13. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ
الْهٰٮكُمُ التَّكَاثُرُۙ حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَ
செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை
(அல்லாஹ்வை விட்டும்) திசை திருப்பி விட்டது- நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும்
வரை. (அல்குர்ஆன் : 102:1 & 2)
அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்கள் அனைவரும் இவ்வுலகின் இன்பங்கள், அலங்காரங்கள், செல்வங்கள், பொருட்கள், பதவி, அந்தஸ்து, பிற மனிதர்கள் மீதான நேசத்தில் மூழ்கியிருக்கி றார்கள். இதனால் அவர்கள் மறுமையைத் தேடுவ திலிருந்தும் அதை விரும்புவதிலிருந்தும் திசை திருப்பப் படுகிறார்கள். மரணம் அவர்களை வந்தடைந்து, அவர்கள் மண்ணறை வாசிகளாக மாறும் வரை அலட்சியத்திலேயே இருந்து மறுமைக்காக சம்பாதிப்பதைத் தாமதப்படுத்து கிறார்கள், தவிர்க்கிறார்கள்.
ஆஹதீஸ்:
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார் கள்:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: "மனிதனுக்கு (ஆதமின் மகனுக்கு) தங்கம் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கு இருந்தாலும், தனக்கு இரண்டு பள்ளத்தாக்குகள் இருக்க வேண்டும் என்றே அவன் விரும்புவான். மண்ணைத் தவிர வேறு எதுவும் அவனது வாயை நிரப்பாது (அவனது பேராசையை மரணம் மட்டுமே முடிவுக்குக் கொண்டுவரும்). மேலும், பாவமன்னிப்புக் கோருபவரை அல்லாஹ் மன்னிக்கிறான் (அவனது தவ்பாவை ஏற்றுக் கொள்கிறான்)." [ஸஹீஹுல் புகாரி : 6439]
அபு ஹுரைரா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்: "அடியான் 'எனது செல்வம், எனது செல்வம்' என்கிறான். உண்மையில் அவனது செல்வத்தில் அவனுக்குரியவை மூன்றே மூன்றுதான்: அவன் உண்டு முடித்தது, அல்லது உடுத்திக் கிழித்தது, அல்லது தர்மம் செய்து அனுப்பி வைத்தது.[சுனநுந் நஸாயி, 3613 & ஜாமிஉத் திர்மிதீ, 2342 & 3354] அவை அல்லாத மற்றவை அனைத்தும் அவனை விட்டு நீங்கிவிடக் கூடியவை; அவற்றை அவன் மக்களுக்காக விட்டுச் சென்றுவிடுவான்.
[ஸஹீஹுஹ் முஸ்லிம், 2959 a and 1047 a]
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) கூறியதாக பதிவு செய்துள் ளார்கள்: "இறந்தவரை மூன்று விஷயங்கள் பின்தொடர் கின்றன. அவற்றில் இரண்டு திரும்பி விடுகின்றன; ஒன்று மட்டும் அவருடன் தங்கிவிடு கிறது. அவரது குடும்பம், செல்வம் மற்றும் அவரது அமல ஆகியவையே அவரைப் பின்தொடர் கின்றன. அவரது குடும்பமும் செல்வமும் திரும்பி விடுகின்றன; அவரது செயல் மட்டும் அவருடன் தங்கிவிடுகிறது. [ஸஹீஹுல் புகாரி 6514 மற்றும் ஸஹீஹ் முஸ்லிம் 2960]
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: “ஆதமு டைய மகன் முதுமையடைகிறான்; அவனுடன் இரண்டு (ஆசைகள்) வளர்கின்றன: செல்வத்தின் மீதான அன்பு மற்றும் நீண்ட ஆயுள் (மீதான ஆசை).” [ஸஹீஹுல் புகாரி : 6421 மற்றும் சுனன் இப்னுமாஜா,4234]
الحمدلله
No comments:
Post a Comment