுகிறான்: "அல்லாஹ்வின் அருளும் அவனது கருணையும் இல்லாவிட்டால், ஒரு சிலரைத் தவிர, மனிதன் ஷைத்தானைப் பின்பற்றியிருப்பான்." (4:83). அவன் நம்பிக்கை கொண்டவர்களைத் துன்புறுத்தலாம், ஆனால் அல்லாஹ்வின் அனுமதி யின்றி அவன் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யமாட்டான். (58:10). ஷைத்தானின் செல்வாக்குகளிலிருந்து அல்லாஹுதாலா நம் அனைவரையும் பாதுகாத்து அரவணைப்பானாக!.
ஆஹதீஸ்
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஆதமுடைய மக்களில் (மனிதர்களில்) எவர் பிறக்கும்போதும், ஷைத்தான் அவனது இரு விலாப்புறங்களிலும் தனது விரலால் குத்துகிறான்; மர்யமின் குமாரர் ஈஸா (அலை) அவர்களைத் தவிர. (ஷைத்தான்) அவர்களைக் குத்தச் சென்றான்; ஆனால் (தடுப்புத்) திரையிலேயே குத்தினான்.” ஸஹீஹுல் புகாரி : 3286
ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ".......நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குள் இரத்தம் ஓடுவதைப் போன்று ஓடுகிறான். உங்கள் உள்ளங்களிலும் அவன் ஏதேனும் தீய எண்ணத்தை - போட்டு விடுவானோ என்று நான் அஞ்சினேன்" என்று கூறினார்கள். [ஸஹீஹுல் புகாரி : 3281]
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: உமர் (ரழி) அவர்கள் 'அல்-ஜாபியா'வில் எங்களுக்கு மத்தியில் உரை நிகழ்த்தினார்கள்: ………..ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்; (அவ்வாறு தனித்திருந்தால்) அவர்களில் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான். நீங்கள் ஜமாஅத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்; பிரிவினை யிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் தனித்திருப்பவனுடன் இருக்கிறான்; இருவரை விட்டும் அவன் வெகு தொலைவில் இருக்கிறான்………’ [ஜாமிஉத் திர்மிதீ : 2165]
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:"நிச்சயமாக இப்லீஸ் தனது சிம்மாசனத்தை நீரின் (கடலின்) மீது அமைக்கிறான். பின்னர் மனிதர்களைச் சோதிப்பதற்காகத் தனது படைகளை அனுப்பு கிறான். அவனிடம் பதவியில் மிக நெருக்க மானவன், குழப்பத்தை (பித்னாவை) மிகப்பெரிய அளவில் ஏற்படுத்துபவனே ஆவான்.அவற்றுள் ஒருவன் வந்து, 'நான் இன்னின்ன காரியங்களைச் செய்தேன்' என்று கூறுவான். அதற்கு இப்லீஸ், 'நீ ஒன்றும் செய்யவில்லை' என்பான். பிறகு மற்றொருவன் வந்து, 'இன்ன மனிதனை நான் விடவில்லை; அவனுக்கும் அவனது மனைவிக்கு மிடையில் பிரிவினையை ஏற்படுத்திவிட்டேன்' என்று கூறுவான். உடனே இப்லீஸ் அவனைத் தமக்கருகில் அழைத்து, 'நீ மிக நல்லவன்' என்று பாராட்டுவான்."(அறிவிப்பாளர் அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) இப்லீஸ் அவனைக் கட்டியணைத்துக் கொள்வான். [Translated from Sahih Muslim, 2813 b]
الحمدلله
No comments:
Post a Comment