Sunday, August 2, 2026

 

5 திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ

உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக!   மேலும், அதன் மேல் உறுதியும் கொண்டிருப்பீராக! (அல்குர்ஆன் : 20:132)

அப்துல்லாஹ் பின் புரைதா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நமக்கும் (முஸ்லிம்களுக் கும்) அவர்களுக்கும் (நிராகரிப்பாளர்களுக்கும்) இடையேயுள்ள உடன்படிக்கை தொழுகையாகும். எனவே, எவர் அதனை விட்டுவிடுகிறாரோ, அவர் (நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து) நிராக ரித்துவிட்டார்.'” ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ் ஸலாம் பதிப்பு) [சுனன் இப்னுமாஜா : 1079]

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக தமீம் தாரி (ரழி) பதிவு செய்துள்ளார்: மறுமை நாளில் ஓர் அடியான் கணக்குக் கேட்கப்படும் செயல்களில் முதன்மையானது அவனது தொழு கையாகும். அவன் அதை முழுமையாக நிறை வேற்றியிருந்தால், (அவனுடைய உபரியான தொழுகைகள்) அவனுக்கு உபரியாகவே (நஃபிலாகவே)ப் பதிவு செய்யப்படும். அவன் அதை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றால், அல்லாஹ் தன் வானவர்களிடம், ‘என் அடியானுக்கு ஏதேனும் உபரியான (நஃபில்) தொழுகை உள்ளதா எனப் பாருங்கள்?’ என்று கூறுவான். (அப்படி இருந்தால்), ‘அவன் கடமை யான தொழுகையில் குறை வைத்ததை, இதைக் கொண்டு பூர்த்தி செய்யுங்கள்’ என்று கூறுவான். பிறகு மற்ற செயல்களும் இவ்வாறே கணிக்கப் படும்.” ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு) [சுனன் இப்னுமாஜா : 1426]

الحمدلله

No comments:

Post a Comment

To get the highest status from Allah SWT